அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 ஆக
2012
00:00

அன்புள்ள அம்மாவிற்கு —
நான் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவன். பத்தாவது வரை படித்திருக்கிறேன். நான், அம்மா, அப்பா, தம்பி என்று நான்கு பேர் கொண்ட குடும்பம். ஒரு பொருளை உருவாக்கும் ஜாதியை சேர்ந்தவர்கள். நான் மரம் சம்பந்தப்பட்ட தொழில் செய்கிறேன். என் தம்பி, அச்சுத் தொழிலில் உள்ளார். என் தாயும், தந்தையும் வெடி மருந்து சம்பந்தப்பட்ட (கூலி) தொழில் செய்கின்றனர். என் தந்தையுடன் பிறந்தவர்கள், ஒரு ஆண், மூன்று பெண்கள். அதாவது, எனக்கு ஒரு சித்தப்பா, மூன்று அத்தை மற்றும் மாமன்மார். நாங்கள், ஒரு காலத்தில் வசதியுடன் வாழ்ந்து, தற்போது உழைத்து, அன்றாடம் பொழுதை கழிப்பவர்களாக உள்ளோம்.
சரி என் பிரச்னைக்கு வருகிறேன் அம்மா. எனக்கு, 21 வயதில் முதல் திருமணம் நடந்தது. அப்பெண், வெடிக்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவள். அவள், அச்சுத் தொழில் சம்பந்தப்பட்ட வேலை செய்து வந்தாள். எனக்கும், அவளுக்கும் ஒரே வயதுதான். அவள் என் ஜாதியை சேர்ந்தவள். பெண் பார்த்தோம், பெண் எனக்கு பிடித்திருந்தது. ஜாதகம் பார்க்கவில்லை. ஏனென்றால், எனக்கு ஜாதகத்தில் நம்பிக்கையில்லை.
கல்யாணம் முடிந்து, மூன்று மாதங்கள், நன்றாக போய் கொண்டிருந்தது. அதன் பின், என் அம்மா ஒரு வாரம் வெளியூர் போக வேண்டிவந்தது. அப்போது தான், என் மனைவிக்கு சுத்தமாக சமைக்க தெரியாது என்பது தெரிந்தது. அதுவரை, என் அம்மா தான் சமைப்பார். அவள் கூட மாட உதவி செய்வாள். நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், என் அப்பா, என் அம்மாவிடம் இதை சொல்ல, என் அம்மா, என் மனைவியை சப்தம் போட்டார். அது அவள் வீட்டுக்கு தெரிந்து, பிரச்னையாகி விட்டது.
இந்த சாதாரண பிரச்னைக்கு, என்னை பயம் காட்ட விஷம் அருந்திவிட்டு, உடன் எனக்கு போன் செய்து விட்டாள். நானும், எவ்வளவோ முயற்சி பண்ணியும் காப்பாற்ற முடியவில்லை. அதன்பின் தான் தெரிந்தது கல்யாணத்திற்கு முன், இருமுறை தற்கொலை முயற்சி செய்தவள் என்று. அவள் நல்லவள்; அமைதியானவள். ஆனால், கோபம் எப்போது வருமென்று சொல்ல முடியாது.
அதன்பின், என் பிரச்னை காவல் நிலையத்திற்கு சென்று, தற்போது கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. அவள் இறந்தபோது, என் மீது கோபமாக இருந்த என் மனைவி வீட்டார், தற்போது அவளின் குணம் தெரிந்ததால், இப்போது, என் மீது பாசத்துடன் உள்ளனர். என் பிரச்னை ஆரம்பித்த போது, என் சித்தப்பா மற்றும் என் அத்தை, மாமா தான் உதவி செய்தனர். என் மீது, அவர்களுக்கு அளவு கடந்த பாசமும், நம்பிக்கையும்.
பிரச்னைக்கு பின், வீடு மாறி வேறு இடத்துக்கு போனோம். அதன் பின், மூன்று வருடங்கள் ஓடி விட்டன. அதுவரை நான் உண்டு, என் வேலை உண்டு என்று தான் இருந்தேன்.
