வெற்றியின் ரகசியம்! (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 செப்
2012
00:00

வாழ்க்கையில் முழுமையான வெற்றி சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அந்த சிலருக்கு மட்டுமே தெரிந்த வெற்றியின் ரகசியம், பலருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதுதான் இந்த வழிகாட்டித் தொடர்.
பல்வேறு துறைகளில் சாதனையாளர்களை நேரில் சந்தித்து அறிந்த குணநலன்களையும், வாழ்க்கையில் பல அம்சங்களைத் தெளிவு படுத்திய சிறந்த நூல்களின் சாராம் சங்களையும், ஒன்று சேர்த்து குழைத்ததில் கிடைத்த வண்ணக் கலவையை, சமூக அக்கறையென்னும் தூரிகையால் வரைந்த ஓவியம் தான், "வெற்றியின் ரகசியம்' என்னும் இந்தத் தொடர்.
வாழ்க்கையில் வெற்றியடைய யாருக்குத்தான் இஷ்டமில்லை. "நாம் நினைத்ததை சாதித்தோம்' என்ற வெற்றி உணர்வில் கிடைக்கும் சந்தோஷத்திற்கு ஈடு இணை ஏது? ஆனால், நாம் நினைத்ததைச் சாதிக்க, போதுமான அளவு முயற்சி எடுத்தோமா என்பது தான் கேள்வி.
"வெற்றியின் ரகசியம்' என்ற இந்தச் சுயமுன்னேற்றத் தொடர், உங்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் கொடுத்து, வெற்றிப் பாதையில் கைப்பிடித்து வழிநடத்திச் செல்லும்.
எல்லா வயதினரும், எல்லாத் துறையினரும் எளிதில் பின்பற்றக்கூடிய விஷயங்களை இந்த வழிகாட்டித் தொடரில் நீங்கள் காணலாம். இந்தத் தொடரில், வெற்றிக்கனியைப் பல்வேறு கோணங்களில் பார்த்து, அதைப் பறிப்பதற்கான உத்திகளும் சொல்லப்பட்டிருக்கின்றன.
"வழிகாட்டுவதற்கு யாரும் இல்லையே!' என்று ஆதங்கப்படும் இளைஞர்களுக்கு, இத்தொடர், வழிகாட்டியாக அமையும். "முன்னுக்கு வர வேண்டும், பெயர் சொல்லும்படி எதையாவது சாதிக்க வேண்டும்' என்று துடிப்பவர்களுக்குச் சரியான திசை காட்டி; துடிப்புடன் இருக்கும்போது ஆர்வக் கோளாரினால் தடுக்கி விழுபவர்களுக்குத் தூண்டுகோலாக இருக்கும்; சோர்வடைந்தவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்; சாதித்தவர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து, எங்காவது தடம் புரண்டிருந்தால், இனிவரும் காலங்களில் தங்களின் பாதையைச் சரி செய்து கொள்ள உதவும்.
மிக வேகமாக மாறிவரும் நவநாகரிக சூழலில், குடும்பம், தொழில், நட்பு, உறவினர்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த பொறுப்புகளைப் பதற்றமில்லாமல், நிதானத்துடன் கையாளும் உத்திகளைப் பற்றி இத்தொடரில் தெரிந்து கொள்ளலாம்.
"நம்மால் முடியாது' என்று, நம் உயரத்தை நாமே குறைத்துக் கொள்ளாமல், நமக்குள் இருக்கும் மாபெரும் சக்தியை நம்புவோம். நம் வளர்ச்சி, பெரிய ஆலமரமாக விஸ்வரூபம் எடுப்பதற்குத் தேவையானதெல்லாம், நம் மனதில் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய, "எண்ணம்' என்கிற சிறிய விதை. இந்தத் தொடரைத் தொடர்ந்து படிக்கும்போது, அந்த விதை உங்கள் மனதில் விழுந்து, வேர் ஊன்ற ஆரம்பித்து விடும்.
நம் ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் அர்த்தமுண்டு. புல், பூண்டு மற்றும் விட்டில் பூச்சி போல, "பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம்' என்று இல்லாமல், நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக எதையாவது சாதித்து விட்டுச் செல்ல வேண்டும். மனிதன் பறவையைப் போல பறக்க இயலாது; யானை அளவுக்கு பலம் கிடையாது; சிறுத்தை அளவுக்கு வேகமாக ஓட முடியாது. ஆனால், எந்த விலங்கினத்திற்கும் இல்லாத சக்தி மனிதனுக்கு உண்டு. அது தன் சிந்தனாசக்தியின் மூலம், தன்னுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளும் சக்தி.
"நம் வாழ்க்கை நம் கையில்' என்று நம்புவோம். நம் இன்றைய நிலை, நாம் இதுவரை எடுத்த முடிவுகளின் விளைவுதான். நாம் இன்று எடுக்கப் போகும் முடிவு மற்றும் எடுத்த முடிவைச் செயலாக்கும் விதம்தான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது.
