ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்து படுக்கையிலிருந்து எழும் போதும், இரவு படுக்கைக்கு போகும் போதும், ஏதாவது ஒரு பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும். விடியற்காலையில் எழுந்திருக்கும் போதே, "பகவானே... இன்றைய பொழுது நல்லபடியாக போக வேண்டும். எண்ணிய காரியங்கள் நிறைவேற வேண்டும்...' என்று தியானம் செய்வது நல்லது.
அதேபோல், இரவு படுக்கும்போதும், "பகவானே... உன் அருளால் இன்றைய பொழுது நல்லபடியாக போயிற்று. இரவு நான் தூங்கும்போது, நீ, என்னை ரட்சிப்பாயாக...' என்று தியானித்தபின் படுப்பதும் நல்லது.
இந்த ஜென்மா நிரந்தரமானதல்ல. என்றோ ஒரு நாள் போக வேண்டியது; அது எப்போது, எப்படி போக வேண்டும் என்பது முன்னதாக விதிக்கப்பட்டு விடுகிறது; அதை மாற்ற முடியாது. அகாலத்தில் ஏற்படக் கூடிய மரணத்தை, பகவான் தடுத்து விடலாம். ஆயுள் முடிந்தவனை அவராலும் காப்பாற்ற முடியாது.
எப்போது முடிகிறது என்று தெரியாதபடியால், தினமும் அவனை தியானம் செய்து வந்தால், ஒரு சில ஆபத்துகள் நீங்கலாம். மரணம் என்பதை சில நாள் தள்ளிப் போடலாம். அப்படியே ஒருநாள் போய் விட்டாலும், பகவான் நாமா சொன்ன புண்ணியம் அவனுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.
விடியற்காலையில் எதை எல்லாம் நினைத்தால், எல்லா பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும் என்பதை, பகவானே ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறார். இதை விடியற்காலையில் நினைக்க மறந்தாலும், கடைசி காலத்திலாவது நினைக்கலாம் என்று ஒரு மாற்று யோசனையையும் கூறியுள்ளார். அப்படி நினைக்க வேண்டியவை:
பகவான், கஜேந்திரன், கஜேந்திரனும், முதலையும், மலைகள், காடுகள், தேவ விருட்சங்கள், பிரம்மா, விஷ்ணு, பாற்கடலில் பகவானின் ஆபரணங்களான ஸ்ரீவத்சம், சங்கு, கருடன், ஆதிசேஷன், லட்சுமிதேவி, நாரதர், பிரகலாதன் பகவானுடைய அவதாரங்களான சூரியன், சந்திரன், அக்னி, பசு ஆகியவை.
விடியற்காலையில் எழும்போதே இந்த ஞாபகம் தானா வருகிறது? பால் பாக்கெட் வந்தாச்சா, பால்காரன் வந்தாச்சா, காபி ரெடியா? இந்த ஞாபகம் தானே வருகிறது. காலையில் இரண்டு விஷயங்களுக்கு கோபம் வரும். ஒன்று, பால் வராமல் காபி தயாராகாவிட்டால் கோபம் வரும்.
அடுத்தது, காலையில் வழக்கமாக வரும் செய்தித்தாள் வராவிட்டால் கோபம் வந்துவிடும். உள்ளுக்கும், வாசலுக்கும் அலைவான். தெருக்கோடி வரை எட்டி எட்டிப் பார்ப்பான். காபியும், செய்தித்தாளும் சரியான நேரத்துக்கு வந்து விட்டால் போதும், அவனுக்கு ஒரே மகிழ்ச்சி.
இப்படி இதையே நினைத்துக் கொண்டிருப்பவனுக்கு, மேலே சொன்ன பகவான், கஜேந்திரனின் ஞாபகம் எப்படி வரும்? அதையும் தான் கொஞ்சம் நினைத்துப் பாருங்களேன்!
***
ஆன்மிக வினா-விடை!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.