இன்ஸ்யூரன்ஸ் என்றாலே முதலில் நமது நினைவுக்கு வருவது எல்.ஐ.சி.,தான். இந்தியாவில் பொது இன்ஸ்யூரன்ஸ், ஆயுள் இன்ஸ்யூரன்ஸ் என்ற இரண்டு பிரிவுகளில் பொதுத் துறை மற்றும் தனியார் துறையில் எத்தனையோ இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் இயங்கி வந்தாலும் இன்ஸ்யூரன்ஸ் என்ற சொல்லுக்கு மறு வார்த்தையாகத்தான் இந்தியாவில் உள்ள அனைவரும் எல்.ஐ.சி., யைப் பார்க்கிறார்கள் என்பது கண்கூடான உண்மையாகும்.
சமூக நோக்குடன் கடந்த 56 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுத்துறையில் லாபகரமாக இயங்கி வரும் எல்.ஐ.சி., நிறுவனம் சமூக அக்கறையுடன் கூடிய அறிமுகமாக எல்.ஐ.சி., கோல்டன் ஜூபிளி பவுண்டேஷனைக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவியது. இதன் மூலம் பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்களை வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் இந்த ஸ்காலர்ஷிப்பினை வழங்குவதற்கான அறிவிப்பினை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தேவைகள் என்னென்ன: கடந்த கல்வி ஆண்டான 2011-12ல் பிளஸ் 2 விற்கு இணையான படிப்பை முடித்துவிட்டு தற்போது மருத்துவம், பொறியியல், டிப்ளமோ படிப்பு அல்லது ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பைத் தொடர்பவராக இருக்க வேண்டும். ஐ.டி.ஐ., போன்ற அரசு அங்கீகாரம் பெற்ற படிப்புகளை மேற்கொள்பவர்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.
இந்த ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் படிப்பை முடித்திருப்பதோடு அவர்கள் சார்ந்திருக்கும் குடும்பத்தின் வருமானம் ஆண்டிற்கு ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களில் குறைந்த பட்ச வருமானம் உடையவர்களின் விண்ணப்பத்தில் துவங்கி ஏறுமுகமாக ஸ்காலர்ஷிப்பிற்கான தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களில் ஏதாவது ஒருவருக்கு மட்டுமே இந்த ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் என்பதை நினைவில் வைக்கவும். முறை சாராத பணிகளில் இருப்பவர்கள் ஊதியம் குறித்த சுய உறுதி மொழியையும், முறை சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் பணி வாய்ப்பாளரிடமிருந்து சான்றிதழையும் இணைக்க வேண்டியிருக்கும்.
மற்ற தகவல்கள்: இந்த ஸ்காலர்ஷிப்பிற்கு தேர்ந்து எடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்தை மாதா மாதம் ஆயிரம் ரூபாயாக அவர்களின் வங்கிக் கணக்கில் என்.இ.எப்.டி., மூலமாக வரவு வைக்கப்படும். மேற்கண்ட தகுதிகள் இருந்து எல்.ஐ.சி.,யின் ஸ்காலர்ஷிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக உங்களுக்கான பிரத்யேமான உபயோகத்தில் உள்ள ஒரு இ-மெயில் முகவரி இருப்பதை உறுதி செய்யவும். தேர்ந்து எடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கான மேற்கொண்டு தகவல்கள் அவர்கள் சார்ந்திருக்கும் பகுதியைச் சார்ந்த எல்.ஐ.சி.,யின் கோட்ட அலுவலகத்திலிருந்து அனுப்பப்படும். முழுமையான தகவல்களை இந்த நிறுவனத்தின் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் :
இணையதள முகவரி:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.