அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 நவ
2012
00:00

அன்புள்ள அம்மா —
நான் என் வாழ்வில் நடந்த பிரச்னைக்கு, உங்களிடம் தீர்வு கேட்கிறேன். என் 22வது வயதில் திருமணம் நடைபெற்றது. என் கணவர், அரசு பணியாளர். நான் பள்ளியில் ஆசிரியையாக தற்போது பணிபுரிகிறேன்.
என் பிரச்னை என்னவெனில், எனக்கு 29 வயதாகும் போது, என் கணவர் கேன்சர் வியாதியில் இறந்து போனார். அப்போது, என் மகனுக்கு, ஐந்து வயது. என் வீட்டில் நான்தான் முதல் பெண், அதனால், தங்கைக்கு திருமண வயது கடந்தும், திருமணமாகாததால், எனக்கு மறுமணம் செய்து வைக்க, என் பெற்றோர் முயற்சி எடுக்கவில்லை. ஆதனால் என் மாமனார் வீட்டில் இருந்து வந்தேன். மாமனார் பேரன் மேல் உள்ள அக்கறையால், அமைதியாக இருந்து விட்டார். ஐந்து வருடம் அவர்களுடன் இருந்து கஷ்டப்பட்டேன். இப்படி இருக்கும் பட்சத்தில், என் கணவரின் நெருங்கிய அலுவலக நண்பர், என் கணவருக்கு வரவேண்டிய பணம் பெற சிறு உதவிகள் செய்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. என்னை விட இரண்டு வயது இளையவர். அதனால், அவரது உதவிகளை இயல்பாக எடுத்துக் கொண்டேன். ஆனால், அவர் என்னை மறைமுகமாக விரும்பியது, எனக்கு தெரியவில்லை.
இந்நிலையில், என் கணவரின் ட்ரீட்மென்ட்டுக்கு, கடனாக கொடுத்த பணத்தை கேட்டான் கணவனின் அண்ணன். திருப்பி தர இயலாததால், சொந்த வீட்டை நைசாக பேசி, மாமனாரிடம் எழுதி வாங்கி விட்டான். இதனால், பிரச்னைகள் எழ, அந்த இடத்தை காலி செய்து, நான் வேலை பார்க்கும் பள்ளிக்கு அருகில், வாடகை வீட்டில், நானும், என் மகனும் இருக்கிறோம். இப்போது, எனக்கு உதவிய அந்த நபர், என்னை பார்க்க, எனக்கு உதவி செய்ய, அடிக்கடி வந்து, என் மனதில் இடம்பிடித்து விட்டார். நானும், அவரும் மனதளவிலும், உடலளவிலும், நெருக்கமாகி விட்டோம்.
சில நாட்கள் கழித்து, அவர் மனைவி, அவருடைய அம்மா, அப்பா, உடன் பிறந்தவர்களுக்கும் தெரிந்து விட்டது. இதற்கிடையில், என் கணவருக்கு வந்த பணத்தில், அவர், எனக்கு சொந்தமாக வீடு கட்டிக் கொடுத்தார். என்னுடைய வருமானத்தை நானும், அவருடைய வருமானத்தை, அவர் குடும்பத்துக்கும் செலவு செய்தோம். வெளியில் அழைத்து செல்லும் போது மட்டும், சில பொருட்கள் வாங்கி தருவார்.
அவரின் பெற்றோர், எங்கள் உறவை ஏற்றுக் கொண்டனர். ஆனால், அவரின் மனைவி, அவரிடம் சண்டை போடுவாராம். பின்பு அமைதியாக இருந்து விடுவாராம். அவரும், அவர் மனைவியும் காதல் திருமணம் செய்தவர்கள். மனைவியின் வீடு ஏழ்மையானது. இவர் அரசு பணியில் உள்ளவர். இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
என்னை பார்க்க, பகலில் வருவார். இரவு அவர் வீட்டிற்கு சென்று விடுவார். ஆறு மாதத்திற்கு ஒரு முறை, இரவில் என்னுடன் தங்குவார். என்னோடு நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று அவரிடம் @கட்@பன். அதற்கு அவர், "குழந்தைகள், சிறியவர்களாக உள்ளனர். அவர்கள் பெரியவர்கள் ஆனதும், என் கடைசி காலத்தில், உன்னுடன் தான் இருப்பேன்...' என்று கூறுகிறார்.
