அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 நவ
2012
00:00

திருமணமான ஆண்களில் பலர், தம் மனைவியரை கவனிப்பதில்லை. அவர்களும் மனிதப் பிறவி தான்; ஆசா, பாசங்களும், விருப்பு - வெறுப்புகளும் அவர்களுக்கு உண்டு என்பதை எண்ணுவதில்லை. தங்களது சுக போகங்களுக்கும், ஆடம்பர அநாவசியங்களுக்கும் தம் நேரத்தையும், பொருளையும் செலவிடுவதால் ஏற்படும் சிக்கல்களும், விபரீதங்களும் எத்தனை, எத்தனை!
பெண் வாசகியர் இருவர் எழுதிய கடிதங்களை படித்தபோது, கணவன்மார்களின் பாராமுகம், அவர்களை எவ்வளவு தூரம் பாதித்து, விபரீத எண்ணங்களை மனதில் விதைத்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது:
எனக்கு வயது 35ஐ தாண்டி விட்டது. கல்யாணமாகி விட்டது; இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. எங்கள் வீட்டருகே புதுக் குடித்தனம் வந்தது ஒரு குடும்பம். அவர்களுக்கு ஒரே பையன்; என்னை விட இளையவன். அவன், என்னை விரும்புகிறான். இது சம்பந்தப்பட்டவர்களுக்கெல்லாம் தெரிந்து விட்டது. பார்க்கக் கூடாது, பேசக் கூடாது என்றெல்லாம் தடை விதித்து விட்டனர். அதையும் மீறி நாங்கள் பேசும்போது, எனக்கு அடியும், உதையும்தான் கிடைக்கிறது. இப்போது பேசக்கூட முடிவதில்லை.
தண்ணீர் பிடிக்க அவர்கள் வீட்டருகே செல்ல வேண்டும். நான் தண்ணீர் பிடிக்கும்போது அவன் வந்தால் கூட, மற்றவர்கள் முகம் ஒரு மாதிரியாகி விடுகிறது. நானும், அவனிடம் எத்தனையோ தடவை, "வேண்டாம், என்னை விட்டு விடு. நான் அழகாக இல்லை. இரண்டு குழந்தைகளையும் பெற்று விட்டேன். நீ நன்கு அழகாக, படித்த, வேலை செய்யும் பெண்ணாக பார்த்து முடித்துக் கொள்...' என்று சொன்னால், இரண்டு நாள் ஆனாலும் அவன் சாப்பிடுவதில்லை. இருமுறை தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டான்; நான் தான் காப்பாற்றினேன்.
இங்கே, என் கணவரை பற்றி கூறியாக வேண்டும். சொந்த தொழிலில் ஈடுபட்டுள்ள அவர், தேவைக்கு அதிகமாகவே சம்பாதிக்கிறார். இரு பெண்களுக்கும் திருமணம் செய்யத் தேவையான நகை, நட்டுகளை இப்போதே வாங்கி விட்டார்; ஆனால், மனைவி என்ற ஒரு ஜீவன் வீட்டில் இருப்பதைப் பற்றிய எண்ணமே இல்லாமல் நடந்து கொள்கிறார்.
ஆசையாக சினிமாவிற்கோ, ஓட்டலுக்கோ அழைத்துச் செல்வது இல்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து கடைசியாகப் பார்த்த படம், "கிழக்குச் சீமையிலே' என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்; அதுவும், படம் புத்தம் புதிதாக ரிலீஸ் ஆன நேரத்தில்!
சரி, சினிமா வேண்டாம், ஓட்டல் வேண்டாம் - ஒரு சராசரிப் பெண்ணின் உடல் தேவைகளையாவது புரிந்து வைத்திருக்கிறாரா என்பதே சந்தேகமாக உள்ளது. இவை தவிர, நண்பர்களுடன் குடித்து கும்மாளமிட்டு, இரவில், நேரம் கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வருகிறார்.
இந்த நேரத்தில் தான், என் வாழ்வில் நுழைந்தான் அந்தப் புதியவன். என்னைப் புரிந்து கொண்டான். என்னாலும் அவனை மறக்க முடியாத நிலை உருவாகி விட்டது. அக்கம், பக்க வீட்டினர் மூலம், என் கணவர் காதுக்கும் செய்தி எட்டி விட்டது. இப்பிரச்னை பூதாகரமாக வெடித்து உள்ளது. தினமும் எனக்கு அடி உதை தான்; உடம்பெல்லாம் ஒரே காயம்.
