என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்... (16)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 ஆக
2012
00:00

எங்கிருந்து கிடைக்கிறது, எவ்ளோ செலவாகுமோ தெரியாது. லாஸ்வேகாஸ் சூதாட்ட பேட்டையில், அவ்வளவு ஒளி வெள்ளம்! எந்தப் பக்கம் திரும்பினாலும், மின்னல் கண்களைப் பறிக்கும் வானவில்கள்.
ரோடுகளின் நடை பாதையில், அங்கங்கே அலமாரிகள் வைத்திருக்கின்றனர். அவற்றில் பத்திரிகைகள், புத்தகங்கள், வழிகாட்டிகள் என எல்லாமே, பெண்களை நோக்கி பயணிக்கின்றன.
பாக்கெட் சைசில் ஆரம்பித்து, மெகா வண்ணப் படங்களுடன் அவைகள் இலவசம். அதில் கிளப்கள், சூதாட்டம், நடனக் காட்சிகள் பற்றிய விவரங்கள், அத்துடன், "கால்கேர்ள்'களின் மனமும், மார்பும் திறந்த அறிமுகங்கள்!
டெலிபோன், இ - மெயில், விலாசம் எல்லாம் அப்பட்டம். பொது நடனம், பிரைவேட் என எல்லாவற்றிற்கும் விலைப்பட்டியல்... அத்துடன் மசாஜ்!
அழைத்தால் போதும். அரை மணி நேரத்தில் அறைக்கு டோர் டெலிவரி!
இந்தச் சஞ்சிகைகள் மட்டுமின்றி, ஒவ்வொரு கிளப் வாசலிலும் ஆட்கள் நின்று, விசிட்டிங் கார்டுகளை வினியோகிக்கின்றனர்.
அவற்றிலும் பெண்களின் முக்கால் நிர்வாணப் படங்கள் - போன் நம்பருடன்! அங்கு அந்தத் தொழில் அபாரம் போல.
நண்பனுக்குத் தாங்கவில்லை. விசிட்டிங் கார்டை வாங்கி, அதிலுள்ள நம்பருக்கு அழைக்க ஆரம்பித்தான்.
"ஏய்... வேணாம்... வம்பு!'
"என்ன வம்பு? சேவைக்காகத்தானே அவர்கள் இருக்கின்றனர். ஒரு வாரமாய் முதுகு வலி! மசாஜ் செஞ்சுக்கிட்டால் தேவலாம் போலிருக்கு...'
"முதுகுல டின் கட்டிடப் போறானுங்க...'
"நோ... நோ... அப்படியெல்லாம் பயப்பட வேண்டியதில்லை. தோ... பார்... எல்லாருமே ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற மாதிரி அரசாங்க ரிஜிஸ்தர் நம்பர்கள்...'
"சரி, என்னவோ செய்...'
தொலைபேசியில் உடனே வசீகர பதில், புன்னகை. தேன் தடவின குழைச்சல். அவள் குழைய... இவன் குழைய..."போதும் வாடா... சுத்திப் பார்ப்போம்...'
அவளிடம் முழு விவரம் பேசி, "நாளை அழைக்கிறேன்...' என்றான்.
"ஓய்... நிஜமாலுமே கூப்பிடறியா?'
"இல்லை... சும்மா!'
ஆனால், அவர்கள் அவனை சும்மா விடுவதாயில்லை. அமெரிக்காவில் உள்ள வரை, தினம் நான்கு முறை அழைத்துக் கொண்டேயிருந்தனர்.
அங்கே பன்னாட்டு வணிகம் போல, ஈபிள் டவர், பிரமிடு, பெட்ரோ டவர், சைனா டவர் என, முகப்பில் பிரமாண்டப்படுத்தி இருக்கின்றனர்.
அந்தப் பிரமாண்டம் ஒவ்வொன்றிலும் மூழ்கி வெளியே வந்து கொண்டிருந்த போது தான், அந்தத் தங்கத் தாமரைப் பெண்! "இப்படி ஒருத்தியை இதுவரை பார்த்ததில்லை. அத்தனை மினுமினுப்பு. ஜொலி ஜொலிப்பு!'