என்னை அதிகம் நேசிப்பார். இதனால், என் மறுமண ஆசையும் போய்விட்டது. அவர் குடும்பத்தில் அவர் தான் பணியில் உள்ளார். அம்மா, என் வாழ்க்கையில் இந்த அளவு முன்னேற்றம் அடைந்தது, அவரால் தான். தன் மனைவி என்ன சொன்னாலும், அதை பொருட்படுத்தாது, என்னை நேசித்து, என் தேவைகளை பூர்த்தி செய்வார்.
இது என் குடும்பத்துக்கும், என் மாமனார் குடும்பத்துக்கும் நன்கு தெரியும். அவர்கள் ஏதும் கூறவில்லை. இப்போது எனக்கு, 40 வயது ஆகிவிட்டது. அம்மா, இப்@பாது, பிரச்னை என்னவெனில், என் முதிர் வயதில் அவர் என்னுடன் நல்ல துணையாக இருப்பாரா? இவர் சொல்வது ஏமாற்று வேலையா? அவரது சொல்லை நம்பலாமா? மகன் பெரியவன் ஆனதும், எங்கள் உறவை கண்டு, என்னை வெறுத்து விடுவா@னா? என் மகனின் ஆதரவும் இல்லாமல், இவரின் அன்பும் இல்லாமல், தனிமைபடுத்தப்படுவே@னா? அவரது பேச்சை நம்பலாமா? இவரின் அன்பும், அரவணைப்பும் கடைசிவரை இருக்குமா அல்லது மனமாற்றம் அடைந்து விடுவாரா?
எனக்கு பதில் கூறுங்கள் அம்மா.
இப்படிக்கு,
உங்கள் அன்பு மகள்.


அன்புள்ள மகளுக்கு —
உன் கடிதம் கிடைத்தது. முழுவதும் படித்தேன். உன் கணவனின் மரணத்திற்கு பின், உன் வாழ்வில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் பூத்துள்ளது. உனக்கு, சில பல உதவிகள் செய்து, அந்த வெற்றிடத்தை நிரப்பினான் கணவனின் அலுவலக நண்பன். அவனுக்கு, நீ ஆசை நாயகியாகி, 11 வருடங்கள் ஆகின்றன. இப்போது, உன் மகனுக்கு வயது 16. ப்ளஸ் 1 படிக்கிறான் என நினைக்கிறேன். உன் ஆசைநாயகனின் இரு குழந்தைகளுக்கும் வயது, 12, 10 ஆகும் என நம்புகிறேன்.
மருமகள் மேலுள்ள அதிருப்தியாலும், கோபத்தாலுமே, மகனின் தகாத உறவை ஏற்றுக் கொண்டனர் உன் ஆசைநாயகனின் பெற்றோர். பொருளாதார பாதுகாப்பு இல்லாததால் தான், ஆசை நாயகனின் மனைவியும், கணவனுக்கு அடங்கிப் போகிறாள்.
உன் ஆசைநாயகன் பணவிஷயத்தில் நேர்மையானவன். உன் கணவனின் பணத்தை சுருட்டி ஏப்பமிடாமல், உனக்கு வீடு கட்டித் தந்திருக்கிறான். கட்டிய காதல் மனைவிக்கும், ஆசை நாயகிக்கும் இடையே இருதலை கொள்ளி எறும்பாய் தவிக்கிறான் அவன். பார்ட் டைம் பணி பார்ப்பது போல், உன் வீட்டுக்கு பகல் நேரங்களில் வந்து போகிறான். இரவு நேரத்தில், மனைவி குழந்தைகளுடன் கூடு சேர்கிறான்.
உன் கடிதத்தின் கடைசியில், சில கேள்விகளை கேட்டிருக்கிறாய். அதற்கான பதில்களை பார்ப்போம்.
