மரணமில்லா வாழ்வு கிடைக்கும்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 நவ
2012
00:00

பிறவி என்றால் மரணம் உண்டு. இது, எல்லா ஜீவன்களுக்கும் பொது. இதில், மரணத்தை கண்டு அஞ்சுபவர்களே அதிகம். ஒரு உபன்யாசகர் உபன்யாசம் செய்யும் போது, "மரணமில்லாமல் இருப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. நாளை இரவு 7:00 மணிக்கு உபன்யாசத்தின் போது, அது என்ன வழி என்பதை சொல்கிறேன்...' என்று சொல்லி, அன்றைய உபன்யாசத்தை முடித்து போய் விட்டார்.
மறுநாள் இரவு ஏழு மணிக்குள் கூட்டம் கூடி விட்டது. மரணம் இல்லாததற்கு வழி சொல்கிறேன் என்றால், யாருக்குத் தான் ஆசை இருக்காது. எத்தனை வயதானாலும், காது கேட்கவில்லை, கண் சரியாக தெரிவதில்லை. வாயில் ஒரு பல் கூட இல்லை. தடி இல்லாமல் நடக்க முடியாது என்ற நிலையில் இருந்தாலும், இன்னும் கொஞ்ச காலம் உயிர் வாழவே ஆசைப் படுவர். ஏதோ, அந்த லேகியம், இந்த லேகியம் என்று சாப்பிடுவர். எப்படியாவது இன்னும் சில காலம் வாழவே ஆசைப்படுவர்.
"நான் வாழ்ந்தது போதும். சீக்கிரம் போனால் நல்லது...' என்று எத்தனை பேர் சொல்வர். உயிர் மேல் அவ்வளவு ஆசை. ஆனால், எமன் கணக்கு வேறு. அதன்படி தான் அவன் நடந்து கொள்வான். மரணமில்லாததற்கு வழி சொல்கிறேன் என்ற உபன்யாசகர், என்ன சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள, அன்று கூட்டம் அதிகமாகவே இருந்தது. அவர் சொல்வதை எழுதிக் கொள்ள பேப்பரும், பேனாவும் சிலர் கொண்டு வந்தனர். சிலர், டேப் ரிக்கார்டர் கொண்டு வந்தனர். ஏழு மணி ஆயிற்று.
சகல ஆடம்பரத் துடன், சீடர்கள் சூழ வந்து, மேடையில் உட்கார்ந்தார் உபன் யாசகர். கூட்டத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டு பேச ஆரம்பித்தார்... "நேற்று உபன்யாசத்தில் மரணமில்லாமல் இருப்பது எப்படி என்பதை இன்று சொல்வதாகச் சொல்லியிருந்தேன் அல்லவா! இதோ சொல்கிறேன்... கேட்டுக் கொள்ளுங்கள் அல்லது எழுதிக் கொள்ளுங்கள்... மரணமில்லா மல் இருக்க வேண்டுமானால், பிறக்காமல் இருக்க வேண்டும். இது தான் ஒரே வழி...' என்றார்.
கூட்டத்தில் இருந்தவர்களுக்கு ஏமாற்றம். ஐந்து நிமிஷத்தில் கூட்டம் கலைந்து விட்டது. உபன்யாசகரும், சீடர்களும் கடைசியாக எழுந்து போயினர். மரணத்தை தவிர்க்க எல்லாருக்கும் ஆசை தான். ஆனால், அவன் விட்டு விடுவானா? நிமிஷம், நொடி தவறாமல் வந்து விடுவான். இருக்கும்போதே பகவானை வழிபட வேண்டும்.
***

ஆன்மிக வினா-விடை!


துளசியுடன், வில்வமும் சேர்ந்து வளர்ந்துள்ளதை வணங்கலாமா அல்லது கோவில்களில் நடலாமா?
இரண்டும் வீட்டில் வளர்வதே பெரிய பாக்கியம். தினமும் விளக்கேற்றி வழிபடுங் கள். உங்கள் வீடு மங்களகரமாக இருக்கும்.
***

வைரம் ராஜகோபால்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharuman, Kolkata - Kolkata ,இந்தியா
24-நவ-201222:55:48 IST Report Abuse
Dharuman, Kolkata பிறப்பு எவ்வளவு நிஜமோ அதே அளவு இறப்பும் நிஜம். வாழும் பொழுது பிறர் கஷ்டப் படுவதைப் பார்த்து எவ்வளவு ஆனந்தப் படுகிறோம்?ஆனால் இறக்கப் போகின்றோம் என்றவுடன் ஏன் இத்தனை பயம் வேண்டும்? நல் வழியில் நடந்திருந்தால் பயம் கொள்ளத் தேவையில்லை.இறப்புக்குப் பின் பகவான் துணை இருப்பார் என்று நம்பு நல்லதே நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
18-நவ-201204:43:04 IST Report Abuse
GOWSALYA துளசியையே வளர்க்க முடியவில்லை என்று பெரும்கவலை எனக்கு.....என்ன செய்ய ?....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.