ஒரு வருடத்திற்கு முன், என் பக்கத்து வீட்டில், ஒரு பெண்ணை கண்டேன். அவர்களுக்கு அது சொந்த வீடு. அந்த வீட்டில், அவர்கள் இருபது வருடங்களாக வசித்து வருகின்றனர். அவர் கள், வேறு ஜாதி. அவளும், முதல் திருமணமாகி, தற்போது வீட்டோடு இருக் கிறாள். அவள் முதல் திருமணத்தில், கணவரின் நோயை மறைத்து திருமணம் செய்துள்ளனர். அது முதலிரவு அன்றே தெரிந்து, ஒரே வாரத்தில் திருமண வாழ்க்கை முடிந்து விட்டது. அவள் வீட்டிற்கு ஒரே பெண். அவள் பத்தாவது வரை படித்திருக்கிறாள். அச்சுத் தொழில் சம்பந்தப்பட்ட வேலை செய்கிறாள். பார்த்தவுடன் இருவருக்கும் பிடித்து விட்டது.
சிறிது நாளில், என் நிலை உணர்ந்து, வேண்டாம் என ஒதுங்கினேன். என்னை தொடர்பு கொண்டு அழுதாள். அதன்பின், என் நிலையை முழுமையாக எடுத்து கூறினேன். "நான் வாழ்ந்தால், உங்களுடன் தான் வாழ்வேன்; இல்லையென்றால், திருமணம் செய்து கொள்வதில்லை...' என்றாள். இந்த ஒரு வருடத்தில், நாங்கள் ஒரு நாள் நெருங்கி பழகி விட்டோம். எங்கள் காதலை, என் நண்பர்களுக்கு தெரியப்படுத்தினேன்.
என் நண்பர்கள், உன் நிலைமை தெரிந்து நடந்து கொள். மேலும், அவள் ஜாதியை சொல்லி, நீங்கள் இருவரும் திருமணம் செய்தால், உன் சொந்தம், உறவு, சமூகம் எல்லாம் உன்னை ஒதுக்கி விடும். மேலும், உன் முதல் திருமணத்தில், உங்கள் குடும்பப் பெயர் கெட்டு விட்டது. மேலும், கெடுத்து விடாதே என்றும், உன் சித்தப்பாவுக்கு பட்ட நன்றியை மறந்து விடாதே என்றும் திட்டுகின்றனர். மேலும், அவளுடன் நடந்ததை கூறினேன். அதற்கு அவர்கள் கிடைத்தவரை லாபம் என்று விட்டுவிடு என்று கூறுகின்றனர். அதன் பின், அவள் வீட்டுக்கு தெரிந்து விட்டது. அவர்களும் ஜாதியை காரணம் சொல்லி வேண்டாம் என்று கூறுகின்றனர்.
ஆனால், அவர்கள் மிகவும் அமைதியானவர்கள், நல்லவர்கள். ஏனென்றால், வேறொருவராக இருந்திருந்தால், உடனே என் வீட்டில் பிரச்னை செய்திருப்பர். தற்போது, அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தற்கொலை. நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டுகின்றனர். நான், அவளுக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை. வாழ்ந்தால், அவளுடன் தான் வாழ வேண்டும். ஏனென்றால், அவள் போல் ஒருத்தியை பார்த்ததில்லை.
அவள் அழகானவள், பக்தி உள்ளவள், ஒழுக்கமானவள். அவள் என்னை நெருங்க விட்டது கூட, என் மீது உள்ள நம்பிக்கையில்தான். எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. என் கேஸ் முடிய, இன்னும், ஆறு மாதங்கள் உள்ளன. கேஸ் எனக்கு தான் சாதகமாய் உள்ளது. அது ஒன்றும் பிரச்னையில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அம்மா...
* இரு உயிர்களை தற்கொலைக்கு தூண்டி விட்டு, நாங்கள் திருமணம் செய்து கொள்வதா?
* நன்றி மறந்து, என் வீட்டு நம்பிக்கையை கெடுப்பதா?
* ஒரு ஒழுக்கமான, அமைதியான பெண்ணின் மனதை கெடுத்து, அவளுக்கு துரோகம் இழைத்து, வாழ்நாள் முழுவதும் உறுத்தலில் வாழ்வதா?
*யாரும் எப்படியோ போகட்டும் என்று திருமணம் செய்து கொள்வதா?
அம்மா, எனக்கு கேஸ் நடக்கும் போது, அவளை காதல் திருமணம் செய்ய முடியுமா? அதற்கு சட்ட சிக்கல் எதுவும் வருமா? ப்ளீஸ் அம்மா, இதற்கு தயவு செய்து பதில் கொடுங்கள்.
இப்படிக்கு தங்கள் மகன்.

அன்புள்ள மகனுக்கு —
உன் கடிதம் கிடைத்தது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து, 65 ஆண்டுகளாகியும், நம் திருமண பந்தங்களில், ஜாதி வெறி தொடர்ந்து ஆதிக்கம் செய்வதை, உன் கடிதம் அப்பட்டமாக்கியுள்ளது.
