கற்றுக்கொள்ள எந்த வயதும் தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், எழுபது வயதில், ஒரு பெண், அண்டர் வாட்டர் போட்டோகிராபி (நீருக்குள் மூழ்கி புகைப்படம் எடுத்தல்) கலையை கற்றுக்கொண்டதுடன், அந்த துறையில் பெரும் நிபுணராகி, அது தொடர்பாக, மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார் என்றால் ஆச்சரியம் தானே.
அவர் பெயர் லெனி ரிபென்ஸ்டால். ஆகஸ்ட் 22, 1902ல், ஜெர்மனியில் பெர்லின் நகரில் பிறந்தவர். ஓவியராக, நடனக் கலைஞராக, நடிகையாக, ஒளிப்பதிவாளராக, தயாரிப்பாளராக படிப்படியாக எழுச்சி பெற்றவர்.
கடந்த 1936ல், பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை, முதன் முதலாக ஆவணப்படமாக தொகுத்தவர் இவரே. இந்த ஒலிம்பிக் போட்டிக்காக, அறுபதுக்கும் மேற்பட்ட ஒளிப்பதிவு கலைஞர்களை இயக்கினார். ஸ்லோ மோஷன், பனோராமிக் வியூ, பிஷ் ஐ என்று, இன்றைய காலக்கட்டத்தில் பயன்படுத்தக்கூடிய அனைத்து வித தொழில்நுட்பத்தையும், அப்போதே செயல்படுத்திக் காட்டியவர்.
ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரை, உலகிற்கு படமாக அறிமுகப்படுத்தியவர். அவர் நடத்திய நாஜி கட்சியின் மாநாடு மற்றும் பிரம்மாண்டமான பேரணியை தொகுத்தவர். பின், ஆட்சி மாறியதும், ஹிட்லரின் ஆதரவாளர் என்ற நோக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால், இவர் கைது செய்யப்பட்டதில் எந்தவித நியாயமும் இல்லை. இவர் ஒளிப்பதிவாளராக தன் கடமையைச் செய்ததை தவிர, வேறு எவ்வித தவறும் செய்ததற்கான முகாந்திரம் இல்லை என்று சொல்லி, நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர்.
இப்படி நடன மாதுவாக, நடிகையாக, சினிமா தயாரிப்பாளராக, ஒளிப்பதிவாளராக பல்வேறு பரிணாமங்களை எடுத்திருந்தாலும், கடைசியில் இவரது மனது மையம் கொண்ட இடம் புகைப்படத்துறை தான். புகைப்படத்துறையின் பல்வேறு பரிணாமங்களையும் தொட்டவர் .
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சூடானுக்கு சென்று, அங்குள்ள பழங்குடியினர் பற்றி இவர் எடுத்த படங்கள் ஏராளம், இதை வைத்தும் பல புத்தகங்களை வெளியிட்டு உள்ளார். அவை ஒவ்வொன்றும் பழங்குடியினர் பற்றிய பாட புத்தகங்கள் போன்றே இன்றும் கருதப்படுகிறது.
சமீபத்தில், இவர், தன் 101வது வயதில் காலமானார். இறப்பதற்கு முதல் நாள் கூட, ஒரு புகைப்படம் எடுப்பது தொடர்பான கலந்தாய்வில் கலந்து கொண்டார். தான் ஏற்றுக்கொண்ட துறையில், புதுமையை புகுத்தியதும், சமுதாய நலனுடன் கடினமாக உழைத்ததும், இவருக்கு இறவா புகழை தேடித் தந்துள்ளது.
***
எல். முருகராஜ்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.