என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்... (17)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 ஆக
2012
00:00

அமெரிக்கா கிறிஸ்தவ நாடு என்றாலும், அங்கே எல்லாருமே இன்புற்றிருக்க முடிகிறது. மசூதிகளுக்கு பஞ்சமில்லை. ரம்ஜான், ஈத், முறையான தொழுகை என, எல்லாம் சுமூகம்.
அவரவர்களின் காரியத்தை, அவரவர்கள் பார்த்துக் கொண்டு போகும் கலாசாரம் இருப்பதால், பிறரின் விருப்பு, வெறுப்பு, உணர்வுகள், நம்பிக்கைகளில் தலையிடுவதில்லை.
தீபாவளி, பொங்கல், நவராத்திரி, ஹோலி என, அமெரிக்கா முழுக்க, கோவில்களில் கோலாகலமாக இருக்கும்.
நியூஜெர்சியில், குஜராத்தியினர் வாழும் பகுதியில், ஒரு சாலை முழுக்க இந்திய கடைகள்!
அங்கே நவராத்திரி சமயம், இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும், போலீஸ் வேன்கள் மின்னல் கொளுத்திக் கொண்டு, சாலையை மறித்திருந்தன. சாலைக்குள் திருவிழாக் கூட்டம்!
ஏதும் பிரச்னையா என்று பார்த்தால், நவராத்திரிக் கொண்டாட்டம். ஆட்டம், பாட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பாம்!
இரவு முழுக்க, தசரா பண்டிகையின் உற்சவம், உற்சாகம்! அவர்களும் எதிர்ப்பதில்லை; நம் ஆட்களும் சளைக்காமல் வேஷம் கட்டி ஆடுகின்றனர்.
"நவராத்திரி வந்து விட்டாலே, எங்களுக்கு சாப்பாட்டு பிரச்னை எழுவதில்லை...' என்கிறான், பேச்சிலராக இருக்கும் நண்பன் அருண்.
"அக்கம் பக்கம் கோவில்களில், கம கமவென வெண் பொங்கல், புளியோதரை என வழங்குவர். போதும் போதாதற்கு, எப்போதும் யாராவது அன்னதானம் செய்து கொண்டிருப்பர். அதனால், எங்களையும் அறியாமல், அந்த நாட்களில் பக்தி முத்தி விடுவதுண்டு!'
நியூஜெர்சி ஏறக்குறைய, இந்திய பகுதி போலத்தான். அதனாலோ என்னவோ, நகரம் முழுக்க அழுக்கு. தெருக்களில் குப்பைக் கூளங்கள்! பராமரிப்பில்லா சாலைகள், இடிந்து காரை பெயர்ந்த கட்டடங்கள்.
"நமக்கு எங்கு போனாலும், இந்த அவலம் தானா? அமெரிக்காவில் கூட இப்படி ஒரு நகரமா?' என்று வியப்பு தோன்றுகிறது. இந்தியப் பகுதி என்பதால் அலட்சியப்படுத்துகின்றனரா...
இல்லை... எவ்வளவு பராமரித்தாலும் நம்மாட்கள் இப்படி மாற்றி விடுகின்றனரா? தெரியவில்லை. மொத்தத்தில் சாக்கடை, கொசுக்கடி நிறைந்த அசுர நகரம்!
இந்திய பகுதிகளில் சரவணபவன், உடுப்பி உணவகங்களுக்கு, அங்கே ஏக வரவேற்பு.
தமிழ் பத்திரிகைகளெல்லாம் பெரும்பாலும், "ஆன்-லைன்' தான்! ஆனால், "தென்றல்' எனும் மாத இதழ், வண்ணமயமாய் கலை, இலக்கியத் தரத்துடன் அங்கே வினியோகிக்கப்படுகிறது.
கோவில்கள் என்று பார்த்தால், அமெரிக்கா முழுக்க அங்கங்கே அமர்க்களம்! எதிர்ப்புத் தெரிவிக்காமல், அரசும் இடங்களை ஒதுக்கித் தருகிறது.