நம் வருங்காலக் கதை, திரைப்படமாக வரப் போகிறது என்று வைத்துக் கொள்வோம்... அதில், நாம்தான் கதாநாயகன் அல்லது கதாநாயகி. அந்தத் திரைப் படத்திற்குத் திரைக்கதை எழுதும் பொறுப்பு நம்மிடம் ஒப்படைக்கப்பட்டால் எப்படியிருக்கும் எனக் கற்பனை செய்து பாருங்கள். அந்தத் திரைக்கதை நிஜமாகும் என்ற நம்பிக்கையோடு, இன்றே எழுதத் துவங்குங்கள்.
சராசரி எண்ணங்கள் என்ற சங்கிலி நம்மை, "சாமானியர்' என்கிற கூண்டுக்குள் கைதியாக வைத்திருக்கிறது. இந்தத் தொடர் உங்களைக் கூண்டை <உடைத்து விடுதலை செய்யும். இந்த பரந்து விரிந்த உலகம், உங்களின் கால் தடம் பதிந்து, வெற்றி பெறக் காத்துக் கிடக்கிறது. நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில், வெற்றிபெற சரியான தருணம் வந்து விட்டது.
இந்த இதழ் உங்கள் கையில் வந்த நேரம், உங்களுடைய வாழ்க்கையில் நல்ல திருப்புமுனையை ஏற்படுத்தப் போகிறது. இந்தத் தொடர், உங்களுடைய வாழ்க்கையை எப்படி மேம்படுத்தியது என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள். வெற்றி, உங்கள் விலாசம் தேடி வந்து கொண்டிருக்கிறது. உங்களுடைய மனக்கதவைத் திறந்து வையுங்கள்.
தொடரும்.

சி. அருண்பரத் - கூடுதல் ஆணையர், வருமாவ வரித்துறை, மும்பை.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - Bangalore,இந்தியா
20-செப்-201217:56:56 IST Report Abuse
anbu மிகவும் பயனுள்ளதாகவும், மிகவும் நன்றாக உள்ளது உங்கள் கட்டுரை தொடரட்டும் உங்கள் கட்டுரை, எட்டி வைக்கட்டும் சிகரங்களை நோக்கி.. வாழ்த்துகள். என்றும் அன்புடன் அன்பு.கி பெங்களூர் பயனுள்ள கட்டுரை
Rate this:
Share this comment
Cancel
senthil - tirupur,இந்தியா
05-செப்-201214:46:43 IST Report Abuse
senthil மிக்க நன்றி
Rate this:
Share this comment
Cancel
முத்தமிழ் - kallakurichi,இந்தியா
05-செப்-201209:58:59 IST Report Abuse
முத்தமிழ் சூப்பர் நியூஸ்............
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
04-செப்-201221:49:55 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar வெற்றின் இரகசிய கருத்துகள்.., நம் தமிழ் தேச பிதா வ.உ.சி..பிறந்த நாள் பரிசுகள் வாழ்வில் எல்லாவகையிலும் முன்னேற நினைகிற...நான் கொடுத்துள்ள மனிதனின் குண நாணயம் - வலிமைக்கு மார்க்கம் - பூமியை விட உறுதி யானது வாய்மை வெல்லும் உலக முழுதும் வளர.., நாளை 05 -09-1872 என்றும் அவர் ஞாபகம் என்றும் உலக மக்களுக்கு வரவேண்டும் - பூபதியார்
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
04-செப்-201220:48:02 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar வாழ்வின் வெற்றி இரகசியம்.., நல்ல கல்வியும்.., புத்தகம் உத்தம நண்பனாகவும்..,கடின உழைக்கும் ஆர்வமும்..,தொடர் முயற்சியும் இருக்க வேண்டும்! சூய்நிலை வெல்லும் ஆற்றலும் இருக்க வேண்டும்! இதற்கு உண்மையும் நேர்மையும் உத்தம குணங்கள் ஆகும்! எல்லோரம் சிறந்த வெற்றி யாளர்களே - இதை சரியாக தெரியாதவர்கள் தான் தோல்வியாளர்கள். வாழ்க வெற்றியுடன் - ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel
pushparaj - singpore  ( Posted via: Dinamalar Android App )
04-செப்-201216:12:56 IST Report Abuse
pushparaj good news
Rate this:
Share this comment
Cancel
pushparaj - singpore  ( Posted via: Dinamalar Android App )
04-செப்-201216:05:30 IST Report Abuse
pushparaj very good
Rate this:
Share this comment
Cancel
04-செப்-201212:56:23 IST Report Abuse
பஷீர் அஹமத்.நூ வெரி வெரி தேங்க்ஸ் சார்
Rate this:
Share this comment
Cancel
mahendran - thirunelveli  ( Posted via: Dinamalar Android App )
04-செப்-201208:36:19 IST Report Abuse
mahendran THIS IS VERY USEFUL TO YOUNGSTERS. THANKS FOR PUBLISHING.
Rate this:
Share this comment
Cancel
Alamu - Dindugal,இந்தியா
03-செப்-201220:17:48 IST Report Abuse
Alamu Great news. Looking forward for your series Sir.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.