கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 செப்
2012
00:00

செப்., 8 - கண் தான தினம்

"வாக்கு கொடுக்கக் கூடாது. கொடுத்தால் காப்பாற்றியாக வேண்டும். அதிலும், பெண்களுக்கு வாக்களித்து விட்டு, அதைச் செய்ய மறுத்தால், கண் பார்வையே போய் விடும்' என்கின்றன நம் புராணங்கள். சுந்தரரின் வரலாறு இதை நமக்கு உணர்த்துகிறது.
திருநாவலூரை சொந்த ஊராகக் கொண்ட சுந்தரருக்கு, திருவெண்ணெய்நல்லூரில் திருமணம் செய்ய ஏற்பாடாகி இருந்தது. ஆனால், சிவன் அதைத் தடுத்து, சுந்தரரை தன் அடிமை என நிரூபித்து, தன்னுடன் அழைத்துச் சென்றார். அன்று முதல், சிவத்தொண்டையே செய்து வந்தார் சுந்தரர். பூர்வ ஜென்மத்தில், சுந்தரர் சிவனது அடிமையாக இருந்தார். அவர் தேவலோகத்தில் இருந்த காலத்தில், அங்கிருந்த இரண்டு பெண்கள் மீது காதல் கொண்டார். அவர்களும் அவரை விரும்பினர். இதன் காரணமாக, அவர்கள் பூலோகத்தில் பிறக்க வேண்டியதாயிற்று. ஒரு பெண், பரவை என்ற பெயரில் திருவாரூரிலும், மற்றொருவர் சங்கிலி என்ற பெயரில் திருவொற்றியூர் அருகிலுள்ள ஞாயிறு என்ற கிராமத்திலும் அவதரித்தனர்.
ஒரு சமயம், திருவாரூர் சென்ற சுந்தரர், அங்குள்ள கோவிலுக்கு வந்த பரவையைப் பார்த்தார்; காதல் கொண்டார். சிவன் அருளால் அவர்களுக்கு திருமணமும் நடந்தது. சில காலம், அங்கு தங்கியிருந்த அவர், சிவத்தலங்களைத் தரிசிப்பதற்காக மனைவியை ஊரிலேயே விட்டுவிட்டு கிளம்பினார். திருவொற்றியூர் வந்த போது, அங்கே கன்னிமாடம் அமைத்து தங்கியிருந்த சங்கிலியை கண்டார். பூர்வஜென்ம வினைப் பயனால், அவளையும் திருமணம் செய்யும் எண்ணம் கொண்டார்.
சங்கிலியின் கனவில் தோன்றி, "என் பரமபக்தன் சுந்தரனை மணம் செய்து வாழ்வாயாக' என்றார் சிவன்.
அதற்கு சங்கிலி,"அவர் ஏற்கனவே திருமணமானவராயிற்றே...' என்றதற்கு,"உன்னை விட்டு அவன் பிரியாமல் இருக்க வாக்குறுதி தரச் சொல்கிறேன்...' எனக்கூறி மறைந்தார் சிவன்.
இதேபோல சுந்தரர் கனவில் தோன்றி,"உனக்கும், சங்கிலிக்கும் திருமணம் நிச்சயம். ஆனால், அவளைப் பிரிய மாட்டேன் என அவளிடம் சத்தியம் செய்ய வேண்டும்...' என்றார்.
இதன்பின், சுந்தரரும், சங்கிலியும் சந்தித்தனர்.
சங்கிலியிடம், "உன்னைத் திருமணம் செய்த பின், திருவொற்றியூரை விட்டு எங்கும் போக மாட்டேன்...' என வாக்கு கொடுத்தார் சுந்தரர். இருவருக்கும் திருமணம் நடந்தது. சிலகாலம் சென்றது. திருவாரூரில் வசந்தவிழா விசேஷம். அதை எப்படியாவது பார்த்தாக வேண்டுமென்ற எண்ணம் சுந்தரருக்கு பிறந்தது. சங்கிலிக்கு கொடுத்த வாக்கை மீறி, அவளுக்குத் தெரியாமல், ஊர் எல்லையைத் தாண்டினார் சுந்தரர். உடனே அவரது கண் பார்வையைப் பறித்து விட்டார் சிவன்.
அதன்பின் பல சிவத்தலங்களுக்கு சென்று, பார்வை வேண்டி பதிகம் பாடினார் சுந்தரர். அவர் மீது கொண்ட இரக்கத்தால் திருவெண்பாக்கம் (திருவள்ளூர் அருகிலுள்ள திருவளம்புதூர்) என்ற தலத்தில் ஒரு ஊன்றுகோல் மட்டும் கிடைக்கச் செய்தார் சிவன். காஞ்சிபுரம் வந்து ஏகாம்பரநாதரைத் தரிசித்து உருகிப் பாடியதும், சிவனும் மனமுருகி இடதுகண் பார்வையை அளித்தார். அதன்பின் பல தலங்களைக் கடந்து திருவாரூரை அடைந்தார். அங்கு வந்து இறைவனிடம் மன்றாடி, வலது கண் பார்வையையும் தந்தருள வேண்டினார். அவருக்கு பார்வை கிடைத்தது.
சுந்தரர் போன்ற தெய்வப்பிறவிகளின் மூலம், இறைவன் நமக்களித்துள்ள பாடம், வாக்கு தவறக் கூடாது என்பது தான்!
இது ஒருபுறமிருக்க, பார்வையற்றவர்களுக்கு கண் தானம் செய்ய வேண்டும் என்றும் சிவன் கண்ணப்ப நாயனார் மூலமாக நமக்கு உணர்த்தி இருக்கிறார். கண் தானத்தின் அவசியம் அந்தக் காலத்திலேயே வலியுறுத்தப் பட்டிருக்கிறது.
இறப்புக்கு பிறகும், இந்த பூமியில் வாழ்வதற்கு வாய்ப்பளிப்பது கண் தானம். கண் தான நாளில், கண்களைத் தானம் செய்வதுடன், கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் நற்பண்பை வளர்க்கவும் உறுதி எடுப்போம்.
***

தி. செல்லப்பா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரோஹித் - சென்னை,இந்தியா
03-செப்-201217:37:50 IST Report Abuse
ரோஹித் அண்ணா, எனக்கு இதுல "சின்ன வீடு செட் பண்ண இறைவனே உதவி செய்ற மாதிரி இல்ல இருக்கு?". இதை வேறு உதாரணத்தின் மூலம் விளக்கி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - denhelder,நெதர்லாந்து
03-செப்-201201:47:07 IST Report Abuse
GOWSALYA மிக நன்றி சகோதரர் செல்லப்பா ...உங்க உதவியால் தெரியாததையும் தெரிந்துகொள்ள உதவியா இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
ரெங்கன் - India,இந்தியா
02-செப்-201208:52:06 IST Report Abuse
ரெங்கன் திரு.செல்லப்பா வும், திரு.வைரம் ராஜா கோபாலும், தினமலரின் அசைய கூடிய சொத்துகள் என்றல் அது மிகையல்ல.... வாழ்க உங்கள் தொண்டு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.