உனக்கு முதல் திருமணம், 21 வயதிலேயே நடந்து முடிந்திருக்கிறது. மனைவிக்கு சமைக்கத் தெரியாது என்ற அற்ப காரணமே, உங்களுக்குள் முட்டல் மோதலை உருவாக்கி, முதல் மனைவியை தற்கொலைக்கு தள்ளியும் இருக்கிறது.
உனக்கு பயம் காட்ட, உன் மனைவி தற்கொலை முயற்சி செய்தாள் என்பதும், திருமணத்திற்கு முன்பே, அவள் இரு தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டவள் என்பதும், நீ இட்டுக் கட்டிய கட்டுக்கதையாக எனக்கு தோன்றுகிறது.
மனைவியை தற்கொலைக்கு நீ தான் தூண்டினாய் என்ற வழக்கு கோர்ட்டில் நடக்கிறது என யூகிக்கிறேன். அந்த வழக்கில், ஜாமின் பெற்று வழக்கை நடத்தி வருகிறாய் என எண்ணுகிறேன். வழக்கில் உன் தரப்பு சாட்சிகளாக உன் சித்தப்பா, அத்தை, மாமா இருக்கின்றனர்.
மூன்று ஆண்டுகளாக வழக்கு நடந்து வர, நீ, உன்னைப் போன்றே முதல் திருமணத்தில் தோற்ற பெண்ணுடன், பழக ஆரம்பித்துள்ளாய். உன் பழக்கம் ஒரு நாள், தாம்பத்தியத்தையும் ருசி பார்த்து விட்டது.
நீ இரண்டாவதாய் பழகும் பெண், தன் முதல் திருமணத்தை நீதிமன்றத்தில் அணுகி, சட்டப்படி ரத்து செய்து விட்டாரா அல்லது ரகசிய நோயுள்ள கணவனுடன் சேர்ந்து வாழ பிரியமில்லை என, அறிவித்து தனியாக வாழ்கிறாரா?
உனக்கு எதிராக நடக்கும் வழக்கில், தீர்ப்பு உனக்கு சாதகமாய் வரும் வரை காத்திரு. உனக்கு சாதகமாய் தீர்ப்பு வந்தாலும், எதிர் தரப்பு மேல் முறையீடு செய்யப்படாமல் இருப்பது உத்தமம். தீர்ப்பு வந்ததும், நடுநிலை பெரியவர்களை வைத்து, உன் தரப்பிடமும், நீ விரும்பும் பெண் தரப்பிடமும், ஆக்க ரீதியாய் பேச்சுவார்த்தை நடத்து.
தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டும், இரண்டாம் திருமண பெண் வீட்டாரை பேசி சமாதானப்படுத்து, நண்பர்களின் துர்போதனைகளை தூக்கிப் போடு.
* "இரு உயிர்களை தற்கொலைக்கு தூண்டி விட்டு, நாங்கள் திருமணம் செய்து கொள்வதா?' என, முதல் கேள்வி கேட்டுள்ளாய். பொதுவாக இவ்வகை மிரட்டல்கள், "எமோஷனல் பிளாக்மெயில்' வகையை சார்ந்தவை. தற்கொலை மிரட்டல்கள் எந்த தரப்பிருந்து வந்தாலும், அவைகளை துணிச்சலாய் அணுகு. பெரியவர்களை வைத்து நீ நடத்தும் பேச்சுவார்த்தையே, தற்கொலைக்கு எதிரான ஆலோசனையாகவும் அமையும்.
* "நன்றி மறந்து, என் வீட்டு நம்பிக்கையை கெடுப்பதா?' என, இரண்டாம் கேள்வி கேட்டுள்ளாய். உன் இரண்டாம் திருமணம், நன்றி மறப்போ, உன் வீட்டு நம்பிக்கையை கெடுப்பதோ ஆகாது. உணர்ச்சி கொடி பிடிக்காமல், அறிவுக்கொடி உயர்த்தினால், உன் இரண்டாம் திருமணம், நல்லதொரு ஏற்பாடாக, உன் வீட்டாருக்கு தெரியும்.