"என்னோடு வா...' என்று கூப்பிடுகிறான். உள்ளுரில் தனியாரிடம் வேலை பார்க்கிறான். "நல்ல வேலை கிடைத்தால் ஒரு வாரத்திற்குள் கூட்டிக் கொண்டு போய் விடுவேன்...' என்று சொல்கிறான். "என் புருஷனிடம் ரொம்ப கஷ்டப்படுகிறேன்...' என்று சொன்னதற்கு, "உன் அப்பா வீட்டில் கஷ்டமே படாதவள். இங்கு உனக்கு செலவு செய்ய பணம் கிடைக்கிறது. என்னோடு வந்தால், இரண்டு நாள் இனிக்கும்; அதன்பின், பணம் கையில் இல்லையெனில், நீ மிகவும் கஷ்டப்படுவாய். அதனால், சில நாட்கள் பொறுத்திரு...' என்று சொல்கிறான்.
நான் மனதளவில் அவனிடம் எப்போதோ நெருங்கி விட்டேன். செக்சில் எனக்கு உடன்பாடு இல்லை. அவனிடம், "செக்சுக்காகத்தான் என்னை விரும்புகிறாயா?' என்று கேட்டால், உடனே அவனுக்கு கோபம் வந்துவிடும். "உன் குணத்திற்கு தான் உன்னை விரும்புகிறேன். வேறு பெண்ணை மணக்க வேண்டுமென்றால், எதற்கு உன்னோடு பழகுகிறேன்?' என்று கேட்கிறான்.
"பிள்ளைகள் என்னுடன் இருக்கட்டும். நீ அவனுடன் ஓடி விடு!' என்று சொல்கிறார் என் கணவர். மிகவும் குழம்பிய நிலையில் உள்ளேன். ஒன்று, வீட்டின் பெருமையை காப்பாற்ற வேண்டும்; இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அதை பார்த்துக் கொண்டு ஊமையாய் உள்ளேன். அடிக்கும்போது கூட மற்றவர்களுக்கு கேட்கக் கூடாது என்று தான், கத்தாமல் வாய் மூடி மவுனமாக உள்ளேன். தலை மயிரை கொத்தாக பிடித்து, தலையை சுவற்றில் முட்டுகிறார். தலையில் கொட்டும் போது உயிரே போகும் போல் உள்ளது. உயிரை விடலாம் என்று நினைத்தால், பிள்ளைகள் நினைவு தடுக்கிறது...
இதே ரீதியில் கடிதம் செல்கிறது...

இன்னொரு வாசகியின் கடிதம்:
என் வயது 21. திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. மூன்று வயதில் பெண் குழந்தை இருக்கிறது. எனக்கு கொஞ்சமும் பொருந்தாத குணம் என் கணவரிடம் இருக்கிறது. அவர், என்னை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவில்லை. அவருக்கும், எனக்கும் அதிக வயது வித்தியாசம் இருப்பதால், என்னை மதிப்பதில்லை; அவரிடம் என் மனக்கஷ்டங்களை சொல்லி அழுதால் கூட புரிந்து கொள்ளாமல், நான் சிறுபிள்ளை என்று என்னை அசட்டையாக நினைக்கிறார். இந்த சூழ்நிலையில், என்னை உயிருக்குயிராக நேசிக்கிறார் ஒருவர். அளவுக்கு அதிகமாக என்னை நேசித்து அன்பு செலுத்துகிறார். அவர் மிகவும் பரந்த மனப்பான்மை உள்ளவர். ஆண்களில் இப்படியும் இருப்பரா என்று வியக்குமளவிற்கு மிகவும் உயர்ந்த குணமுடையவர்.
என் செயல்களுக்கு, பேச்சிற்கு மதிப்பு கொடுக்கிறார். அவர் எதிர்பார்க்கும் எல்லா குணமும் என்னிடம் இருப்பதாக சொல்கிறார். என் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்கிறார்; என் துன்பத்திற்கு ஆறுதல் அளிக்கிறார். என்னை நேசிப்பவரின் திருமணத்திற்கு நான் தடை விதிக்கவில்லை.
