கிருஷ்ணகான சபையின் 57வது கோகுலாஷ்டமி சங்கீத உற்சவத்தின் ஆறாம் நாள் நிகழ்ச்சியாக சாஷ்வதி பிரபுவின் பக்திரசக் கச்சேரி நடைபெற்றது. சாஷ்வதிபிரபு கிருஷ்ணகான சபையின் செயலாளர் பிரபுவின் புதல்வியும் அமரர் யக்ஞராமனின் பேத்தியுமாவார். தனது கச்சேரியை அவர் மூன்று பகுதிகளாக பிரித்து முதல் பகுதியில் தனது குரலிசைக் கச்சேரியையும், இரண்டாவது பகுதியில் சாஷ்வதி இசையமைத்து வெளிட்ட, வெளியிடப்போகும் ஆல்பத்திலிருந்து பாடல்களை எடுத்து அதை நடன ஆச்சார்யகுரு ராதிகாசூரஜித்தின் சிஷ்யைகள் நடனமாடினர்.
மூன்றாவது பகுதியில் சாஷ்வதியின் வலைதளமும், அவரது ஆறாவது ஆல்பத்தின் குறுந்தகடும் வெளியிடப்பட்டது. முதல் பகுதியில் சாஷ்வதி தனது பக்திரச இன்னிசை கச்சேரியின் துவக்கமாக நீலாம்பரி ராகவர்ணமும், அதைத் தொடர்ந்து தியாகராஜரின் "சோயில்லு சப்தஸ்வர' கீர்த்தனையைப் பாடினார்.
அடுத்து தோடியை பிரதான ராகமாக எடுத்துக் கொண்டு ராக ஆலாபனை செய்து, "கதி நீ எவ்வரி' கீர்த்தனையை மிக அழகாக கற்பனை ஸ்வரம் கொடுத்துப் பாடி தனி ஆவர்தனச் சுற்றுக்களை பி.சிவராமன் மிருதங்கத்திலும், சுரேஷ் தபலாவிலும் இணைந்து கொடுத்து முடித்தனர். சாஷ்வதி தனது இன்னிசைக் கச்சேரியில் மிகப்புதுமையான ஒன்றை மிக தைரியமாக செய்திருந்தார். கீ-போர்டில் கார்ட்ஸ்ஸை சத்ய நாரயணனுக்கு வாசிக்கக் கொடுத்து, கர்நாடக இசைக் கச்சேரியில் ஒரு புதுக் கோணத்தை கொடுத்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்று.
அதைத் தொடர்ந்து, சாஷ்வதிபிரபுவின் முதல் ஆல்பத்திலிருந்து, "ஆசை என் நெஞ்சில்' என்ற பாடலுக்கு காதலை வெளிப்படுத்த கண்ணனின் கோபிகைகள் கண்ணனை கண்டதும் எப்படி காதல் வசப்பட்டு அதில் கட்டுண்டனர் என்பதை ராதிகா சூரஜித்தின் மாணாக்கியர்கள், ஆரபி, கிருத்திகா மற்றும் ஸ்ருதி ஆடினர். இரண்டாவது பாடலுக்கு சாஷ்வதியின் அன்றைய தின வெளியீட்டு குறுந்தகட்டிலிருந்து "வெள்ளை தாமரை பூவிலிருப்பாள்' என்ற பாரதியின் பாடலுக்கு முற்றிலும் வித்தியாசமாக அனைவரது நடனமும் இருந்தது.
இந்த குறுந்தகட்டில் ஏழு பாடல்கள் தேவியை துதிப்பதாக கொடுத்துள்ளார். இக்குறுந்தகட்டை வெளியிட இசைக் கலைஞர் பத்ம ஸ்ரீ அருணா சாய்ராமும், குழலிசைக் கலைஞர் ரமணி முக்கிய விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக வயலின் இசைக் கலைஞர் ஸ்ரீ ராம் பரசுராம் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-ரசிகப்ரியா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.