உன் முதிர் வயதில் அவன் உன்னுடன் சேர்ந்து இருப்பானா என கேட்டிருக்கிறாய். தன் கடைசி காலத்தில், உன்னுடன் சேர்ந்து வாழ போவதாக உன் ஆசை நாயகன் கூறுகிறான். அவனது இரு குழந்தைகளையும், படிக்க வைத்து திருமணம் செய்து கொடுக்க, எப்படியும், 13லிருந்து, 15 வருடங்கள் ஆகும். 15 வருடங்கள் என்பது, மிகப்பெரிய இடைவெளி. இந்த இடைவெளியில், என்னென்ன மாற்றங்கள் உங்களிருவர் வாழ்க்கையிலும் நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதை இறைவன் ஒருவனே அறிவான்.
அதற்குள் உன் ஆசை நாயகனுக்கு உன்னுடனான உறவு கசந்து போகலாம். உன் ஆசைநாயகனின் குழந்தைகள் செட்டிலாவதற்கு முன், உன் மகன் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவான். மகன், மருமகள், பேரன் அல்லது பேத்தியுடன் உன் வாழ்க்கை இணைந்து விடும். அப்போது உனக்கு உன் ஆசைநாயகன் தேவையற்றவனாகி விடுவான். உங்களிருவரின் உறவு, திருமண பந்தம் மீறிய உறவாகவே தொடரும் பட்சத்தில், உங்களிருவரில், யாராவது இவ்வுறவில் அதிருப்தியுற்று உறவை கத்தரித்துவிட, லட்சம் சதவீதம் வாய்ப்பிருக்கிறது.
உன் தகாத உறவினால், பின்னாளில் உன் மகன் உன்னை வெறுத்துவிட வாய்ப்பிருக்கிறதா என கேட்டிருக்கிறாய். உன் மகனின் ஆதரவும் இல்லாமல், உன் ஆசைநாயகனின் அன்பும் இல்லாமல், நீ தனிமையில் வாட, நிறைய சாத்தியமிருக்கிறது. மகனிடம் தனித்து பேசிப்பேசி, உன் தரப்பு நியாயங்களை அவனுக்கு உணர்த்து. தாய் - மகன் பந்தம் அறுந்து விடாமல்
பாதுகாத்துக் கொள். உன் கடைசி காலத்தில், நீ தஞ்சமடையப் போவது, மகனின் நிழலில் தான். அடுத்து என்ன செய்யலாமென கேட்கிறாயா மகளே?
மனைவியின் சம்மதத்துடன் உன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள அவனை வற்புறுத்து. மனைவி அந்தஸ்து கிடைப்பது உன் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக்கும். அவன், உன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பான். அதை ஒரு வாய்ப்பாக கருதி, அவனது தொடர்பை நிரந்தரமாக கத்தரித்துக் கொள். 11 வருடங்கள் உன் உடல் சொல்வதை கேட்டு, அதை திருப்தி செய்தாய். போதும், இனி உன் தாய் மனம் சொல்வதை கேட்டு, அதை மகிமைப்படுத்து. இனி, உன் மகனின் எதிர்காலமே, உன் எதிர்காலம்!