"நாம் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் மட்டும் தான், நம் அன்பை பகிர்ந்து கொள்ள முடியுமா? நீ என்றும் என் மனதின் உரிமையானவள். நான் திருமணம் செய்தாலும், என் அன்பு என்றும் மாறாது!' என்கிறார்.
எங்கள் உறவுமுறை தவறாக இருப்பதால், நாங்கள் சேர வேண்டும் என்று நினைத்தாலும், எங்களால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பத்தை நினைத்து தவிக்கிறோம். இதற்கு நீங்கள் தான் நல்ல பதில் தர வேண்டும். உங்கள் பதில் எப்படிப்பட்டதாக இருந்தாலும் பரவாயில்லை. என் உணர்ச்சிகளை உங்களிடம் கொட்டி விட்டேன்... என்று எழுதியுள்ளார்.
பிரச்னைக்கான தீர்வை தனிப்பட்ட முறையில் எழுதி விட்டாலும், தங்களைப் போன்ற மனித உயிர்கள் தாம் மனைவியர்; ஜடப் பொருட்கள் அல்ல என்பதை, இதுவரை உணராத கணவன்மார்கள் உணர்ந்து திருந்த வேண்டும், அதன் மூலம் விபரீதங்கள் பல ஏற்படாமல் காக்க வேண்டும் என்பதற்காகவே இவ்விரு கடிதங்களும் இங்கே அச்சாகி உள்ளன.
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
malick batcha - chennai,இந்தியா
26-நவ-201214:59:56 IST Report Abuse
malick batcha வண்டு முருகன், கருத்து எழுதும் போது, வள்ளுவன் சொன்னதை நினைவு கொள்வோம். இனிய உலவா இன்னாது கூறல், கனி இருக்க காய் கவர்தற்று. உங்கள் பெயர் இறைவனை நாமம் கொண்டுள்ளது, நட்புடன் மாலிக்
Rate this:
Share this comment
Cancel
malick batcha - chennai,இந்தியா
26-நவ-201214:23:55 IST Report Abuse
malick batcha தங்கையே, ஆலை தீயும், அகல் விளக்கும், ஏன் அடுப்பு தீயும் சுடும், எண்ணம் சிதறாமல் உன் கணவனை திருத்த பாரும். அதனை விடு, இவன் புரித்தவன், அவன் புரித்தவன் என்பது எல்லாம் சுத்த பொய். காலம் சில சமயம் தவறையும் அழகிய வடிவை ஏற்படுத்தும் . உண்மை
Rate this:
Share this comment
Cancel
kanna1 - chennai,இந்தியா
24-நவ-201213:21:44 IST Report Abuse
kanna1 அந்துமணி ரொம்ப நல்லவரு.. அவரு விக்ரமன் படத்துல வர்ற ஹீரோ மாதிரி மிக மிக மிக நல்லவர்..தப்போ சரியோ பெண்களுக்கே சப்போர்ட் செய்வாரு
Rate this:
Share this comment
Cancel
kannan - paramakudi,இந்தியா
24-நவ-201210:25:31 IST Report Abuse
kannan இப்போது உள்ள தொலை தொடர்புகள் நல்லதுக்கும் கெட்டதுக்கும் துணை போகுது அதே போல டிவி சீரியல் ரெம்ப மோசமாக இந்த மாதிரி கலாச்சாரத்தை மக்களுக்கு நிறைய காட்டுது இதை பார்க்கும் குடும்ப பெண்கள் தனது கணவன்மார்கள் செய்யும் சிறு தவறுகளை மற்றவர்களிடம் சொல்லும்போது அவர்கள் கூறும் விசம வார்த்தைகளை நம்பி இது போன்ற சில கெட்ட முடிவுகளை எடுத்து தங்களுக்கும் தங்கள் வாரிசுகளுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் ஒரு கேவலமான இழி சொல்லை ஏற்படித்து விடுகின்றனர் அவர்கள் செய்யும் செயலை நியாயம் என்று கூறுகின்றனர்
Rate this:
Share this comment
Cancel
ஆனந்தப்ரசாத் - பெங்களூர்,இந்தியா
23-நவ-201212:39:35 IST Report Abuse
ஆனந்தப்ரசாத் அந்துமணி எப்போதுமே பெண்கள் கஷ்டப்படுவதையே சித்தரிகிறார்... எண்ணற்ற அப்பாவி ஆண்கள் தங்கள் மனைவியரிடம் படும் கஷ்டங்கள் அவருக்குத் தெரியாதா
Rate this:
Share this comment
Cancel
கார்த்திக் - சிங்கபோரே,சிங்கப்பூர்
