புண்ணியம் தேடிக்கங்க!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 ஆக
2012
00:00

மனிதர்களின் மனதில் அன்பு, பாசம் என் றெல்லாம் உண்டு. இதற்காக மனிதர்கள் தன் சொந்த சுகங்களைக் கூட விட்டு விடத் தயாராக இருக்கின்றனர்; இது தான் உலக விசித்திரம்.
ஒரு தகப்பன் தன் பிள்ளைக்காக, தன் விருப்பங்களையும், சுகத்தையும் கூட விட்டு விடுகிறார். தான் எப்படி இருந்தாலும், தன் பிள்ளை சுகமாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார். (பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு, பிள்ளைகள் ஆனந்தமாக இருப்பதுண்டு. இது வேறு விஷயம்.) பிள்ளைக் காக, தகப்பன் தன் சொந்த காரியங்களைக் கூட விட்டு விட தயாராக இருக்கிறார்.
ஜரிகை போட்ட புது வேஷ்டி வாங்கி வந்து, தகப்பனுக்குக் கொடுத்து கட்டிக் கொள்ள சொல்கிறான் பையன். "எனக்கு எதுக்குடா இந்த ஜரிகை வேஷ்டியெல்லாம்? நீ கட்டிக் கொள். எனக்கு ஏதாவது பழைய வேஷ்டி இருந்தாலே போதுமே...' என்கிறார் தந்தை.
அப்பாவுக்காக, புதிதாக ஒரு ஜோடி செருப்பு வாங்கி வந்து, போட்டுக் கொள்ள சொல் கிறான் பையன். "எனக்கு எதுக்குடா இவ்வளவு விலையில் புது செருப்பு? நீ வாங்கிக் கொள். எனக்கு உள்ளே பழைய செருப்பு இருக்கே... அது போதும். அதற்கு வார் அறுந்திருக்கிறது. அதனாலென்ன? அதை தைத்துப் போட்டுக் கொண்டால் போதும். புது செருப்புப் போட்டுகிட்டு நான் எங்கே போகப் போறேன்?' என்கிறார்.
ஒரு பாக்கெட் திருநெல்வேலி அல்வா வாங்கி வந்து அப்பாவிடம் கொடுக்கிறான் பையன். "எனக்கு இதெல்லாம் எதற்குடா? அந்தக் காலத்தில் நான் நிறைய அல்வா சாப்பிட்டிருக்கேன்; நீ, எடுத்துக்கோ... பசங்களுக்குக் கொடு...' என்கிறார். "அல்வாவா... கொண்டா கொண்டா...' என்று கேட்பதில்லை. பென்ஷன் பணத்தை வாங்கி, முழுசாக பையனிடம் கொடுத்து விடுகிறார்.
தனக்கு மூக்குப் பொடிக்கு காசு வேண்டுமானால் கூட, பையனிடம் கேட்க வேண்டிய நிலைமை; இதற்காக வருத்தப் படுவதில்லை அவர். பையன் கொடுத்தால் உண்டு; இல்லையேல், பக்கத்து வீட்டு கிழவரிடம், இரவல் மூக்குப் பொடி ஒரு சிட்டிகை வாங்கிப் போட்டுக் கொள்கிறார்.
ஒருவர் வருகிறார்...
"சார்... கோவில் கும்பாபிஷேகம். உங்களால் முடிந்ததை கொடுங்கள், ரொம்ப புண்ணியம்' என்கிறார். இவர், "சார்... எல்லாம் என் பையன் பொறுப்பு. அவன் இருக்கும்போது நான் எதுவும் கொடுக்கக் கூடாது; அவன் வந்ததும் கேட்டுப் பாருங்கள்; கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்...' என்கிறார்.
பையனுக்காக, கோவிலுக்கு கொடுக்கக்கூட இவருக்கு சுதந்திரமில்லை. காரணம், பையன் மேலுள்ள பாசம். இந்த அன்பையும், பாசத்தையும் இறைவன் மீது வைத்து, தான் சம்பாதித்த பணத்தை தன் நன்மைக்காக, தனக்கு புண்ணியம் தேடிக் கொள்ள பயன்படுத்தக் கூடாதா? செய்ய மாட்டார் அல்லது மனம் வருவதில்லை.
பகவானுக்காக செலவழித்தால் புண்ணியம் உண்டு; பையனுக்கு சேர்த்து வைத்தால், என்ன புண்ணியம் கிடைக்கும்? பையன் ஜாலியாக செலவு செய்வான்; அதைப் பார்த்து இவர் சந்தோஷப்படுவாரா, துக்கப்படுவாரா? எல்லாம் அவன் செயல்!
***

