அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 ஆக
2012
00:00

கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலையில் பணியாற்றும் விரிவுரையாளர் ஒருவர், அந்துமணியின் அதி தீவிர வாசகி. ஏதோ, ஒரு அசைன்மென்டுக்காக ஒரு பல்கலையில் இரண்டு நாள் தங்க வேண்டி இருந்திருக்கிறது.
அங்கே தங்கிய அனுபவம் பற்றி எழுதிய கடிதத்தில், பல்கலைக்கழக வளாகம் ஒரு பாம்புக் கூடம் என எழுதி இருந்தார்.
கடிதத்தில் பாம்பு பற்றி குறிப்பிட்டதும், "திட்டி விடம்' என்ற பாம்பு பற்றி நினைவில் வந்தது...
பாம்புகளில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. விஷம் உள்ளவை, விஷமில்லாதவை என்று அறிஞர்கள் பிரித்திருந்தாலும், நமக்கு எந்தப் பாம்பைக் கண்டாலும் பயம்தான்.
எல்லா பாம்புகளுக்கும் பல்லில் தான் விஷம் இருக்கும்; ஆனால், "திட்டி விடம்' என்ற பாம்புக்கு கண்ணிலேயே விஷமாம். அதன் பார்வை நம் மேலே பட்டாலே போதும்... விஷம் தாக்கிய துன்பம் உண்டாகுமாம்.
இந்த பாம்பு, முற்காலத்தில் பாலைவனங்களில் வாழ்ந்ததாக கவிஞர்கள் கூறுகின்றனர்.
மாசிலா கற்புடைய மங்கையரை, இந்தத் திட்டி விடப் பாம்புக்கு உவமையாகப் புலவர்கள் கூறியுள்ளனர்.
இந்தப் பாம்பை பற்றி கம்பரும் கூறி இருக்கிறார். சீதைக்கு தவறு இழைத்த ராவணனை நோக்கி, "திட்டியின் விடமன்ன கற்பியின் செல்வியை விட்டிலையே!' என்று கேட்கிறார் கும்பகர்ணன்.
இவ்வகைக் கொடிய பாம்பு இந்தக் காலத்தில் வாழ்வதாகத் தெரியவில்லை. விலங்கியல் நிபுணர்கள் யாருக்கேனும் இது பற்றித் தெரிந்தால், எழுதுங்களேன்!
***

பாராட்டிப் பேசுவது ஒரு கலை என்றால், கீழ்வெட்டாக இன்சல்ட் செய்வதும் ஒரு கலைதான். "சபியன் லூயி' தொகுத்துள்ள, "இரண்டாயிரம் இன்சல்ட்டுகள்' என்ற புத்தகத்திலிருந்து இதோ சில:
* அவனுக்கு தன் அழகைப் பற்றி ரொம்ப கர்வம். எக்ஸ் - ரே எடுக்கப்பட்ட போது, நெகடிவை, "டச்' செய்யும்படி டாக்டரிடம் கூறினான்.
* அவன் காதலுக்குப் போட்டியே கிடையாது - அவனை, அவனே நேசிப்பதால்.
* அந்த விருந்தாளி வளவள என்று ஆயிரம் வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டிருக்கிறான், ஒரு வார்த்தையைத் தவிர. அது: போய் வருகிறேன்.
* அவன் வீட்டை காலி செய்த போது வீட்டுக்காரர் கண்ணீர் விட்டார்; ஆறு மாத வாடகை பாக்கி.
* அவன் எல்லா விஷயத்திலும் தலைகீழ் தான். அவன் செய்யும் காரியங்கள், கூடா ஏடாமாகவோ, மாறு ஏறாகவோ தான் இருக்கும்.
* அவன் தலையில் பத்து செகண்டுகளுக்கு கூட எதுவும் நிற்காது - தலைவலியைத் தவிர.
* அந்த சினிமாவிற்கு வந்தவர்கள், "படம் மோசம்' என்று முணுமுணுக்கவில்லை; காரணம், அவர்களுக்கு தூக்கத்தில் பேசும் பழக்கம் இல்லை.
* பணத்திற்கும், அவனுக்கும் ஒத்துக் கொள்வதில்லை; அவனுக்குப் பணம் கடனாகக் கொடுங்கள். அவனுடைய ஞாபக சக்தி சேதம் அடைந்து விடும்.
*அப்பா அவனுக்கு சொத்து வைத்துவிட்டுப் போயிருப்பதால்தான் கல்யாணம் செய்து கொண்டான் என்பதை அவன் மறுக்கிறான். அப்பாவுக்குப் பதிலாக வேறு யார் வைத்து விட்டுப் போயிருந்தாலும் அவனுக்கு சம்மதமே.
* அவன் காரியங்களை அரை, குறையாக செய்ய மாட்டான்; காலும், அரைக்காலுமாகத் தான் செய்வான்.