என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (47)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆனந்தப்ரசாத் - பெங்களூர்,இந்தியா
23-நவ-201212:26:59 IST Report Abuse
ஆனந்தப்ரசாத் இங்க மெனக்கெட்டு நெறைய பேரு கருத்து சொல்லி இருக்காங்க... 2 விஷயம் கேட்க / சொல்ல விரும்பறேன் உங்க எல்லோர்கிட்டயும்... இங்க எழுதினதை, உங்க கருத்துக்களை சம்பந்தப்பட்ட யாரும் படிக்க போறது இல்ல... அப்புறம் ஏன் இவ்ளோ மெனக்கெட்டு இதுக்குப்போய் உங்க டைம் வேஸ்ட் பண்றீங்க... இதுக்கு உதாரணம் நம்ம வாசகர்களின் அரசியல் விமர்சனங்கள்... இங்க நெறைய வாசகர்கள் ரொம்ப நல்ல யோசனைகள் எல்லாம் சொல்றாங்க... கருணாநிதி / ஜெயலலிதா யாரு முதலமைச்சரா இருந்தாலும் தினமலர் வாசகர்களின் கருத்தை / விமர்சனத்தை படிச்சிருந்தாலே போதும்... தமிழ்நாடு எவ்வளவோ முன்னேறி இருக்கும்... நம்ம கருத்துக்களை தலைவர்களே மதிக்காதபோது அன்புடன் அந்தரங்கத்துக்கு யோசனை கேட்டு எழுதறவங்க மதிச்சு படிப்பாங்களா... ரெண்டாவது விஷயம்தான் மெயின்... சகுந்தலா அம்மாகிட்ட யோசனை கேட்பவங்கள்ள 95% தெரிஞ்சே தப்பு பண்ணி, இப்போ என்னமோ புதுசா ஞானோதயம் வந்து அது தப்பா அப்படின்னு கேட்கறாங்க... உண்மையா சொல்லுங்க... இதனை வருஷம் ஒருத்தன் அல்லது ஒருத்தி தப்பு பண்ணிட்டு, திடீர்னு ஒருத்தர் (சகுந்தலா அம்மா) நீ செய்யறது தப்புன்னு ஒரு அரை பக்கத்துக்கு புத்திமதி சொன்னா அவங்க அதை ஏத்துப்பாங்களா... என்னதான் நாயை குளிப்பாட்டி நடு வீட்ல வெச்சாலும் அது செய்யற வேலையைத்தான் செய்யும்...
Rate this:
Share this comment
Narayan Arunachalam - DELHI,இந்தியா
23-நவ-201216:44:54 IST Report Abuse
Narayan Arunachalam" இங்க எழுதினதை, உங்க கருத்துக்களை சம்பந்தப்பட்ட யாரும் படிக்க போறது இல்ல... அப்புறம் ஏன் இவ்ளோ மெனக்கெட்டு இதுக்குப்போய் உங்க டைம்" கருத்துக்களை பற்றி கருத்து எழுதும் உங்கள் பதிவினை சிலராவது படிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தானே நீங்கள் எழுதி உள்ளீர்கள்... அதே நம்பிக்கை தான் மற்றவர்களுக்கும்.... இரண்டாவது..." உங்க கருத்துக்களை சம்பந்தப்பட்ட யாரும் படிக்க போறது இல்ல".. இதுவும் உங்கள் அனுமானம் தானே தவிர நிச்சயமாக உங்களால் கூறமுடியாது அல்லவா? ஒரு பாதிக்கப்பட்ட நபர் தனது பிரச்சினையை தினமலருக்கு அனுப்பும் போதே.. தனது கருத்தினை சகுந்தலா அம்மா தவிர...படிக்கும் மற்ற நேயர்களும் அறிந்து எதாவது வகையில் உதவியாக இருக்க கூடும் என்ற எண்ணத்தில் தான்.. தங்கள் பிரச்சினை அச்சு ஏறும் என்று அறிந்தே எழுதிகிறார்கள்.. மூன்றாவது... இந்த ப்ரசினைகளுக்கவா தீர்வோ.. கருத்துக்களோ... அரசியல் கருத்துக்களோடு ஒப்பீடு செய்வது பொருத்தம் ஆகாது... ...
