மின்சாரம் தேவையில்லாத குளிர்சாதனப்பெட்டி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 நவ
2012
00:00

ஸிந்துச் சமவெளி நாகரிகத்திலிருந்தே களிமண்ணால் செய்யப்பட்ட சட்டி, பானைகள், செங்கற்கள் இவை பயன்பாட்டிலிருந்தன. இப்போது பத்தாம் வகுப்புக் கூடத் தேறாத திரு மன்சுக்பாய் பிரஜாபதி என்பவர் களிமண்ணைக் கொண்டு பல நவீன சாதனங்களைச் செய்திருக்கிறார் என்றறிய வியப்பாக இல்லையா? ஆனால், இது உண்மைதான்.
திரு. மன்சுக்பாய் குலாலர் வகுப்பைச் சேர்ந்தவர். மண்பானைகள், செங்கல்கள் செய்வதே இவர் குலத்தொழில். இவரது மனைவி தனக்கு ஒரு Non-stick Pan வேண்டுமென்று விரும்பினார். ஆனால் இவரால், அதன் விலை காரணமாக அதை வாங்க இயலவில்லை. அதனால் களிமண்ணைக் கொண்டே Non-stick Pan தயாரித்தால் என்ன என்று அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அதன் முயற்சி வெற்றியடைந்ததால், தன் வழக்கமான தொழிலை விட்டுவிட்டு ரூ.30000/- கடன் வாங்கி, களி மண்ணால் வீட்டுக்குப் பயன்படும் நவீன பொருட்களைச் செய்யத் தொடங்கினார்.
முதலில் மிகவும் நஷ்டம் அடைந்ததால், எங்கே தனது வீட்டையே விற்க நேரிடுமோ என்று நினைத்தார். அதிர்ஷ்டவசமாக இவரது புதிய முயற்சியில், IIM அகமதாபாத், பேராசியரும், நேஷனல் இன்னொவேஷன் கமிஷனின் வைஸ்சேர்மனுமான திரு. அனில் கே குப்தா என்பவர் அக்கறை காட்டி, இவருக்குப் பண உதவி செய்தார். இப்போது திரு. மன்சுக்பாய் இவர் கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தியதும் அல்லாமல் தமது தொழிலை மேலும் அபிவிருத்தி செய்யவிருக்கிறார். இவரது அடுத்த இலக்கு களிமண்ணால் ஆன வீடு - இதற்கு மின்சாரம் தேவைப்படக்கூடாது - என்பதுதான்.
இவர் களிமண்ணால் மின்சாரமின்றி செயல்படக்கூடிய குளிர்சாதனப்பெட்டி. பிரஷர்குக்கர் (விஸில் அடிக்கும்), நான்-ஸ்டிக் பான், (இவை எல்பிஜி அடுப்பிலேற்றக்கூடியவை) 0.9 மைக்ரான் வாட்டர் ஃபில்டர் போன்ற சாதனங்களைச் செய்துள்ளார். இவற்றையெல்லாம் செய்ய இவருக்குப் பல ஆண்டுகள் பரிசோதனையும், தொழில்நுட்பமும் தேவைப்பட்டன.
இவர் செய்துள்ள குளிர்சாதனப்பெட்டி நடுவில் இடைவெளியிட்ட இரு சுவர்கள் அமைந்தது. இந்த இடைவெளியில் நீரை நிரப்பிவிட வேண்டும். வெளி உஷ்ணத்தினால் இந்த நீர் ஆவியாகும்போது குளிர்ச்சியாகிறது. இந்த நீர் நல்ல குடிநீராக இருப்பது நல்லது.
(மண்பானையில் நீர் நிரப்பி நான் அதனுள் நன்னாரி வேரைப் போட்டு வைத்து, நல்ல கோடைகாலங்களில் குளிர்ந்த நல்ல ஆரோக்கியமான, நீரை அருந்தி வந்தோமல்லவா? - அதே டெக்னிக்தான் இதிலும் பயன்படுகிறது).