மேக் - அப்பாகத் தெரியவில்லை. ஒரிஜினல்! "இத்தனை அழகை வைத்து, இவள் ஏன் இந்தப் பிழைப்பிற்கு வர வேண்டும்; என்ன கஷ்டமோ அல்லது என்ன பிரச்னையோ?'
"அதெல்லாம் நமக்கேன்? ஆபீஸ் போகிற மாதிரி, இதைத் தொழிலாகக் கூட ஏற்றுக் கொண்டிருக்கலாம். படமெடுப்போமா? உன் குவைத் ஷேக்குக்கிட்ட காட்டினா மகிழ்வான்...'
தெருவில் விழுந்து கிடந்தவள் மேல், பச்சாதாபம் எழுந்தது. அவள் அதை பொருட்படுத்தாமல், "நெவர் மைண்ட்! டேக் ஸ்நாப்!'
நண்பன் அவளைப் பிடித்துத் தூக்கி சுவரில் முட்டுக் கொடுத்து நிறுத்தும் முயற்சியில், இன்ப அதிர்ச்சியாக அவள், அவன் மேல் சரிந்து, கட்டிக் கொள்ள, அந்த சைனாவைக் காணவில்லை. எஸ்கேப்!
அதற்குள் மூக்கு வியர்த்து, அந்தப் பக்கம் வந்த போலீஸ், "ஏய், வாட் ஈஸ் திஸ்?'
எங்களுக்கு வியர்த்துப் போயிற்று. எவனோ, அனுபவித்து விட்டு போனதற்கு, நமக்குத் தண்டனை கிடைக்கப் போகிறது! தேவையா? சொன்னா கேட்கிறானா இவன்?
"யார் இது?'
"தெரியாது சார்!'
"தெரியாதுங்கிறே, அப்புறம் கட்டிப்பிடிச்சு...'
போச்சு... போச்சு... நண்பனை காப்பாற்றியாக வேண்டும்! அவசரமாய், "சார், சைனா...' என்று விளக்கம் சொன்னேன். "அங்கிள்' நம்பின மாதிரி தெரியவில்லை.
அதற்குள் அவளே, "யெஸ்... ஹி ஈஸ் ட்ரூ!' என்றதும் தான், எங்களுக்கு மூச்சு வந்தது. "ஹெல்ப் டு புட் ஹர் இன் மை கார்!'
அவளை பார்சல் பண்ணி அனுப்பினதும் தான், எங்களுக்கு நிம்மதி.
"ஏய், போதும் வா... ரூமுக்கு போகலாம்...'
"ச்சே... நாம என்ன தப்பு பண்ணோம்? கீழே கிடந்தவளை அள்ளி போலீசில் ஒப்படைத்தோம். சேவை...'
"மண்ணாங்கட்டி! இங்கே தப்பு பண்ணலாம். குத்தமில்லை. சேவைன்னா குத்தம் போலிருக்கு...' என்று, ரோட்டில் அன்று புலம்பும்படி ஆயிற்று.
சந்தோஷமான, மெச்சும்படியான விஷயம்...
அமெரிக்காவில் சேவை அதிகம். அவற்றை மதிக்கின்றனர், ஊக்கப்படுத்துகின்றனர்; டொனேஷன் தருபவர்களுக்கு வரி விலக்கும் உண்டு.
நம்மவர்களும் கூட குறிப்பிடும் அளவில், சேவை பல ஆற்றி வருகின்றனர்.
வாஷிங்டன், நியூயார்க் சென்றபோது, நம் தமிழர்களின் சேவையை, கண் கூடாகப் பார்க்க முடிந்தது. வாஷிங்டனில் நண்பர் தியாகராஜனின் வீட்டில் தங்கியிருந்தோம். அதிகாலையில் பார்த்தால், அவரைக் காணவில்லை!
கேட்டால், மாரத்தான் ஓட்டத்திற்கு போனேன் என்றார். நம்மூரில் கல்விக்கு உதவ வேண்டி, மாரத்தான் ஓட்டம் மூலம், அங்கு நிதி திரட்டுகின்றனர்!
