நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

17 மே
2010
00:00

நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம்

அளவற்ற இசையை இந்திய ரசிகர்களுக்கு வழங்குவதற்காக, சென்ற ஏப்ரல் இறுதியில் தன் ஓவி மியூசிக் இணையதளத்தை நோக்கியா செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தது. கம்ப்யூட்டர் அல்லது மொபைல் வழியாக, இந்த தளத்திற்குச் சென்று, தேவையான மியூசிக் பைல்களை, எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி டவுண்லோட் செய்து கொள்ளலாம். இந்த வசதி நோக்கியாவின் ஸ்மார்ட் போன்களை வாங்குவோருக்கு மட்டும் ஓராண்டுக்கு இலவசம். 5 மற்றும் எக்ஸ் வரிசை (ஙீ6, ஙீ2, 5800ஙீணீணூஞுண்ண்Mதண்டிஞி, 5530, 5235 மற்றும் 5130) நோக்கியா மாடல்களை வாங்குவோர் இந்த இலவச மியூசிக் பைல்களை, ஓராண்டுக்கு இலவசமாக அனுபவிக்கலாம். ஆனால் இறக்கம் செய்யப்பட்ட பாடல்களை எப்போதும் வைத்து கேட்டு மகிழலாம். இந்த போன்களின் விலை ரூ.6,000 முதல் ரூ. 18,000 வரையில் விற்பனையாகின்றன.

இலவச காலம் 12 மாதங்கள் முடிந்த பின்னர், கட்டணம் வசூலிக்கப்படுமா என்பது குறித்து நோக்கியா இன்னும் முடிவெடுக்க வில்லை. திருட்டு நகல் எடுத்து பயன்படுத்துவது மிக அதிகமாக உள்ள இந்நாளில், கட்டணம் வாங்குவது பலனளிக்குமா என்பதே இங்கு கேள்விக் குறி.

கட்டணம் வசூலிக்கும் பட்சத்தில், ஏற்கனவே இந்த துறையில் இயங்கி வரும் பார்தி ஏர்டெல், வோடபோன் எஸ்ஸார் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் நோக்கியா போட்டியிட வேண்டியதிருக்கும். இவை மிக மிகக் குறைவாக, ஒரு பாடலுக்கு ரூ.2 முதல் ரூ. 5 வரை கட்டணமாக வசூலிக்கின்றன.

நோக்கியாவின் ஓவி மியூசிக் ஸ்டோரில் ஏறத்தாழ 40 லட்சம் பாடல்கள் டவுண்லோட் செய்திடக் கிடைக்கின்றன. எங்களுடன் இந்த துறையில் போட்டியிடும் அடுத்த நிறுவனத்திடம் ஒரு லட்சம் பாடல்களே இருப்பதால், நோக்கியாவுடன் வேறு நிறுவனங்கள் போட்டியிட முடியாது என நோக்கியா நிறுவனத்தின் துணைத் தலைவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சீனாவிலும் இந்தோனேஷியாவிலும் நோக்கியா இதே போன்ற இசைத் தளங்களைத் திறந்துள்ளது. இவ்வகையில் இந்தியாவில் திறக்கப்பட்டது 30 ஆவது தளமாகும். இந்த இசைத்தளத்தின் முகவரி: ட்தண்டிஞி.ணிதிடி.ஞிணிட்/டிண/ஞுண இதில் உள்ள பாடல்கள் பல வகைப்படுத்தப்பட்டு கிடைக்கின்றன. ஆணிடூடூதூதீணிணிஞீ, குதஞூடி, ஐணஞீடிணீணிணீ, ஐணஞீடிச்ண இடூச்ண்ண்டிஞிச்டூ, ஞீஞுதிணிtடிணிணச்டூ, எடச்த்ச்டூண், Mச்டூச்தூச்டூச்ட், கூச்ட்டிடூ, ஆஞுணஞ்ச்டூடி, கதணடீச்ஞடி, Mச்ணூச்tடடி மற்றும் கீணிஞிடு, கீச்ணீ, ஏடிணீ டணிணீ, கணிணீ போன்ற எண்ணற்ற தலைப்புகளில் இவை வகைப்படுத்தப்பட்டு உள்ளது.


Advertisement