ஐந்து வயதே நிரம்பிய அனையா என்ற சிறுமியை, சுறா மீன்களுடன் விளையாட விட்டு, வேடிக்கை பார்த்துள்ளனர், அந்த சிறுமியின் பெற்றோர். இந்த வினோதமான குணாதிசயமுடைய பெற்றோர், அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். சமீபத்தில் பஹாமஸ் என்ற சுற்றுலா தலத்துக்கு சென்றபோது, தங்கள் மகளையும் கூட்டிச் சென்றனர்.
அங்கு, சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக, மிகப் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள குளத்தில், சுறா மீன்கள் துள்ளி குதித்து விளையாடுவதை பார்த்து, ஆச்சரியம் அடைந்த அனையா, தானும், அந்த சுறா மீன்களுடன் நீந்தி விளையாடப் போவதாக, பெற்றோரிடம் கூறினாள்.
சிறுமியின் விருப்பத்துக்கு, அவர்கள் தடை போடவில்லை. சுறா மீன்களுடன் நீந்தி விளையாட, தங்கள் மகளை அனுமதித்தனர். யார் செய்த புண்ணியமோ, சிறுமிக்கு எதுவும் ஆகவில்லை. ஒருவேளை சுறாக்கள், ஜாலி மூடில் இருந்ததோ, என்னவோ...
சுறாக்களுடன், தங்கள் மகள் விளையாடியதை வீடியோ எடுத்து, இணைய தளத்திலும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகளை பார்த்து, கொதித்துப் போன மக்கள்,"ஈவு இரக்கமற்ற தாய் - தந்தையாக இருக்கின்றனரே...' என, கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
ஆனால், சிறுமியின் பெற்றோர், "எதில் தான் ஆபத்து இல்லை. வாழ்க்கையே கொஞ்ச காலம் தான். அந்த கொஞ்ச கால வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும், சுவாரசியமாக அனுபவிக்க வேண்டும். அதற்காகத் தான், இப்படி செய்தோம்...' என்று கூறுகின்றனர்.
— ஜோல்னா பையன்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.