நல்லாட்சி மலரட்டும்!...
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 ஆக
2012
00:00

ஆக., 29 - ஓணம் பண்டிகை

இருப்பதைக் கொண்டு திருப்தியடைய வேண்டும். மூன்றடியானால் என்ன... மூன்று லட்சம் அடியாய் இருந்தால் என்ன! வாழ்வதற்கு என்ன தேவையோ அது போதாதா! அதிகமாய் சேர்ந்தால் ஆணவம் ஏற்படும். அந்த ஆணவம், மற்றவர்களை அழித்து, முடிவில் தன்னையே அழித்து விடும். இதுதான் மகாபலி சக்கரவர்த்தியின் வரலாறு உணர்த்தும் பாடம்.
திருமாலின் ஐந்தாவது அவதாரம் வாமனம். இந்த அவதாரத்தில், குறுகிய மனித வடிவம் எடுத்து, நீண்டு நெடிதுயர்ந்து, உலகளந்த விக்ரமன் ஆகி, மகாபலி மன்னனை ஆட்கொண்டார். இந்த அவதாரத்தில், இன்னொரு விசேஷமும் உண்டு. தசாவதாரத்தில், இரண்டு அவதாரங்கள், ஒரே குடும்பத்துக்காக உருவானது. நரசிம்மனாய் பிரகலாதனுக்கும், வாமனனாய் அவரது பேரன் மகாபலிக்கும் அவர் அவதரித்தது குறிப்பிடத்தக்கது.
விரோசனன் என்ற அசுரனுக்கும், அவனது மனைவி தேவிக்கும் பிறந்த மகனே மகாபலி. இவன் ஒரு யாகம் செய்து, மின்னலென பறக்கும் குதிரை, தேர், சிங்கக்கொடி, வில், இரண்டு அம்பறாத்தூளி (அம்புகள் வைக்கப் பயன்படுவது), ஒரு கவசம் ஆகியவற்றை பெற்றான். இவனது தாத்தா பிரகலாதன், ஒரு கவசத்தை அளித்தார். குரு சுக்ராச்சாரியார், வெற்றிச்சங்கு ஒன்றை வழங்கினார். எவராலும் அழிக்க இயலாத இந்த ஆயுதங்களை வைத்து பூலோகம், தேவலோகம், பாதாளம் உள்ளிட்ட எல்லாவற்றையும் ஜெயித்தான். இவனது ஆட்சி நல்லாட்சியாக அமைந்தது. இல்லை என்ற சொல் மக்களிடம் இல்லை. இதன் காரணமாக, தன்னை விட்டால் ஆளில்லை என்ற ஆணவத்துடன் திரிந்தான்.
தேவர்களின் தாயான அதிதிக்கு, தன் பிள்ளைகளான இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், மகாபலிக்கு அடிமையாகி பட்டபாடு சகிக்கவில்லை. அவள் விஷ்ணுவை பிரார்த்தித்தாள். அவளுக்கே மகனாகப் பிறந்து, தேவர்களை மீட்பதாக வாக்களித்தார். அதன்படியே அவள் வயிற்றில், திருவோண நட்சத்திரம் துவாதசி திதியில் பிறந்தார். பு@ராகிதர் வடிவில் மகாபலியை தேடிச் சென்றார்.
புரோகிதர் என்ற சொல்லில் உள்ள, புரோ என்பது, மேலே அல்லது இனி என பொருள்படும். இதம் என்றால் நல்லதை எடுத்துரைப்பது. அதாவது, எதிர் காலம் நல்லதாக இருக்க யோசனை சொல்பவர் புரோகிதர்.
திருமால் புரோகிதர் வடிவில் வந்ததற்கு காரணம் உண்டு. மகாபலி எல்லா வகையிலும் நல்லவன் தான், திறமைசாலி தான்; ஆனால், ஆணவம் அவன் கண்ணை மறைக்கிறதே! அதை அழித்து, அவனுக்கு இனி வரும் காலம் நல்லதாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இப்படி ஒரு வடிவில் வந்தார். அது மட்டுமல்லாமல், முந்தைய அவதாரத்தில், தன் பக்தன் பிரகலாதன், தன் மீது செலுத்திய பக்திக்கான நன்றிக்கடனை, அவனது சந்ததிக்கும் தருகிறார். இதனால் தான், ஒருவர் இன்று செலுத்தும் பக்தியும், செய்யும் நற்செயல்களும், அவனது தலைமுறையையும் பாதுகாக்கும் என்கின்றனர்.
மகாபலிக்கு புரோகிதராக இருந்தவர் சுக்ராச்சாரியார், அவர், "வந்திருப்பது எல்லாம் வல்ல ஹரி, அவர் கேட்பதை மட்டும் கொடுத்து விடாதே...' என்று எடுத்துச் சொன்னார்.
மகாபலியோ, "இறைவனே ஒரு பொருளை யாசித்து என்னிடம் வந்திருக்கிறான் என்றால், நானல்லவோ உயர்ந்தவன், நீர் சொல்வதைக் கேட்க மாட்டேன்...' என குரு நிந்தனை செய்தான். குருவுக்கு மகாகோபம். "உன் செல்வத்தையெல்லாம் இழப்பாய்...' என சாபமிட்டார். பின், விஷ்ணு ஈரடியால் உலகளந்து, மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து ஆட்கொண்டது தெரிந்த கதை.
"அந்தணரே... வெறும் மூன்றடி நிலம் கேட்கவா இவ்வளவு தூரம் வந்தீர்... உலகத்தையே என் வசம் வைத்திருக்கிறேன். அவ்வளவையும் கேட்டாலும் தருகிறேன்...' என்றான் மகாபலி.
அதற்கு வாமனர், "ஒருவனுக்கு தேவை என்னவோ, அதைத் தான் கேட்க வேண்டும்...' என்றார்.
இதன்மூலம், இருப்பதைக் கொண்டு திருப்தியடைய வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை, திருமாலும், தன்னைப் போல் மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டுமென மகாபலியும், உலகத்துக்கு உணர்த்தி யிருக்கின்றனர். இனியேனும் நாட்டில் நல்லாட்சி மலர, வாமனர் அருள் செய்யட்டும்.
***

தி. செல்லப்பா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சராசரி மனிதன் - சொர்க்கம்,இந்தியா
27-ஆக-201216:11:55 IST Report Abuse
சராசரி மனிதன் போதும் என்ற மனம் உள்ளவர்கள் என்றும் நிம்மதியோடு வாழ முடியும்
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan K B - Bangalore,இந்தியா
27-ஆக-201210:12:49 IST Report Abuse
Ramakrishnan K B Ethu Ungal idathil..."Kutthupaatu Pappa". The message was really very good for all the parents. The manner which the parents treating the kid will reflect in future, by that time complaining or any bad impession of their children will not good. Better we can treat now, by singing naturally because cell phones or other devices are harmful especially to small children, Songs like "Bharathiyar songs, Bakthi Songs, kadavul Vazathu, Thirukural..etc". And need to explain the meaning of the songs too. So that, kid will become extremely cultred responsibility citizen even not making any mild mistakes to the nation.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.