இக் குளிர்சாதனப் பெட்டியும் உள்ளே குளிர்ந்து அதனுள் வைக்கப்பட்டுள்ள காய், கனிகளைக் கெடாமல் பாதுகாக்கிறது. அனால் நமது நாட்டு சீதோஷ்ண நிலைக்கு இதில் பாலை அதிக நாட்கள் வைப்பது கூடாது. காய்கறிகள், பழங்கள் இவற்றை ஒரு வாரத்திற்குக் கெடாமல் வைக்க முடியும். இதற்கு மின்சாரம் தேவையில்லை. மின்செலவு, மெயின்டனன்ஸ், க்ரீன்ஹவுஸ் காஸ் போன்ற தொல்லைகள் இல்லை.
இந்தக் குளிர் சாதனப்பெட்டியின் சுவர்களுக்கிடையே ஊற்றியிருக்கும் நீரும் குளிர்ந்தே இபுருக்குமாதலால் இந்த நீரைக் குடிப்பதற்குப் பயன்படுத்த ஏற்றவாறு இதில் ஒரு குழாயும் பொருத்தப்பட்டுள்ளது! நீர் குறையக் குறைய அவ்வப்போது நீர் நிரப்புவது அவசியம்.
இவரது அரிய கண்டுபிடிப்புகளுக்காக இவருக்கு IIT மதறாஸ் 2011ஆம் ஆண்டின் வில்கிரோ க்ராஸ்ரூட்ஸ் இன்னோவேடர் (Villgro Grassroots Innovator Award) பரிசு வழங்கப்பட்டது. ஃபோர்ப்ஸ் பத்திரிகை இவரை 2010ம் ஆண்டின் Most Powerful Rural Enterpreneur என்று பாராட்டிக் கௌரவித்துள்ளது. அமெரிக்கா மஸாசுவெட்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, (Bosch, Siemens Hausgerate) போன்ற ஸ்தாபனங்கள் இவரது கண்டுபிடிப்பான இந்த குளிர் சாதனப் பெட்டியில் அக்கறை காட்டி உள்ளன. இவரது பொருள்களுக்கு இதுவரை 41 நாடுகளிலிருந்து ஆர்டர்கள் வந்துள்ளன. mansukbhaiatinfo@mitticool என்ற ஈமெயிலிலும், தொலைபேசி - 0-2828221156 - அல்லது Desi - 2491-1182 மூலமும் இவரைத் தொடர்பு கொள்ள முடிகின்றது.
களிமண் மகத்துவம்: நமது கிராமங்களில் நமது முன்னோர்கள் களிமண்ணால்தான் வீடுகளைக் கட்டினார்கள். களிமண் சுவர், களிமண் தரை, சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட நாட்டு ஓடுகள், இவ்வீடுகளின் தன்மை என்ன தெரியுமா? கோடை நாட்களில் உஷ்ணம் தெரியாது; குளிர் நாட்களில் குளிரும் தெரியாது. இயற்கையின் அமைப்பு அப்படி.
பசுஞ்சாணம் கொண்டு தரைமெழுகப்படும். பசுங்சாணத்திற்கு அணுசக்தியின் பாதிப்பையும் தடுக்கும் தன்மை உண்டு. மேலும் நமக்கு அபாயமற்ற கிபருமிநாசினியும் கூட. சமைப்பதற்கு மண்பானைகள், சமையலுக்கான சாமான்களைப் பாதுகாத்து, சேமித்து வைத்துக்கொள்ளப் பானைகள், படுப்பதற்குக் கோரைப்பாய்கள். குளிர்காலத்தில் குளிருக்கு அடக்கமாகவும் இருக்கும். கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும். நெற்குதிர்கள் கூட சுட்டகளிமண்ணால் ஆனவையே.
இவ்வாறு இயற்கையோடு இயல்புடன் வாழ்ந்து வந்தபடியால் சுற்றுப்புறச்சூழல் மாசுப்படவில்லை. மேலும் கிராமக் கைத்தொழில்களும் செழித்துவந்தன. இவ்வாறு ஒவ்வொன்றுமே இயற்கையுடன் ஒட்டி வாழ்க்கை நடத்திவந்தபடியால், கிராமப்புறத் தொழில் வளர்ந்தது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படவில்லை. கிராமமே செழிப்புடன் விளங்கியது.

- டி.எம். சுந்தரராமன்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.