நல்ல பசுமையான, மரங்கள் அடர்ந்த பகுதியில், இடத்தைச் செப்பனிட்டு, பளிங்குப் பதித்து, கோவில்களை உருவாக்கி இருக்கின்றனர்; உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஜெயின், வெங்கடாசலபதி, சிவா - விஷ்ணு, முருகன் என, இஷ்ட தெய்வங்களுக்குப் பஞ்சமில்லை. அதுவும், அமெரிக்காவில் தெலுங்கர்கள் அதிகம் என்பதால், வெங்கடாசலபதி எல்லா இடங்களிலுமே, செழிப்பாய் இருக்கிறார்.
மெரிலாண்ட் பகுதியில், அடுத்தடுத்து சிவா - விஷ்ணு, முருகன் கோவில்கள் பிரபலம்.
முருகன் எங்கும், கோவனாண்டி தான் போலிருக்கிறது. அங்குள்ள குருக்கள் கூட, "வசூல்' போதாமல், ஏக்கமாய் இருப்பது தெரிந்தது. முருகன் கோவிலில் நிகழ்ச்சி அரங்கம், சாப்பாடு என, எல்லா வசதிகளும் உண்டு.
ஆடிக் கிருத்திகை பண்டிகைகளுக்கெல்லாம், நம்மவர்கள், "ஆன்-லைனில்' முன்பே, பதிவு செய்து பணம் செலுத்தி விட்டால், அபிஷேகங்கள் அதுபாட்டிற்கு நடக்கும்.
நாங்கள் போன போது, குழந்தை ஒன்றிற்கு அங்கே மொட்டை போட்டுக் கொண்டிருந்தனர்.
விசாரித்த போது, அந்தத் தம்பதியர் இருவருமே சாப்ட்வேர் இன்ஜினியர்கள், கிரீன் கார்டுக்கு மனு போட்டு, அது எந்த நேரமும் வந்து விடலாம் என்பதால், ஊருக்குப் போக முடியாத சூழல்.
"குழந்தைக்கு முடி நிறைய வளர்ந்து, கண்ணை மறைக்கிறது. வேறு வழியில்லாததால், சாம்பிளுக்குக் கொஞ்சம் முடி எடுத்து வைத்துவிட்டு, இங்கே மொட்டை போடுகிறோம்...' என்றனர்.
குலதெய்வம் எங்கிருந்தால் என்ன... நம் கலாசாரம் காக்கப்படுவதில் மகிழ்ச்சி. இந்த மொட்டை வைபவத்திற்குத் தேதி குறித்து, குருக்கள் மந்திரித்து, அருகிலுள்ள பகுதியில் இதற்காகவே சிறப்புச் சலூன்கள் உள்ளன.
அங்குள்ள அக்காக்கள், மிக நேர்த்தியாக, குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டி, நோகாமல் மழித்து விடுகின்றனர். குழந்தைகளுக்கு காது குத்து கூட, ஜோராய் நடக்கிறது. பொற்கொல்லர்கள் போல, டாக்டர்களே நவீன ஆயுதங்களுடன் வந்து துளையிடுகின்றனர்.
மெரிலாண்ட் சிவா - விஷ்ணு கோவில், ரொம்ப விஸ்தீரணம். ஏக பளபளப்பு! கட்டடங்கள், கார் பார்க், பளிங்குத் தரை எல்லாமே அற்புதம்!
வஞ்சனையில்லாமல் விநாயகரில் ஆரம்பித்து, அத்தனை சாமிகளையும் அங்கு வைத்திருக்கின்றனர். பிரசாதம் மட்டுமின்றி, மலிவு விலையில் கிடைக்கும் நம் சிற்றுண்டி, நாவுக்கும், வயிற்றுக்கும் சுகம்.
சனி, ஞாயிறு என்றால், அந்தந்தப் பகுதியிலுள்ளவர்கள், கோவிலுக்கு வந்து தரிசித்து, அங்கேயே சாப்பாட்டையும் முடித்து கிளம்புகின்றனர்.
