சைக்கிள் மிதித்தால் தண்டனை குறையும்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
Advertisement
சைக்கிள் மிதித்தால் தண்டனை குறையும்!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 ஆக
2012
00:00

நம் நாட்டில், தலைவர்களின் பிறந்த நாளின்போது, சிறைக் கைதிகளுக்கான தண்டனையை குறைத்து, அவர்களை விடுவிக்கும் நடைமுறை உள்ளது. பிரேசிலில், கைதிகளின் தண்டனையை குறைப்பதற்கு, ஒரு வினோதமான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. சாண்டா ரிடா டோ சபுகாய் என்ற நகரில் உள்ள சிறையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த சைக்கிள்கள், பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளன. சைக்கிளில் உள்ள பெடல், தொடர்ந்து வேகமாக மிதிக்கப்படும்போது, சக்கரம் சுழன்று, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பேட்டரி மூலம், மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பேட்டரி பவரை, மின்சாரமாக மாற்றுவதற்கு, தனியாக கன்வெர்ட்டரும் உள்ளது.இந்த சிறையில், நீண்ட நாட்களாக அடைக்கப்பட்டுள்ள கைதிகள், தினமும், இங்கு வந்து, சைக்கிள் மிதிக்க வேண்டும். ஒரு நாளைக்கு, குறைந்தது எட்டு மணி நேரம், சைக்கிள் மிதித்தால், தண்டனை நாளில், ஒரு நாள் குறையும். இந்த வித்தியாசமான தண்டனை குறைப்பு நடைமுறை, பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், சம்பந்தபட்ட கைதிகள், இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஜோல்னா பையன்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெங்கடாசலம் - singapore,சிங்கப்பூர்
31-ஆக-201214:10:52 IST Report Abuse
வெங்கடாசலம் அப்படின்னா தண்டனை காலம் 5 வருடம் என்றால், ஒரு நாளைக்கு 8 மணி நேரம் சைக்கிள் மிதித்தால், இரண்டரை வருடம் தான் தண்டனை காலமா? சற்று யோசிக்க வேண்டிய விஷயம் தான்!!!!!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
renuga - virudhunagar,இந்தியா
30-ஆக-201214:53:29 IST Report Abuse
renuga நல்லாத்தான் இருக்கு ஆனா 8 மணி நேரம் மிதிச்சா 1 மாசம் குறைக்கலாம் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
yas - chennai,இந்தியா
28-ஆக-201214:42:26 IST Report Abuse
yas நம்ம ஊருக்கு இப்போ இது ரொம்ப நல்ல விஷயமf. இட் வில் சால்வ் கரண்ட் டெபிசிட்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
மணிகண்டன் - சென்னை,இந்தியா
28-ஆக-201206:25:51 IST Report Abuse
மணிகண்டன் இதை நம் நாட்டு சிறைச்சாலைகளிலும் அமல் படுத்தலாமே!!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ஜெய் - Salem,இந்தியா
27-ஆக-201215:13:40 IST Report Abuse
ஜெய் நிஜமாகவே ரொம்ப நல்ல ஐடியா தான். இதை எப்படி செயல் படுத்துறதுன்னு தெரிஞ்சா இன்னும் பயனுள்ளதா இருக்கும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
சுரேஷ் - மதுரை,இந்தியா
27-ஆக-201213:14:05 IST Report Abuse
சுரேஷ் ரெம்ப நல்லது. இந்த மாடல் அறிமுகமானால் நல்லது. மனிதர்களுக்கும் , நாட்டிக்கும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
கணபதி - KHARTOUM,சூடான்
26-ஆக-201219:21:35 IST Report Abuse
கணபதி ஒரு வெளிநாட்டு உணவகத்திலும் இது போல சைக்கிள் உண்டு. அங்கு ஒரு மணி நேரம் பெடல் செய்தால் ஒரு சாப்பாடு இலவசம். (தினமலரில் தான் படித்த நினைவு)... இதை இங்கு எல்லா இடத்திலும் நிறுவலாம். இந்த சைக்கிள், பாட்டரி, இன்வேர்டார், செய்ய ஆகும் செலவை நாம் ஏற்றுகொண்டால் அதில் கிடைக்கும் மின்சாரம் நமக்கு மிச்சம் தானே. எல்லாரும் ஜிம் போவத்தர்க்கு பதிலாக அவங்க பிளாட்டுல நிறுவி விட்டால் உடற்பயிற்சிக்கு உடற்பயிற்சி, ஜிம் கட்டணம் மிச்சம், எலெக்ட்ரிசிட்டி லாபம். கூட்டி கழிச்சு பாருங்க சரியா வரும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
mohab - chennai,இந்தியா
26-ஆக-201216:15:33 IST Report Abuse
mohab superrrrrrrrrrrrrrrr
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
சுரேஷ் - கேரளா,இந்தியா
26-ஆக-201209:46:57 IST Report Abuse
சுரேஷ் ரொம்ப நல்ல வரவேற்கத்தக்க விஷயம். இதே போல நம்ம ஊரிலும் செய்யலாம். இதனால் கைதிகளின் மனநிலை மாற வைப்பு உண்டு. அவர்கள் தண்டனைக்காலம் முடிந்து வரும்போது, சிறிதளவாவது திருந்த வைப்பு உண்டு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.