* "ஒரு ஒழுக்கமான, அமைதியான பெண்ணின் மனதை கெடுத்து விட்டு, அவளுக்கு துரோகம் இழைத்து, வாழ்நாள் முழுக்க உறுத்தலில் வாழ்வதா?' என, மூன்றாம் கேள்வி கேட்டுள்ளாய். நியாயமான கேள்வி. உன்னை நம்பி மனதையும், உடலையும் ஒப்படைத்தவளுக்கு துரோகம் செய்யாது, அவளை சட்டரீதியாக இரண்டாம் திருமணம் செய்து கொள் என்று, ஆணித்தரமாய் ஆலோசனை கூறுகிறேன்.
*"யாரும் எப்படியோ போகட்டும் என்று, திருமணம் செய்து கொள்வதா' என, கேட்டுள்ளாய். பொதுநலம் கெடுக்காத சுயநலம் தப்பில்லை.
சட்டத் தடைகள் இருந்தால், அறவே நீக்கி, மறுமணம் புரிந்து கொள் மகனே. வாழ்த்துக்கள்!
என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (32)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kokila - USA,யூ.எஸ்.ஏ
01-செப்-201223:24:59 IST Report Abuse
Kokila Dear Rajeshwari, I am proud of you for pursuing your studies. You must be a very strong willed person because even at this young age you recognize that you have great potential- much more than the guy who rejected you based on your status. Please continue your studies - pursue your dreams - they are much bigger than your neighbor or your former love interest. The world needs confident, courageous people like you who will be role models for the next generation. You owe this to yourself and your parents. The sense of purpose and joy you derive from realizing your full potential will give you a great sense of fulfillment. You are young and have your whole life ahead of you. Enjoy! Great luck to you!
Rate this:
Share this comment
Cancel
JAYASRI. G - Puducherry,இந்தியா
01-செப்-201222:26:29 IST Report Abuse
JAYASRI. G அந்த பொண்ண கல்யாணம் பண்ணி நல்லா வாழ வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
sowmiya - trichy,இந்தியா
31-ஆக-201213:40:43 IST Report Abuse
sowmiya அந்த பொண்ண கல்யாணம் பண்ணி நல்லா வாழ வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
ஜாய் - Chennai,இந்தியா
31-ஆக-201210:09:23 IST Report Abuse
ஜாய் Abirami - villupuram,இந்தியா ....நிங்கள் உங்கள் பிரச்சனையை இங்க சொல்லலாம்..உங்கள் முகவரியோ பெயரோ இங்கு குறிப்பிட வேண்டாம்.. CHITRADEEPA - PALLADAM,இந்தியா....நிங்கள் இங்கை fast என்கிறது பதில் past use செய்ய வேண்டும்..தப்பாக நினைகதிர்கள்
Rate this:
Share this comment
Cancel
ஜாய் - Chennai,இந்தியா
31-ஆக-201210:03:19 IST Report Abuse
ஜாய் அவள் அழகானவள், பக்தி உள்ளவள், ஒழுக்கமானவள். அவள் என்னை நெருங்க விட்டது கூட, என் மீது உள்ள நம்பிக்கையில்தான். இதற்கு மேல் என்ன வேண்டும் ,அவளை மணந்து கொள்ள ...சாதி இந்த காலத்தில் இப்படி என்ன யோசன ...நடந்ததை மறந்து விடு ,இனி சிறந்த வாழ்கை அமைய நல்ல துணை கிடைக்கும் போது ஏன் வருத்தபடுகிறாய் ..சித்தி சித்தப்பாவிடம் பேசி முறை படி எல்லாம் நடக்கட்டும்..
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - denhelder,நெதர்லாந்து
31-ஆக-201201:29:53 IST Report Abuse
GOWSALYA அன்பு மகள் கோமதி ,உங்களுக்கு எனது மெயில் விலாசம் கிடைக்கவில்லையா? இதில எழுதவும் முடியல்ல.தினமலர் ஆசிரியரிடம் கேட்டு எடுங்க ....அன்பு ஆசிரியர் வணக்கம்.இந்தக் கோமதி மகளுக்குத் தயவு செய்து எனது மெயில் விலாசத்தைக் கொடுங்க.நன்றி.