அதுவும், பிரிட்ஜ் வாட்டர் ஏரியாவில் உள்ள விஷ்ணு கோவில், மிகப் பிரபலம். அங்கு பூஜை செய்யும் குருக்களுக்கு, பக்கத்திலேயே சகல வசதிகளுடனும், "குவார்ட்டர்ஸ்' கட்டி வைத்திருக் கின்றனர்.
நவராத்திரி கொலு, தகதக காளை, நாகம் என பிரமிக்க வைக்கிறது. கோவிலைச் சுற்றிக் காண்பித்த பின், நண்பர்கள் சரவணனும், அங்கே நியூயார்க் பிரபல வங்கியில் பணிபுரியும் அசோக்கும், "இங்கே வா... உனக்கு ஒரு விசேஷம் காட்டுகிறோம்...' என்று அங்கிருந்த ரெஸ்டாரென்டிற்கு அழைத்துப் போயினர்.
டோக்கன் வாங்கி, வழக்கம் போல க்யூ!
"அங்கே பார் கிச்சனில்...'
"பெரிசு பெரிசாய் தோசைக்கல்! இட்லி, வடை, பூரி என வாசம் தூக்குது!'
"அதில்லை...தோசை போடும் ஆளைப் பார்!'
"அட, அது அமெரிக்கன்!'
அவன் என்ன லாவகமாய் தோசை வார்க்கிறான்! பிரமாதமாய் கையில் தட்டி, துளையிட்டு வடை! மசால் கமகமக்கிறது. அடை, அவியல், பிரியாணி, பொங்கல், ஆப்பம், இடியாப்பம் - குருமா என்று, நம் அயிட்டங்கள் எல்லாவற்றையும், அவர்கள் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.
நாமோ, எல்லாவற்றையும் கோட்டை விட்டு விட்டு, பீசா, பர்கர், சப், மேக்டொனால்ட் என அலைகிறோம்!
தொடரும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (22)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிரபு - நியூஜெர்சி,இந்தியா
01-செப்-201200:09:27 IST Report Abuse
பிரபு அடடே.. முதலில் தோசை சுடுபவர் அமெரிக்கன் அல்ல. தோசை சுடுபவரும் வடை சுடுபவளும் Mexico காரர்கள். அனைத்து இந்திய உணவகங்களிலும் இதை காணலாம். மிக குறைந்த ஊதியத்திற்கு அவர்கள் தன் கிடைப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
ஸ்ரீநிவாஸ் - எடிசன்NJ,யூ.எஸ்.ஏ
31-ஆக-201201:55:56 IST Report Abuse
ஸ்ரீநிவாஸ் மேலே குறிப்பிட்டுள்ள புகைப்படம் bridgewater கோவிலில் எடுக்கப்பட்டது. இந்த கோவிலில் புகைப்படம் எடுக்கக் கூடாது என பெரிய எழுத்துக்களில் எழுதி வைத்தும் ஆசிரியர் இதை எப்படி படம் எடுத்தார். இந்தியர்களை குறை சொன்னால் கோவிக்கும் நண்பரே! மற்ற நாட்டுக்காரர்கள் இப்படித் தான் உள்ளனரா?
Rate this:
Share this comment
Cancel
கணேஷ் - சண்பிரான்சிஸ்கோ,இந்தியா
30-ஆக-201204:43:12 IST Report Abuse
கணேஷ் One thing unique about Indians are no matter what they blame fellow Indians and India. In particular this is common in fellow Tamils. who is from Tamil Nadu. Telugu folks may fight but in front of others they never give up their own people no matter what. I had friship with all cultures of India and world wide. This is common. The example is the command above. The above said behaviors about Indians are really happening in all communities. We don&39t notice since they are other ethnic. Chinese never blame china or their people in front of others but Indians do. Let us say good about us. Coming to the point of this article the Author still thinks that people don&39t know about USA and he lives in 1970ies. This is internet world please write some thing new to people. USA is the country has no religion and it never belongs to one ethnic, USA is all about they believe in God and respect the LAW which is supreme in the country. Freedom of speech to all. Not like Gulf , you are a slave to an Arabi MR.NCM.
