"பல்லவி தர்பார்' - ரசிகர்களுக்கு நல்ல விருந்து
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஆக
2012
00:00

ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சபாவும், கர்நாடிகா அமைப்பும் கை கோர்த்து இசையில் பல சிறந்த விஷயங்களை ரசிகர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த இரு அமைப்புகளின் சமீபத்திய சாதனையாக மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கலையரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்த "பல்லவி தர்பார்' சிறப்பு நிகழ்ச்சியில் பல்லவி சக்கரவர்த்தியாக முடி சூட்டிக் கொண்டார் மூத்த சங்கீத வித்வான் ஜே.வெங்கட்ராமன்.
கர்நாடக சங்கீதத்தில் மனோதர்மம் என்று போற்றப்படும் முக்கிய சிறப்பம்சமாக பல்லவி பாடுவது என்பது புகழ் பெற்றதொரு விஷயம். பழைய மன்னர்கள் ஆட்சியில் பல்லவி பாடுவதில் வல்லவர்கள் ராஜ சபையை அலங்கரிப்பது வழக்கமாக இருந்தது. யார் வேண்டுமானாலும் சங்கீதம் பாடி விடலாம் குரல் இருந்தால். ஆனால், பல்லவி பாட நல்ல லய ஞானமும் வேண்டும். திறமை இருப்பவர்கள் மட்டுமே இதில் சிறகடிக்க முடியும்.
மகா வைத்யநாத அய்யர், பட்ணம் சுப்ரமண்ய அய்யர் போன்ற இசை மேதைகள் 128 அட்சரங்களை வைத்து சிம்ம நந்தன தாளம் இயற்றி புகழ் சேர்த்த வரலாறும் உண்டு. ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா, கர்நாடிகாவின் இந்த பல்லவி தர்பாரில் விருது பெற்ற மூத்த வித்வான் ஜே.வெங்கட்ராமன் பல்லவி பாடும் நுணுக்கங்களை மிக அருமையாக, தெளிவாக, விரிவாக விளக்கியதோடு ஒரு அருமையான பல்லவியை மிக நெருடலான மாளவி ராகத்தில் திச்ர ஜம்பை, மிச்ர நடையில் அமர்க்களமாக கையாண்டு பாடியது முதல் தர விருந்து.
பல்லவி பிரியர்களுக்கு ஆனந்த கூத்தாடும் என்ற வரிகளுடன் துவக்கி ரசிகர்களை ஆனந்த கூத்தாட வைத்தார் தன் இசைத் திறமையால்.

பாலக்காடு ஸ்ரீராம்ஸ்ரீராம் பல்லவி கேட்க படு ரசமாக இருந்தது. இவர் ஒரு பன்முக கலைஞர். கீ-போர்டு, தாள வாத்தியங்கள், இசை பாடகர், சாகித்ய கர்த்தா இப்படி நிறைய சாமர்த்தியங்களுடன் இசை சாதனை புரிந்து வரும் பாலக்காடு ஸ்ரீராம் "படையப்பா' திரைப்படத்தில் பாடி, வெள்ளித்திரை ரசிகர்களையும் கவர்ந்தவர்.
பல்லவியை முதலில் சண்முகப்ரியா ராக ஆலாபனையை செய்து, அதில் சுருதி வேதங்களாக கானடா, அம்ச நாதம் போன்ற ராகங்களைத் தொட்டு அருமையாக தாளம் பாடி பின்பு "நீதான் கமல பாத துணையே நின் தாள் கதியே' என்ற பல்லவியை திச்ர நடை, இரண்டு களையில் திரிகாலம் பாடி, சதுச்ரம் இரண்டு தடவை, கடைசி குறைப்பில் திச்ரம், இப்படி பாடி சங்கீர்த்தன நடையில் பல்லவியை கையாண்டு கோசலம், அம்சா நந்தி, தோடி இப்படி ராக மாலிகைகளில் ஸ்வரங்களைப் பாடியது கேட்க சவாலாக இருந்தது. நல்ல திறமை உடையவர் என்பதை நிரூபித்தார் ஸ்ரீராம். நாகை ஸ்ரீராம் அருமையாக அனுசரணை புரிந்தது கூடுதல் மெருகுடனும், திருவனந்தபுரம் பாலாஜி மிருதங்க வாசிப்பும் பலே ஜோர்.

சங்கீதா சிவகுமார்சங்கீதா சிவகுமாரின் பல்லவி கச்சிதம், நயம். இளம் இசை விதூஷி சங்கீதா சிவகுமாருடைய பல்லவி கேட்க படு க்ரிஸ்ப். ஒரு இடத்தில் கூட ஒரு சிறு குறையும் இல்லாமல் பாடியது மன நிறைவாக இருந்தது. திச்ர திருபுடை நாலு களை பல்லவியை பைரவியில் கச்சிதமாக, ராகம், தாளம் பாடிய பின்பு மிக விஸ்தாரமாக கையாண்டு நிரவல், ஸ்வரங்களுடன் கணீரென்று பளிச் குரல் நயத்துடன் வழங்கியது அருமையாக இருந்தது. பக்க வாத்தியமாக டாக்டர் ஹேமலதா வயலின் வாசிப்பு படு ஜோர். நாளுக்கு நாள் வாசிப்பில் மெருகு கூடிக் கொண்டிருக்கிறது என்று பாராட்டலாம். பல்லவியில் லயம் முக்கிய அம்சம். கல்லிடைக்குறிச்சி சிவகுமாரின் வாசிப்பு படு நயம். கச்சிதமாக இருந்தது.
- மாளவிகா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G S SANKARAN - BesantNagarChennai,இந்தியா
22-ஆக-201204:45:24 IST Report Abuse
G S SANKARAN Sangeetha madam always gives a dedicated and a music of involvement. I think her husband Mr.T.M. Krishna (who can be conferred a Doctorate - if anybody listens to his lectures on carnatic music - they t to the above conclusion) gives her solid support and guidance in music which makes her to stand in good stead.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.