* "என் அழகே எனக்கு சொத்து' என்கிறாள்; அவளுக்கு நிச்சயம் சொத்து வரி விதிக்க மாட்டார்கள்.
* சிலருக்கு தினமும் வியாதி வராவிட்டால், உடம்பு சரியாக இருக்காது.
* அவனை இரண்டாவது தடவை பார்த்தபோது தான் காதலித்தாள்; முதலில் பார்த்தபோது அவன் பணக்காரன் என்று அவளுக்குத் தெரியாது.
* அவனிடம் எல்லாத் தீர்வுகளுக்கும் பிரச்னை இருக்கும்.
* அவன் பொய் சொல்கிறானா என்பதை கண்டுபிடிக்க எளிய வழி - அவன் உதடு அசைகிறதா என்று பாருங்கள்.
* அவள் அழகாகத்தான் பாடினாள். அதை நாம் ரசிக்க முடியாததற்கு இரண்டு காரணம்... ஒன்று நம் வலது காது; இன்னொன்று இடது காது.
***

தற்செயலாக நடக்கும் சில விஷயங்கள் தான் சில நேரங்களில் பெரிய வெற்றியை, கொண்டு வருகிறது. எவ்வளவோ திட்டமிட்டு செய்யும் சில செயல்கள், சில நேரங்களில் தவறாகிப் போய் விடுவதும் உண்டு.
இப்படி ஒரு தற்செயல் சம்பவம், டைரக்டர் ஸ்ரீதர் வாழ்வில் நிகழ்ந்து, ஒரு பாடல் கிரேட் ஹிட் ஆன நிகழ்ச்சி பற்றி கட்டுரை ஒன்றில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
அது:
"காதலிக்க நேரமில்லை' படத்திற்காக பாடல் காட்சி கலந்தாலோசனைக்காக, கண்ணதாசன் வந்திருந்தார். கதாநாயகன், கதாநாயகியின் தந்தையை பார்த்து, கேலியாக ஒரு பாடல் பாடுவது மாதிரி காட்சி. அந்தக் காட்சிக்கு ஒரு பாடல் எழுதித் தரும்படி
கண்ணதாசனிடம் சொன்னேன்.
அருகில் இருந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் அவர், "விஸ்வநாதா! வேலை வேணும்; உடனே டியூன் போடு!' என்றார். உடனே, விஸ்வநாதனும், வேடிக்கையாக, "விஸ்வநாதன்! வேலை வேணும், விஸ்வநாதன் வேலை வேணும்!' என்று பாடியபடியே டியூன் போட்டார்.
கண்ணதாசன், "இதையே பல்லவியாக வைத்துக் கொள்ளலாமே! அது சரி; படத்தில் கதாநாயகியின் தந்தை பெயர் என்ன?' என்று என்னிடம் கேட்டார். அப்போது தான் எனக்கே தெரிந்தது. அந்த நேரம் வரை, நான் கதாநாயகியின் தந்தை பாத்திரத்திற்கு பெயரையே வைக்கவில்லை என்பது!
உடனே, கண்ணதாசனிடம், "விஸ்வநாதன் என்றே அந்தப் பாத்திரத்திற்குப் பெயர் வைத்து விடுகிறேன். நீங்கள், "விஸ்வநாதன் வேலை வேணும்!' என்றே பல்லவி எழுதி விடுங்கள்...' என்றேன். அப்படியே எழுதினார். அந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆனது!
***

விழா ஒன்றில், முன்னாள் தலைமை நீதிபதி ஒருவர் பேசியபோது கேட்ட சமாச்சாரம் இது. வார இதழ் ஒன்றில், வாசகர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் கூறி வந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை விவரித்தார்:
ஒரு வாரத்தில் கேட்கப்படும், 100 கேள்விகளில், 60 கேள்விகள் சொத்துக்களைப் பற்றியதாக இருக்கும். "என் அம்மாவின் மூத்த சகோதரியின் கணவருடைய அண்ணியின் சொத்தில் பங்கு கேட்க ஏதேனும் வழியுண்டா?' என்று கூடக் கேள்விகள்
வந்திருக்கின்றன.
மற்றவர் உழைத்தோ, உழைக்காமலோ, நல்ல வழியிலோ, தீய வழியிலோ சேர்த்த சொத்துக்களில் பங்கு கேட்பதில் செலவிடும் நேரத்தையும், மூளையையும், பணத்தையும் சரியான ஆக்க வேலையில் செலவிட்டால், உங்களுக்கு நீங்களே ஒரு நல்ல எதிர்காலத்தை தேடிக் கொள்ள முடியும்.
பரம்பரைச் சொத்து, சாதாரணமாக உறவினர்களுக்குள் இருக்க வேண்டிய பாச உணர்ச்சிகளையும், நிலவ வேண்டிய அமைதியையும் எவ்வளவு குடும்பங்களில் குலைத்திருக்கிறது என்பதை இத்தகைய கேள்விகளால் உணர முடிகிறது...