Rate this:
Share this comment
Cancel
ராமன் - சென்னை,இந்தியா
29-ஆக-201221:11:09 IST Report Abuse
ராமன் நான் கைதட்டல் வாங்க இங்கு எழுதவில்லை. ஆகவே என்னை திட்டுவதால் பயன் இல்லை. இன்னம் ஒரு உதராணம் சொல்லுகிறேன். அங்கு TACO BELL என்ற ஒரு பிரபலமான மெக்சிகன் விரைவு உணவகம் உண்டு. அங்கு வழங்கப்படும் உணவு வகைகளுக்கு தொட்டு கொள்ள வித விதமாக Sauce வைத்து இருப்பார்கள். நாங்கள் இந்த "பிரபலமான" ஊரில் இத்தகைய உணவகம் ( இது நிஜமாகவே அதி விரைவு உணவகம் ) சென்ற பொழுது அந்த Sauce packet கள் காணவில்லை. கேட்டால் தான் தந்தார்கள். ஏன் என்று மேனேஜரிடம் கேட்ட பொழுது சொன்னது - இந்தியர்கள் வந்து ஒரு ஐட்டம் வாங்கி விட்டு இது என்னமோ இலவசம் என்பது போல அள்ளி செல்லுவார்கள். எங்களுக்கு கட்டு படி ஆகவில்லை - ஆகையால் எது வேண்டும் என்று வந்து கேட்டால் அது ஒன்று இரண்டு packet தருவோம். இதனால் "திருட்டு" குறைந்து விட்டது. இந்தியர்கள் வருவதும் குறைந்து விட்டது. " - வெறும் Sauce பக்கெட் "லவட்டி" மொத்த இந்திய சமூகத்துக்குமே அவ பெயர். Condiments அள்ளி செல்லும் இவர்களை என்ன சொல்லுவது? இந்தியர்களின் cream என்றா என்ன? அத்துடன் அதை சொன்ன மேனேஜர் - drum rolls please - ஒரு இந்தியர் அதுவும் தெலுங்கர். இன்று எப்படி என்று தெரியாது. ஆனால் கெடுத்த பெயரை மீட்பது கடினமே. இந்தியர்கள் திறமையானவர்கள், அறிவாளிகள் என்ற இமேஜை முந்தைய ஜெனேறேஷன் சம்பாதித்து வைத்திருந்தார்கள். அதனை அழித்து ஒழித்ததில் ஐ.டி. துறையினரின் (எல்லோரும் அல்ல ஆனால் பெரும்பான்மை ) பங்கு பெரிது. மறுக்க முடியாதது.
Rate this:
Share this comment
Cancel
Gokzz - Pollachi,இந்தியா
29-ஆக-201208:33:06 IST Report Abuse
Gokzz ஸ்ரீநிவாஸ் - எடிசன்நியூஜெர்சி, " பொதுவாகவே இந்தியர்களுக்கு civic sense என்பது கிடையாது" இந்த கருத்தை ஏற்று கொள்கிறேன்...நானும் நேரில் பார்த்த, கேள்வி பட்ட விஷயம் தான்...Paris நான் சென்று இருந்த போது இந்தியர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்றேன்....நமது சென்னை அங்காடி தெருவில் சென்றது போல ஒரு பிரமை..சிக்னல் போட்டு இருக்கும் போதே ஓடி கடக்க பலர் முயன்றனர்..எல்லாம் நம்மவர்கள் தான்...அட கொக்கா மக்கா, இங்க வந்தும் இப்படி தான் ரகளை பண்ணிட்டு இருக்கீங்களா என்று நினைத்தேன்...அந்த பகுதி சற்று சுத்தம் இல்லாமலும் இருந்தது...அதுவே மற்ற பகுதிகளில் நம்மவர்கள் எத்தனை பவ்யமாக நடந்து கொள்கிறார்கள்.... வெளி நாட்டினர் முகம் சுளிப்பதில் தவறு இல்லை...இது பெரும்பாலும் அனைத்து இந்தியர்களும் பாகுபாடின்றி செய்யும் காரியம் தான், வேலைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை...ஆந்திரகார்கள் பாதி பேர் தவறான bio data வைத்து சேர்ந்தவர்கள் தான்..எனது கம்பெனியில் கூட background verification வைத்து பலரை துரத்தி விட்டனர்...என் கண் முன்னே நடந்த விஷயம்... - Gokul Shankar S..