ஆன்மிக வினா-விடை!கோவில் கலசத்தில் வரகு தானியத்தை நிரப்புவது ஏன்?
கோவில் கலசங்களில், எக்காலத்திலும் கெட்டுப் போகாத வரகு தானியத்தை நிரப்புவது, இடி, மின்னல் தாக்குதலில் இருந்து கோபுரங்களை காக்கும் சக்தி இதற்கு உண்டு என்பதால் தான்.
***

வைரம் ராஜகோபால்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gokzz - Pollachi,இந்தியா
30-ஆக-201208:52:54 IST Report Abuse
Gokzz கௌசல்யா அம்மா, நான் இன்னும் சின்ன பையன் தானுங்க.. :-) மகன் அப்படினே கூப்பிடலாம் :-)) - Gokul Shankar S...
Rate this:
Share this comment
Cancel
subha - sharjah,இந்தியா
29-ஆக-201214:32:44 IST Report Abuse
subha குட் ஸ்டோரி ரியலி சூப்பர்ப் .
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - denhelder,நெதர்லாந்து
29-ஆக-201201:30:39 IST Report Abuse
GOWSALYA அன்பு சகோதரர் கோகுல் மிக நன்றி......உங்க வாக்குப் பலிக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Gokzz - Pollachi,இந்தியா
28-ஆக-201212:50:42 IST Report Abuse
Gokzz கௌசல்யா அம்மா, தாங்கள் பிள்ளைகளால் கஷ்டபடுகிறீர்கள் என்று நீங்கள் செய்த சில பதிவுகளில் அறிகிறேன்...என்ன சொல்வது என்று தெரியவில்லை.... கண்டிப்பாக அவர்கள் மனம் மாற வேண்டும் என்று கடவுளை வேண்டிகொள்கிறேன்...எனது வேண்டுதல் அனைத்து பெற்றோர்களுக்காவும்.... -Gokul Shankar S..
Rate this:
Share this comment
Cancel
sirajudeen - Ramnad,இந்தியா
28-ஆக-201211:57:57 IST Report Abuse
sirajudeen நல்ல கருத்து
Rate this:
Share this comment
Cancel
A Natarajan - Sembiyakkudi,இந்தியா
28-ஆக-201211:46:52 IST Report Abuse
A Natarajan Sir My father late Shri Arunachalam Chettier is an example of supreme sacrifice. In his sacrifice i am leading a beautiful life. He has educated me to PG level and now i am a senior Class I officer in central Govt. There is no words to express his love towards me and the family. I want he should take birth in my family as my grand son to shower in all the love and affection he has shown to us. Parental love ... you cant express and you can feel from them
Rate this:
Share this comment
Cancel
ரமேஷ். - svenborg,டென்மார்க்
28-ஆக-201200:50:58 IST Report Abuse
ரமேஷ். நான் என்னோட அப்பா அம்மா வுக்காக எல்லாத்தையும் விட்டு அவர்களோட சந்தோசத்துக்காக இருக்கிறேன் அதில் எனக்கு மிக்க சந்தோசம்
Rate this:
Share this comment
Cancel
சப் - பெங்களூர்,இந்தியா
27-ஆக-201218:03:17 IST Report Abuse
சப் எதுக்குப்பா கோவிலுக்கெல்லாம் கொடுத்துக்கிட்டு? நேரடியா ஆதீனதோட பேருல சொத்து எழுதி வச்சிடலாமே? மதுரை ஆதீனம் அனுபவிக்கட்டும் . நம்ம புள்ளைங்க பிச்சை எடுத்தா என்ன இல்லேனா என்ன?
Rate this:
Share this comment
Cancel
Lady - சென்னை,இந்தியா
27-ஆக-201213:49:37 IST Report Abuse
Lady பெதவங்களுகாக பையன் எவ்ளோவோ விட்டு தறாங்க. அத எந்த பெத்தவங்க புரிஞ்சிக்கிறாங்க? கல்யாணம் ஆனா பொண்ணு வைத்து பிற பிள்ளைங்க முக்கியம் பையன் அண்ட் மருமகளும் செலவு செய்ய தானே தேவை படறாங்க,இத யாரு தட்டி கேட்பா.... அதுக்கு நானே உதாரணம். இது உண்மை. .
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - denhelder,நெதர்லாந்து
27-ஆக-201202:09:30 IST Report Abuse
GOWSALYA இப்படிப் பிள்ளைகளுக்கு எல்லாமே என்று இருந்துவிட்டுக் கடைசியில ...[ பணத்துக்கு இல்லை,பாசத்துக்காக ] கஷ்டப் படுபவர்களில் நாங்களும் ஒருவர் என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.