தினசரி மூன்று லட்சம் இட்லிகள்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 நவ
2012
00:00

மும்பை நகரின் மிகப் பெரிய குடிசைக் குடியிருப்புப் பகுதியான தாராவி, பலதரப்பட்ட காரணங்களாலும் நடவடிக்கைகளுக்காகவும் உலக மக்களின் கவனத்தைக் கவரும் சிறப்பைத் தன்னகத்தே கொண்டது. “ஸ்லம்டாக் மிலினர்’ என்ற திரைப்படம் தாராவியின் புகழை மேலும் உயர்த்திற்று.
மும்பை நகர “டப்பாவாலாக்களின்’ வியக்கத்தக்க “நெட்ஒர்க்’ சிஸ்டம், பிரிட்டிஷ் இளவரசரைக் கவர்ந்தது போல், தாராவியில் வாழும் தமிழ்க் குடும்பங்களின் மற்றுமொரு “நெட்ஒர்க்’ சிஸ்டம் விரைவில் உலகளவில் பேசப்படப் போகிறது.
557 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட தாராவியில் ஒரு குடும்பத்தின் குடியிருப்பு பரப்பளவு 15 * 15 அடிதான். மோசமான சுகாதாரச் சூழல்: தாராவியினரில் குற்றவாளியிலிருந்து கோட்-சூட்டை அணிந்து “மார்க்கெட்டிங்’ துறையில் வேலை செய்பவர்கள் வரை பலதரப்பட்டவர்கள் வாசம் செய்கிறார்கள்.
பஞ்சம் பிழைக்க மும்பை சென்ற தமிழ்க் குடும்பங்கள் “பராசக்தி’க் கால இட்லி வியாபாரத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டு அசத்திக் கொண்டிருக்கின்றன என்ற தகவல் வியப்பளிக்கிறது.
சுமார் 700 குடும்பங்களின் வீடுகளில் விடியற் காலை 3.00 மணிக்கு இட்லிப்பானைகள் அடுப்பின் மீது ஏறி உட்காருகின்றன. சாம்பார் மறு அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கிறது. கிரைண்டரில் தேங்காய்ச் சட்னி அரைபடத்துவங்குகிறது.
மும்பை நகரின் மத்தியப் பகுதி மேற்கு பகுதி, துறைமுகம் பகுதி எனப் பரந்து கிடக்கும் தனிக்கூலித் தொழிலாளர்களின் காலை நேரப் பசியைப் போக்க, இந்த இட்லிகளை, சட்னி, சாம்பாருடன் ஏந்தியவாறு “சாயனி’ பகுதியிலிருந்து தொடங்கி, “மாஹிம்’ பகுதி வரை பயணப்படுகிறார்கள், இந்த அனைவரும் நம் அரும் தமிழ் மக்கள்.
மல்லிகைப் பூவுக்கும், மல்லிகைப் பூப் போன்ற இட்லிக்கும் பெயர்போன மதுரைவாசிகள்தான் இந்த இட்லி வியாபார தாராவித் தமிழ்ப் பெருங்குடியினர். இட்லித் தயாரிப்பில் இவர்களை (மதுரை) அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்பது நாம் அறிந்த விஷயம். இருந்தாலும் மும்பை நகரை, டப்பாவாலாக்களுக்கு அடுத்து தற்சமயம் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் நம் தமிழர்கள். காகிதத் தட்டுக்களைக் கையில் ஏந்தியவாறு, ஒர வித்யாசமான ஒலி எழுப்பி, இவர்கள் மக்களின் நாக்கு ருசிக்கு சமிக்ஞை அனுப்புகிறார்கள்.
மூன்று மணி நேரத்தில், தாங்கிக் கொண்டிருந்த சுமை தீர்ந்துவிடுகிறது. அது பணமாக மாறி, சட்டைப் பையில் அமர்ந்து கொள்கிறது. வீடு வந்து, ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். மறுபடியும் மாலை 5 மணிக்கு அடுத்த நாள் வியாபாரத்திற்குத் தேவையான முன்னேற்பாடுகளில் இறங்குகிறார்கள்.
பதினைந்து நிமிடங்களில 100 இட்லிகளை அவிக்கும் அலுமினிய இட்லி பானைகள் வைத்திருக்கும் ஒரு குடும்பம் குறைந்த பட்சம் 1000 இட்லிகளையாவது விற்பனைக்குக் கொடுக்கிறது. நாளொன்றின், ஒரு குடும்பத்தின் வருவாய் 400 முதல் 600 ரூபாய். வீட்டில் இருந்தே உழைப்பவர்களும், மொபைல் வியாபாரியாகச் சுற்றி வருபவர்களும், குறைந்த பட்சம் மாதம் வருமானமாக 10 ஆயிரத்தைத் தொட்டு விட முடிகிறது என்கிறார்கள்.
மதுரைக்காரர்களுக்கு வெளிவேலைக்கு உதவ, தென் மாவட்ட கிராமப்பகுதியிலிருந்து பலர் வந்து கவிந்துள்ளனர். இந்த இட்லி வர்த்தகத்திற்கு.
தமிழர்கள் அதிகம் வாழும் மாதுங்காப் பகுதியில் உள்ள பஜனை சமாஜத்திற்கு எதிரில், 1987ஆம் ஆண்டு ஐயப்பன் இட்லிக் கடை ஒன்றைப் பஞ்சு சுவாமி என்பவர் தொடங்கினார். இவர் தாராவி பகுதிக்கு சைக்கிளில் கொண்டுவந்து, தமிழ்க் குடும்பங்களுக்கு இட்லி வியாபாரம் செய்தார். இதுதான் இன்றைய இட்லி வியாபாரத்தின் ஆரம்பப் பிள்ளையார் சுழி.
நாள் ஒன்றுக்கு 3 லட்சம் இட்லிகள் விற்பனையாகும் இந்த மினிக் கார்ப்பரேட் பிசினஸ் நெட்ஒர்க் விரைவில் டப்பாவாலாக்களுக்குக் கிடைத்த புகழோடு போட்டி போடக்கூடும் என்று துணிந்து சொல்லலாம்.
தமிழ்நாட்டுப் பலகார அடையாளமான இட்லி, தமிழர்களை உலக அளவு புகழ்பெறச் செய்யக் காரணமாக அமைந்திருப்பது பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரத்தில் உழைப்பு, பிழைப்பு என்ற உயரிய ஃபார்முலாவுடன் தமிழன் தாராவி குடிசைக் குடியிருப்புப் பகுதியில் கோலோச்சுகிறான் என்பதைப் பற்றிக் கேள்விப்படும்போது, மேலும் மனம் கூடுதல் மகிழ்ச்சியில் குதூகலம் அடைகிறது.

ஜனகன்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manmadhan - kargil,இந்தியா
14-நவ-201212:30:20 IST Report Abuse
manmadhan ஒரு பிளேட் அதாவது இரண்டு இட்லி பத்தே ரூபாய் தான் என்பதையும் குறிப்பிடிருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.