கனவாய் போனது!
* பார்த்தேன்...
அவளும் பார்த்தாள்
பற்றிக் கொண்டது
காதல் தீ!
* அசினையும், த்ரிஷாவையும்
அவளில் கண்டேன்...
அஜித்தையும், விஜயையும்
என்னில் கண்டாள்!
* ஒருவரை ஒருவர்
காதலித்தோம்...
ஓர் உயிர் ஈருடல் என
மயங்கி நின்றோம்!
* உள் முகத்தை
ஒளித்து வைத்து
பொய் முகத்தை
புகழ்ந்து கொண்டோம்!
* கல்யாணமும் கூடி வந்தது...
கருத்து மோதலும்
கூடவே வந்தது!
* ஏராளமான எதிர்பார்ப்புகள்
இருவருக்குள்ளும்...
எடுத்துக் கொடுக்க
இருவருக்கும் தோன்றவில்லை!
* ஆறு வருடம் காதலித்தும்
அவளை நான் அறியவில்லை...
அவளுக்கோ என்னை
புரியவில்லை!
* வார்த்தை அம்புகளால்
வாழ்க்கை...
வழக்காடு மன்றமானது!
*காதலித்த காலம்
கனவாய் போனது
கல்யாண வாழ்க்கை
இன்று...
கசப்பாய் ஆனது!
— ச.முருகதாஸ், கோட்டூர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்.
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்.
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
பாலையில் நீ வறண்டது என் வாழ்வு
வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல்.
ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்
பாலகிருஷ்ணன்
மேச்சேரி

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.