Rate this:
Share this comment
Cancel
rajeshwari - villupuram,இந்தியா
30-ஆக-201216:56:35 IST Report Abuse
rajeshwari கௌசல்யா அம்மா வின் கருத்தை படிப்பதற்காகவே நான் இந்த பகுதியை படிப்பேன், மற்றும் மீனவன் அண்ணனின் கருத்துகள் அற்புதம், என் பிரச்சனை என்னவென்றால், நான் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவள்.என் உடன் பிறந்தவர்கள் 3 அக்கா 1 தம்பி. 2 அக்காவிற்கு திருமணம் முடிந்துவிட்டது .நான் 12 ஆம் வகுப்புவரை படித்தேன். மேற்கொண்டு படிக்க வசதி இல்லாததால் படிக்கவில்லை. நான் வேலைக்கு செல்லும் இடத்திற்கு எதிரில் ஒருவர் பாத்திரக்கடை வைத்திருந்தார்.கொஞ்சம் வசதியான குடும்பம். அவரின் மகன் என்னிடம் அடிக்கடி வந்து பேசுவார், பிறகு என் மொபைல் நம்பர் வாங்கி தொடர்பு கொண்டார். என்னுடன் தினமும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணி நேரம் பேசுவார் . மிகவும் அன்பாக இருந்தார். எனக்கும் அவரை பிடித்து விட்டது. 1 வருடம் நன்றாக பேசிகொண்டிருந்தோம், ஆனால் வெளியில் செல்வது, தனிமையில் சந்திப்பது என்று எதுவும் இல்லை. அவர் கடையில் இருந்து பார்ப்பது, பேசுவது மட்டும் தான். திடீரென்று அவர் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். காரணம் கேட்டதற்கு, நீ வசதியில்லாதவள் , உன்னை திருமணம் செய்து கொண்டால் யாரும் என்னை மதிக்க மாட்டார்கள். உன் status kum என் status kum சரிவராது என்று சொல்லி மறுத்தார். நான் அவரிடம் என்னுடன் பேசும்படி கெஞ்சினேன், அழுதேன், அடிகடி போன் பண்ணேன், நம்பரை மாற்றி விட்டார். அதன் பிறகு நான் அவரிடம் பேசுவதில்லை.அது நடந்து இரண்டு வருடம் ஆகிறது. ஆனால் இன்று வரை அவரை என்னால் மறக்கமுடியவில்லை. அவர் அப்படி சொன்ன பிறகு எனக்குள் தாழ்வு மனப்பான்மை நிறைய வந்துவிட்டது. யாருக்கும் என்னை பிடிக்காது, நான் வசதியற்றவள் என்ற எண்ணம் தோன்றுகிறது. நான் இப்பொழுது ஒரு கம்பெனி யில் வேலை செய்துகொண்டே, தொலைதூர கல்வி மூலம் degree படிக்கிறேன். ஆனால் எனக்கு படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை, வேலைகளிலும் அப்படிதான், எனக்குள் ஒரு தன்னம்பிக்கை, முயற்சி, எதுவும் இல்லை சோம்பேறியாக இருக்கிறேன்.ஆனால் எனக்கு படித்து ஒரு நல்ல நிலைமையில் இருக்க வேண்டும் என்று லட்சியம் இருக்கிறது. ஆனால் அதற்கான முயற்சி எதுவும் என்னால் செய்ய முடியவில்லை. வசதியானவர்களை பார்த்தால் நாமும் அது போல இல்லையே என்ற ஏக்கம் உண்டாகிறது,மனம் அலைபாய்கிறது. வசதியில்லை என்ற ஒரே காரணத்திற்காக என்னை தூக்கி எறிந்தவன் முன் நான் வாழ்ந்து காட்டவும் ,அவனை மறக்கவும் , என் தாழ்வு மனப்பான்மையை போக்கவும், மனம் ஒரு நிலையாகவும் இருக்க எனக்கு நல்ல அறிவுரையை கூறுங்கள். இதற்கு கௌசல்யா அம்மாவின் கருத்துக்களையும் வாசகர்களின் கருத்துகளையும் எதிர்பார்கிறேன். . நன்றி .
Rate this:
Share this comment
Cancel
கும்மாங்குத்து கோபி - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஆக-201211:51:56 IST Report Abuse
கும்மாங்குத்து கோபி சப்பை மேட்டர். காமெடி கீமெடி பண்ணலியே
Rate this:
Share this comment
Cancel
arasu - melur,இந்தியா
30-ஆக-201204:32:26 IST Report Abuse
arasu ஹாய் நண்பா வணக்கம் அறை எடுத்து யோசிப்பிங்களt நண்பா
Rate this:
Share this comment
Cancel
குணா - ப்லோரே,இந்தியா
29-ஆக-201218:05:08 IST Report Abuse
குணா one doubt.. when the first fight started with your mom and ur wife? and what did your family did to convince your wife? Did your mom tried teaching her to cook??? U said she was at your home for three months, Does your mom never asked her to cook on her own??? If so, then its your mom's fault... Moreoever, did she lied before marriage that she knows cooking??? I feel that something is wrong from that guy's family...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.