சென்ற பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டு, தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் எல்.ஜி. நிறுவனத்தின் இ 612 ஆப்டிமஸ் எல் 5 மொபைல் ஒரு 3ஜி மொபைல் போனாகும். இதில் ஜி.எஸ்.எம். மினி சிம் ஒன்றைப் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 118.3x66.5x9.5 மிமீ. எடை 125 கிராம். பார் டைப் போனாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் போனில், 4 அங்குல அகலத்தில் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, போனில் 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, 512 எம்.பி. ராம் வசதி, நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் தொழில் நுட்பம், வை-பி, வைட் லேன், மைக்ரோ யு.எஸ்.பி., ஆட்டோ போகஸ், எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 5 எம்.பி. திறனுடன் கேமரா, ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர், 800 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கோர்டெக்ஸ் ஏ5 ப்ராசசர், குவால்காம் ஸ்நாப் ட்ரேகன் சிப் செட், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, ஐஸ்கிரீம் சாண்ட்விச் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர், பிரவுசர், டாகுமெண்ட் வியூவர், ஜி.பி.எஸ்., மற்றும் ஜாவா இயக்கம் ஆகியன தரப்பட்டுள்ளன.
1500 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தொடர்ந்து 10 மணி நேரம் பேசும் வசதியைத் தருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 900 மணி நேரம் மின் சக்தியைத் தக்கவைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.12,500.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.