சாப்ட்வேர் இன்ஜினியரான அவர், சனி, ஞாயிற்று கிழமைகளில், ஹாயாய் சுற்றாமல், சேவைக்குச் செலவழிப்பதை வாழ்த்தத் தோன்றிற்று.
"ஐந்தாவது பில்லர்' என்ற அமைப்பை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தியாவில் அரசு ஊழியர்களின் லஞ்சத்தை ஒழிக்கவும், எதிர்க்கவும், அந்த அமைப்பு போராடி வருகிறது. ஜீரோ ரூபாய் நோட்டு அடித்து, கூட்டங்களில் வினியோகிக்கின்றனர்.
என்.ஆர்.ஐ.,களை ஒன்று திரட்டி, கிராமப்புறங்களின் மேம்பாட்டுக்காக ஐ.ஆர்.எஸ்., அமைப்பு பாடுபட்டு வருகிறது. சென்னை, திருச்சி, திருநெல்வேலி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கன்னியாகுமரியில் இதன் கிளைகள் செயல்படுகின்றன.
இந்த அமைப்பின் நிறுவனர் விஜய் ஆனந்த் மற்றும் குழுவினரை வாஷிங்டனில் சந்தித்த போது, அவர்களது நோக்கத்தின் தாக்கத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.
யு.எஸ்.,சில் இவர்கள், "எய்ம்ஸ்' எனும் அமைப்பை ஏற்படுத்தி, நிதி திரட்டி, இந்தியாவின் கல்விக்கு உதவுகின்றனர். நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டுவர். அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, அமெரிக்காவில் இந்திய தூதரகத்தின் முன் கூடி, ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
அமெரிக்கா முழுக்க, தமிழ் சங்கங்களும் சிறப்பாக இயங்கி வருகின்றன. நியூயார்க் தமிழ்ச் சங்கம், அதில் முன்னணி வகிக்கிறது. தமிழை கற்று தருவது, நம் கலாசார, பாட்டு, நாடகம், நாட்டியம் என, எல்லாமும் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன.
பத்திரிகையாளரும், யு.என்., தொடர் பாளருமான பிரகாஷ் எம்.சாமி, நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் தலைவர். இவர், அங்கு மருத்துவ உபகரணங்கள் வினியோகித்து வரும், ஜான் ஜோசப் எனும் தமிழரை அறிமுகப் படுத்தினார்.
வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான். நம்மூரில், "டயாலிசிஸ்' செய்வதற்கு உள்ள செலவைக் குறைத்து, கிராமப்புறங்களில் இதை இலவசமாய் செய்யும் முயற்சியில் இறங்கி இருப்பவர்.
இந்தியாவில் ஆண்டுக்கு, நான்கு லட்சம் பேர், கிட்னி பாதிப்புக்கு உள்ளாகின்றனர். வாரம் ஒருமுறை டயாலிசிஸ் செய்தால், ஆயுளை நீட்ட முடியும். ஆனால், அதன் செலவு அதிகம் என்பதால், பலரும் முன் வருவதில்லை. அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிறார் ஜான்.
டயாலிசுக்கான உபகரணங்களை, பெங்களூரில் உருவாக்கி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது இவரது நிறுவனம். பெரும்பாலான அரபு நாடுகளில், சர்ச்சுகள் இருந்தாலும், கோவில்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை. ஆனால், அமெரிக்காவில் சர்ச்சுகள் மட்டுமின்றி, மசூதிகள், கோவில்கள் எல்லாம் சுபிட்சம்.
தொடரும்.

என்.சி. மோகன்தாஸ்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vijai - pittsburgh,யூ.எஸ்.ஏ
20-ஆக-201220:13:59 IST Report Abuse
vijai Hat-off to 5th pillar team,Thiyagarajan continue your good work
Rate this:
Share this comment
Cancel
ராசு - Coimbatore,இந்தியா
19-ஆக-201210:54:00 IST Report Abuse
ராசு சார் ஜான் ஜோசப் எண்ணை தந்து உதவ முடியுமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.