Rate this:
Share this comment
Cancel
விகடன் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
23-நவ-201208:59:12 IST Report Abuse
விகடன் நம் நாடு எதை நோக்கி செல்ஹிறது என்று தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
நாராயணன் எ - நியூடெல்லி,இந்தியா
23-நவ-201208:50:28 IST Report Abuse
நாராயணன் எ padhinoru aandugalaaga illadha kavalai - mudhil காலத்தில் ivar ennudan irupaaraa? - தற்பொழுது வர என்ன காரணம் என்று இந்த சகோதரி யோசிபாறேயானால்.. இந்த பிரச்சினைக்கான விடை அவருக்கு கிடைத்து விடும்.. இவாளவு நாளாக அவரை நம்பி தன்னை ஒப்படைத்தவர்.. எனது வயதான காலத்தில் என்னை அரவனைப்பாரா என்ற எண்ணம் தற்பொழுது ஏன்? எனது மகன் பெரியவன் ஆனதும் என்ன சொல்வான் என்று தற்பொழுது சிந்திக்க துவங்கும் நீங்கள்... அவனது உரைவ்முறை உங்கள் அன்பானவருடன் எப்படி இருண்டது என்று கூற வில்லை.. மகனுக்கு இப்பொழுது 16 வயது இருக்கும் பட்சத்தில், கடந்த 11 வருடத்தில் அவனது அனுபவங்கள் ... அவனது எதிர் கால போக்கை நிர்ணயித்திருக்க கூடும்.. அந்த அனுபவங்கள் கசப்பாக இருப்பின்.. அவனை பற்றிய உங்கள் எதிர்பார்ப்பு பொய்யாகாது.. இதனை நாள் அவரது அன்பினை யும் அரவணைப்பையும் ஏற்று கொண்ட நீங்கள்..தற்பொழுது அவரை பற்றி சந்தேகம் கொள்வது.. உங்கள் இருவரிகிடையே வேறு ஏதாவது மனகசப்பு அல்லது ஊடல் உருவாகி இருக்க வேண்டும்.. அது என்ன என்று சற்று சிந்தியுங்கள். மேலும் " அவர் மனைவி அவரிடம் சண்டை போடுவாரம் பிறகு அமைதியாக இருண்டு விடுவாராம்" இந்த விஷயம் தான் அவரை உங்களிடம் நிரந்தரமாக இருக்க கோருவதன் பின்னணியா? அப்படி இருப்பின் அது தவறான எதிர்பார்ப்பு தானே.. உங்கள் கடிதத்தில்.. அவரது திருமணம் உங்கள் உறவிற்கு முன்பு நடந்ததா அல்லது பின்பா என்று ஊகிக்க முடியவில்லை.. பின்பு நடந்திருந்தால்... பிறன் மனை கவர்தல் தவறு என்று உங்களுக்கு தோன வில்லையா? இத்தனைக்கும் அவர்கள் திருமணம் காதல் திருமணம் என்று சொல்லி உள்ளீர்கள்.. உங்கள் உறவு முறையை அவரது வீட்டிலும், உங்களது மகனும் ஏற்று கொண்டோ அலல்து சகித்து கொண்டு இருக்கும் நிலையில்.. அவருடன் உங்களது எதிர் பார்ப்புகளை குறைத்து கொண்டு.. நிஜமாகவே அவரது வாழ்கையில் அக்கறை இருக்குமானால்.. அவரை.. அவரது மனைவியை கை விடாமல் தங்களையும் ஏற்று கொண்டு குடும்பம் நடத்த கோருவது முறையாக இருக்கும். பெரும்பாலான மக்களுக்கு " வாழ்கை துணை " என்பதன் உண்மையான அர்த்தம் நாற்பது வயதுக்கு மேல் தான் தெரிய வருகிறது.. அதற்க்கு நீங்களும் விதி விலக்கல்ல.. 11 வருடங்கள் நல்லவராக இருந்தவர்.. மீதி காலங்களிலும் நல்லவராக இருக்க மாடார என்ன.. தற்பொழுது முக்கியமான ஒன்று.. அவர் உங்களை முதுமை காலத்தில் எப்படி பேணுவார் என்பதை விட.. உங்கள் மகனுடன் ஆரோக்கியமான, கண்ணியமான பொறுப்பான தந்தை என்ற உணர்வினை தருகிறாரா என்பது தான்.. இதுவே.. நீங்க அவரிடம் மற்றும் உங்கள் மகனிடம் வைத்திருக்கும் எதிர்பார்ப்பினை உண்மையாக்கும்... நல்லதே நினையுங்கள்.. நல்லதே நடக்கும்
Rate this:
Share this comment
Cancel
மான்விழி - texas,யூ.எஸ்.ஏ
22-நவ-201223:37:33 IST Report Abuse