Rate this:
Share this comment
Cancel
Gokzz - Pollachi,இந்தியா
29-ஆக-201208:13:25 IST Report Abuse
Gokzz ராமன், நீங்கள் சொல்வதை பார்த்தtல் சிக்கனமாக இருப்பது கொலை குற்றம் என்பது போல அர்த்தம் வருகின்றது...நீங்கள் சொல்லும் ஆட்கள் எல்லாம் பெரும்பாலும் அங்கேயே இருப்பவர்கள் ( gas station attant, grocery store helpers, hotel employees )... அதனால் அவர்கள் life ஸ்டைல் அவர்கள் நாட்டினை ஒத்து இருக்கும்...நாம் இங்கு வளர்ந்த விதம் எப்படி? Ours is saving Economy theirs is Sping Economy,,,so it differs... அதற்காக அவர்களை அழுக்கு என்று திட்டுவது, காசு சேர்க்கும் கூட்டம் என்பது நாகரிகமற்ற கருத்து... அழுக்கு அனைவரிடமும் உள்ளது....IT துறையில் மட்டும் அல்ல....ஆனால் ஒன்று பார்த்தீர்களா, வெளி நாடுகளில் சிக்கனமாக இருக்கும் IT மக்கள் தான் இந்தியாவில் பெரும் செலவாளிகளாகவும், தகுதிக்கு மீறி கடன் வாங்குபவர்களாகவும் , ஆடம்பரம் செய்பவர்களாகவும் உள்ளனர்.... IT துறையில் வேலை செய்து கொண்டு apartment வாங்கவில்லை என்றால் அது ஒரு கொலை குற்றம்..இது போன்ற குறைகள் எல்லாரிடத்தும் உண்டு / எல்லா துறையிலும் உண்டு, Pls don&39t generalize... - Gokul Shankar S..
Rate this:
Share this comment
Cancel
நிர்மல் - USA,இந்தியா
29-ஆக-201203:24:38 IST Report Abuse
நிர்மல் ராமன் அவர்களே, எதற்கெடுத்தாலும் IT இல் இருப்பவர்களை பற்றி பெனாத்தகூடாது. go and see the Business news in dinamalar, "வெளிநாடு வாழ் இந்தியர்களின் வங்கி டெபாசிட் 50 சதவீதம் உயர்வு", maximum from IT employees only. "கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு... இந்திய குடும்பங்களின் சேமிப்பு 7.8 சதவீதமாக சரிவு" இதிலிருந்து என்ன தெரிகிறது, NRI கள் சிக்கனமாகவும், இந்தியாவில் இருப்போர் செலவாளிகலாகவே மாறி விட்டனர். இதுவே உண்மை நிலவரம். அது என்ன ஆ, உ ன, IT IT நு குதிகிறீங்க, நாங்க அவ்வளவு செலவு பண்றோம், ஊதாரிய இருக்கோம் நு. மிஞ்சி போன்னா, "pub கு போவாங்க, சுற்றுலா செல்வோம், ஹோட்டல் ல போய் நல்லா சாப்பிடுவோம்", இது தானே பண்றோம். நாங்க ஒன்னும் TASMAC ல தினம் தினம் Q ல நிக்கல, டெல்லி, மும்பை, அஸ்ஸாம் ல பெண்களை இழிவு படுத்தல. இந்தியன் மானத்த யார் கப்பல் ல ஏத்துறது நு இப்ப நீங்களே சொல்லுங்க.
