2015 ஆம் ஆண்டிற்குள் இம்மாதிரியான ஒரு காரைத் தயாரிக்க ஒரு அமெரிக்க நிறுவனம் முயன்றுகொண்டிருக்கிறது. வேறுயார்? ஜெனரல் மோடார்ஸ்தான்.
இவர்கள் செய்ய முயற்சித்து, முடிவடையும் தறுவாயில் இருக்கும் இந்தப் புது விதமான கார் பல புதிய வசதிகள் கொண்டதாக இருக்கும்.
* தான் சென்று கொண்டிருக்கும் “லேனி’லிருந்து விலகாது.
* ஏதோனும் விபத்து நேரிடும் போல் இருந்தால் தானாகவே செயல்பட்டு, விபத்து நேராமல் தடுத்துவிடும்.
* தேவையானபோது தானே “ப்ரேக்’ போட்டுவிடும்.
இம்மாதிரி செயல்பாடுகளால் இது விபத்தில் சிக்காது.
2015 ஆண்டு மாடலாக இக்காரைச் செய்து விடலாமென்று இந்நிறுவனம் நம்புகிறது. இந்தக் கார் ஓட்டுனரின் வேலைகளை எல்லாம் தானே செய்துகொள்ளுமாதலால் ஓட்டுனருக்கு வேலையே இருக்காது. கவலை ஏதுமின்றி காரினுள் அமர்ந்து எங்கு செல்லவேண்டுமோ அங்கு செல்ல முடியும். எப்போது என்ன விபத்து வந்துவிடுமோ, வேறு ஏதேனும் கஷ்டம் ஏற்படுமோ என்ற யாதொரு கவலையுமின்றி, சுகமாகப் பயணிக்கலாம்!
காடிலாக் கம்பெனியின் மார்க்கெட்டிங் வைஸ் பிரசிடென்ட் டான் பட்லர் சொல்கிறார்: “ஒரு போதும் விபத்தே ஏற்படாத - வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளாத - நாள் வெகுதூரத்திலில்லை.’ இம்மாதிரியான எண்ணம் தோன்றுவதற்கு டெலிவிஷனில் ஒளிபரப்பான ஒரு கற்பனைக் கதாபாத்திரம் “ஜார்ஜிஜெட்சன்’ என்பவர் தமது ஓட்டுநரில்லாமல் ஓடும் காரில் பயணம் செய்வது போல் நிகழ்ச்சிதான் காரணம். இது உண்மையானதாக ஆவதற்கு இன்னும் சில ஆண்டுகளே உள்ளன.
ஸ்டீரிங் வண்டியினாலேயே கன்ட்ரோல் செய்யப்படும். அதேபோல வேகமும், நாம் செல்லும் திசையும் - எல்லாம் வண்டியிலேயே கன்ட்ரோல் செய்யப்படும். இவற்றிற்காக ராடார், காமிராக்கள், ஜிபிஎஸ் முதலிய சாதனங்கள் பொருத்தப் படுகின்றன. சும்மா பட்டனைத் தட்டிவிட்டால் போதும். கார் தானே இயங்கி ஓட ஆரம்பித்துவிடும். ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருப்பவர் ஸ்டிரிங்கில் கையை வைக்கத் தேவையில்லை. அதேபோல கால்களையும் - அதாவது பாதங்களையும் - பெடல்களில் வைத்தே இருக்க வேண்டிய அவசியமில்லை. சும்மா அமர்ந்தவாறு ஜன்னல் வழியே இயற்கையை, இடையூறின்றி வேறு கவலையின்றி ரசித்துக் கொண்டு பயணிக்கலாம்.
- சுமன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.