— இப்படி வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
அவர் வருந்தி பயன் என்ன? பணம் என்றால், பிணமும் வாயைப் பிளக்கும் கால கட்டத்தில் அல்லவா வாழ்ந்து கொண்டுள்ளோம்!
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயராம் - சென்னை,இந்தியா
29-ஆக-201215:05:53 IST Report Abuse
ஜெயராம் " என் அம்மாவின் மூத்த சகோதரியின் கணவருடைய அண்ணியின் சொத்தில் பங்கு.. " ஸ்ஸப்பா, இப்பவே கண்ண கட்டுதே..
Rate this:
Share this comment
Cancel
சுந்தர் - சென்னை,இந்தியா
29-ஆக-201208:51:47 IST Report Abuse
சுந்தர் திட்டி வடம் என்ற பாம்பு இருகின்றதா என்று தெரியவில்லை. ஆனால் harry potter திரைபட்டத்தில், bassilisk என்ற பாம்பை பற்றி வரும். அதுவும் இதே போல் தான் இருக்கும். அதை பார்த்தவர்கள் உடனே மடிந்து விடுவர்.
Rate this:
Share this comment
Cancel
Gokzz - Pollachi,இந்தியா
29-ஆக-201208:49:22 IST Report Abuse
Gokzz SYAMALA VENKATARAMAN - ramapuram, சூப்பர் கேள்வி....திட்டி விடம் பாம்பை விட 100 மடங்கு விடம் சில மனிதர்களிடம் உள்ளது...
Rate this:
Share this comment
Cancel
திட்டாத வடம் - வணைடு,வனுட்டா
29-ஆக-201200:47:37 IST Report Abuse
திட்டாத வடம் படத்தில் போட்டில் உக்காந்து இருக்குற ஒன்னுக்கு ஒரு பயமும் வேணாம் ஏன் திட்டி விடம் போலி தலைய பார்த்து பயந்து ஓடிவிடும்.
Rate this:
Share this comment
Cancel
SYAMALA VENKATARAMAN - RAMAPURAM,இந்தியா
28-ஆக-201213:05:49 IST Report Abuse
SYAMALA VENKATARAMAN வாசகர் கருத்துப்படி, திட்டி விடம் என்ற பாம்பு இருந்ததா இல்லையா என்பது பிரச்னை இல்லை. ஆனால் அதை விட கொடிய விஷம் உள்ள மனிதர்கள் இருப்பதை ஒப்புகொள்கிறீர்களா ?
Rate this:
Share this comment
Cancel
Raja M - Irving,யூ.எஸ்.ஏ
27-ஆக-201221:11:50 IST Report Abuse
Raja M "Spitting Cobra" is the one that is capable of spitting its venom, not the "Black Mamba"
Rate this:
Share this comment
Cancel
குமாரவேல் - நைரோபி,கென்யா
27-ஆக-201216:28:10 IST Report Abuse
குமாரவேல் தமிழ் வாணன் சொல்வது மிகவும் சரி. இங்கே ஈஸ்ட் ஆப்ரிக்கா தேசமான் கென்யாவில் அவர் சொல்லும் வகை பாம்பு உள்ளது. உலகில் மிக வேகமாக செல்லும் பாம்பு. மிக கொடிய விஷமும் ஆக்ரோஷமும் கொண்டது. ஆனால் விஷத்தை துப்பும் வகையா என்பது எனக்கு தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
பரண்டஹன் - எரோடே,இந்தியா
27-ஆக-201214:37:25 IST Report Abuse
பரண்டஹன் ஏப்பா தமிழ்செல்வா, கொஞ்சம் அடக்கி வாசி, நீயி பொழப்ப பாக்க நாடு விட்டு நாடு போயிருக்க, எதுக்கு இந்ந்த பொழப்பு உனக்கு. சம்பாரிச்சு புள்ள குட்டியி காப்பாத்த பாரு.
Rate this:
Share this comment
Cancel
Gokzz - Pollachi,இந்தியா
27-ஆக-201214:21:14 IST Report Abuse
Gokzz "திட்டியின் விடமன்ன கற்பியின் செல்வியை விட்டிலையே!" - இதில் உள்ள திட்டியின் விடம் என்பது இந்த இடத்தில உவமையாக கூறப்பட்டது என்று நினைகின்றேன்...யாராவது தமிழறிஞர்கள் இருந்தால் உதவுங்கள்.....
Rate this:
Share this comment
Cancel
dinez - thanjavur,இந்தியா
27-ஆக-201211:48:56 IST Report Abuse
dinez its not black mamba,,, its splitting cobra,,, mamba did not split venom,, mamba&39s venom is highly dangerous in the world,, patient should be admitted within 16 min in hospital otherwise its cause death to patient,,,,, splitting cobra&39s venom is not that much compared to mamba,,,but fortunately both are in Africa(south Africa) only,,, its not in India
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.