Rate this:
Share this comment
Cancel
ஸ்ரீநிவாஸ் - எடிசன்நியூஜெர்சி,யூ.எஸ்.ஏ
28-ஆக-201222:35:13 IST Report Abuse
ஸ்ரீநிவாஸ் இன்னொன்றும் இங்கு சொல்ல ஆசைப்படுகிறேன். பொதுவாகவே இந்தியர்களுக்கு civic sense என்பது கிடையாது. நான் இருக்கும் பகுதி இந்தியர்கள் அதிகம் இருக்கும் பகுதி. இவர்கள் எங்கெல்லாம் அதிகமோ அங்கு சுத்தம் வெகு தூரம். garbage சரியாக dispose செய்யாமல் இருப்பது, இரவில் கத்தி அக்கம்பக்கதினரை தூங்க விடாமல் செய்வது, adhuthavan வீடு வாசலில் காரை நிறுத்தி அவன் காரை வெளி வரமுடியாமல் செய்வது என்று செய்வார்கள். நானே பல முறை இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளேன். போலீஸ் ஐ கூப்பிடாலும் அவர்களும் இப்பொழுது இவர்களால் வெறுத்துப் போய் "these guys never change" என்று கூறி வேறு இடம் மாறிப் போக சொல்கிறார்கள். ட்ரெயினில் நடந்து கொள்ளும் விதம் பற்றி சொன்னால் அசிங்கம். கதவு அருகில் நின்று கொள்வது, கத்தி செல்போனில் பேசுவது என்று சீன் இருக்கும். அடுத்தவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். நியூ யார்க் trenton எக்ஸ்பிரஸ் கு என் அமெரிக்க நண்பர்கள் வைத்திருக்கும் பெயர் மும்பை எக்ஸ்பிரஸ் - அதன் commotion காரணமாக.
Rate this:
Share this comment
Cancel
ஸ்ரீநிவாஸ் - எடிசன்ஞ்,யூ.எஸ்.ஏ
28-ஆக-201221:58:28 IST Report Abuse
ஸ்ரீநிவாஸ் IT துறையில் தான் நானும் இருக்கிறேன். சென்ற 16 ஆண்டுகளில் நான் சந்தித்த பெரும்பாலான ஆந்திரர்கள் இவ்வாறு செய்வதால் எல்லோருக்குமே கெட்ட பெயர். ப்ரீயாக கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ரெசூம் (biodata)வில் ஆரம்பித்து செய்யும் எல்லாவற்றிலும் ஊழல். கோயிலுக்கு சென்றால் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்றாலும் திருட்டுத்தனமாக செல்போனில் எடுப்பது, கத்திப் பேசி அக்கம் பக்கத்தினரை படுத்துவது எல்லாம் உண்டு. வேலையிலும் syndicate அமைத்து மற்றவர்களை குழி பறிப்பது. இவர்களால் தான் ஒட்டுமொத்த IT துறையினருக்கு கெட்ட பெயர். ஏனென்றால் IT துறையில் நல்ல வழியிலோ / குறுக்கு வழியிலோ நுழைந்து அதிகம் உள்ளது ஆந்திரர்களே.
Rate this:
Share this comment
Cancel
Krishnas - நியூஜெர்சி,யூ.எஸ்.ஏ
28-ஆக-201220:45:04 IST Report Abuse
Krishnas மேலும் பிரிட்ஜ்வாட்டர் (Bridgewater ) ஏரியா இல்லை அதுவும் மேரிலன்ட் மாநிலம் இல்லை. பிரிட்ஜ்வாட்டர் நகரம் ( டவுன்ஷிப் ), நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ளது ( கட்டுரையின் நியூ ஜெர்சி நகரம் !!!). நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் நகரில் தான் ஸ்ரீவெங்கடேஸ்வரா கோவில் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.