23-நவ-201212:39:03 IST Report Abuse
கார்த்திக் திருமணம் ஆன பெண்களுக்கு ஒன்று புரிவதில்லை. எந்த ஆணும் திருமணத்துக்கு பிறகு ஒரே மாதிரித்தான். அவர்களுக்கு அடுத்த ஆண்கள் இனிக்க பேசி இந்த மாதிரி பெண்களின் எந்த குறைபாட்டையும் கண்டுகொள்ளாமல் பழகுவதை வைத்து அவன் அவளது புருஷனை விட பெட்டெர் என்று நினைகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒன்று புரிவது இல்லை. இப்படி அந்த அடுத்த ஆண் பழகுவது ஒரு விசயத்துக்காக மட்டுமே. அது முடிந்தால் அல்லது திகட்டி விட்டால், அவளை அவன் மாதிரி தூக்கி எரிந்து விடுவான். அடுத்த வீடு மாங்கனி எப்போதும் இனிக்கும். புருஷன் என்பவன் என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் கடைசி வரை மனைவியுடன் ஒழுங்கா குடும்பம் நடத்தினாலே அவன் சிறந்தவன் தான். இந்த மாதிரி கானல் நீரை நம்பி போகும் பெண்களே, அது நீர் மாத்ரி தெரியும் வரையில் தான் அது உங்களுக்கு இனிக்கும். அது கானல் நீர் என்று தெரிந்த பின் உங்கள் வாழ்கை காணாமல் போய் இருக்கும். சோரம் போன 1000 ஆண் இந்த சமுதாயத்தில் நிமிர்ந்து நடக்க முடியும். அனால் ஒரு பெண்ணால் முடியாது. பெண் என்பவள் அனைத்தையும் தாங்கி நடப்பவள். அவளால் தாங்க முடியாமல் ஒரு தவறு செய்தால் அது ஒரு தலைமுறையே பாதிக்கும் என்பதை உணர்ந்து நடங்கள்.
Rate this:
Share this comment
Cancel
ராதாகிருஷ்ணன் - குவைத்,குவைத்
22-நவ-201222:24:54 IST Report Abuse
ராதாகிருஷ்ணன் ஆண் பெண் இரண்டு பேறும் தனி மனித ஒழுக்கம் என்பதை கடைபிடிக்க வேண்டும். பிறர் மனை பாரா என்பது இருவருக்கும் பொருந்தும்.
Rate this:
Share this comment
Cancel
Prabagar Balakrishnan - Seoul,தென் கொரியா
19-நவ-201207:01:02 IST Report Abuse
Prabagar Balakrishnan women are reason for this situation. First women should change their attitude towards their male child, and make him to understand their effort and give respect to women. women needs to work 24/7 and no rest in life and men really have no idea about that. Many really doesn&39t understand or aware of the emotional need of women.
Rate this:
Share this comment
Cancel
vandu murugan - chennai,இந்தியா
19-நவ-201200:41:30 IST Report Abuse
vandu murugan எப்படியோ சூடு தணிந்து குளிரிச்சி வந்தால் சரிதான்
Rate this:
Share this comment
malick batcha - chennai,இந்தியா
26-நவ-201214:44:48 IST Report Abuse
malick batchaபொருந்தா உறவு என்றால் முறையாக வெளிவர பாரும், அதனை விட்டு குடும்பம் என்பது ஒரு கண்ணியம் அதனை கலங்க படுத்தாதீர், பெண்கள் இந்த உலகத்தில் மதிக்கப்பட வேண்டும் என்றால், இது போன்று விசயத்தில் முன் உதாரணமாய் விளங்க வேண்டும். இல்லை பேச்சில் மட்டும்தான், போதை பொருள் போன்ற எண்ணம் தான் உங்களை பற்றி என்ன செய்யும். இதற்கு இஸ்லாமிய அடிப்படை விவாகரத்து சட்டம் சரியானது.. படித்து பாரும் .......
Rate this:
Share this comment
Cancel
vivek - dhaka,வங்கதேசம்
18-நவ-201218:05:54 IST Report Abuse
vivek எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சையாகத்தான் தெரியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.