மான்விழி yes sathya u r absolutely correct ... in that episode i was lit bit tensioned thats y so harsh msg from me ,,, and now i really apologise for it to raman ...may be its all r making me so mature .. with lots of love ..cheers
Rate this:
Share this comment
Cancel
மான்விழி - texas,யூ.எஸ்.ஏ
22-நவ-201223:33:58 IST Report Abuse
மான்விழி அட கடவுளே .... சம்பந்தமே இல்லாம நீங்க ஏம்பா மூக்க நுழைக்கிர....இந்தியா ல இருந்து அமெரிக்கா போன எனக்கு திரும்ப வரவும் தெரியும், இங்கேயே செட்டில் ஆகவும் தெரியும் ,,,,.என்ன conversatation நடக்குதுன்னு தெரியாம பேசகூடாது ........ ஒன்னுதுக்கும் புரோஜனம் இல்லாம சும்மா அங்க இருகிரதுக்கு ... இங்க வந்து யாரு தயவும் இல்லாம என் நாட்டோட கட்டுபாடோட இருக்கிற நான் தேவலாம் ... போங்க எதுவும் தெரியாம மூக்க நுழைக்காதிங்க ...
Rate this:
Share this comment
Cancel
ச.rajeswari - coimbatore,இந்தியா
22-நவ-201215:55:43 IST Report Abuse
ச.rajeswari ராமன் கமென்ட் இஸ் கரெக்ட் .ஆதரிப்பதால் இங்கு பலர் என்னை வாய்க்கு வந்தபடி பேசுவார்கள்.இது உங்கள் வாழ்கை உங்கள் முடிவை நீங்ககள் தான் ......................
Rate this:
Share this comment
Narayan Arunachalam - DELHI,இந்தியா
23-நவ-201216:49:38 IST Report Abuse
Narayan Arunachalamபெரும்பாலான கருத்துக்கள் பிரச்சினையை ஆராய்ந்து பிறகு ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ பதியப்படும் போது அவைகள் பிரச்சினையை பற்றியே பேசுகின்றன... நான் அறிந்த வரையில் தனி மனித தாக்குதல் மிக குறைவே.. திரு ராமன் எழுதிய கருத்துக்களை சிலர் எதிர்க்கும் போது அவரது கருத்தினை தான் எதிர்கிறார்களே தவிர அவரை அல்ல என்பதை பெரும்பாலான வாசகர்கள் உணர்திருக்கிரார்கள்.. எனவே நீங்களும் கவலை படாமல் உங்கள் கருத்தினை பதிவு செய்யுங்கள் ...
Rate this:
Share this comment
Cancel
thirumalai - bangalore.70  ( Posted via: Dinamalar Android App )
22-நவ-201214:16:19 IST Report Abuse
thirumalai ஒருவன் ஒருத்தி் என்ற நம் பண்பாடு எங்கெ போயிற்று காம ஆசையாஇப்ப நடந்து கொள்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
jabha - chennai,இந்தியா
22-நவ-201213:03:48 IST Report Abuse
jabha கௌசல்யா அம்மா கருத்து நூற்றுக்கு நூறு உண்மை
Rate this:
Share this comment
Cancel
ஆனந்த் - dubai,இந்தியா
22-நவ-201212:02:10 IST Report Abuse
ஆனந்த் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணம் இந்து குடும்பவியல் சட்டப்படி தவறு என இருக்கும்போது மருத்துவர் கூறும் இந்த ஆலோசனை ஏற்புடையதா ? விபரம் தெரிந்தவர்கள் விளக்கவும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் - chennai,இந்தியா
22-நவ-201210:30:56 IST Report Abuse
தமிழ் இந்த வாயால தான் US VISA, US ல வேலை ,, இந்த வேலைல என்னும் survive பண்றதே இதலத்தான்...........நாளைக்கு நீங்கள் ஊமையானால் US ல் இருந்து துரத்தி விட்டுவிடுவான் அப்பா இங்கேதானே வரணும் வாங்க ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.