வழக்கமாக தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு சர்வீஸ் பேக் என புதிய பைல்களை மைக்ரோசாப்ட் வெளியிடும். இவை புதிய வசதிகளைத் தருவதுடன், ஏற்கனவே இருக்கும் பிழைகளை நிவர்த்தி செய்திடும். ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு இனி சர்வீஸ் பேக் வெளியிடப் போவதில்லை என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
ஏற்கனவே விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு சர்வீஸ் பேக் 1 வெளியிடப்பட்டது. இப்போது சர்வீஸ் பேக் 2 வெளியாக வேண்டிய நேரம் வந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், இந்த சர்வீஸ் பேக் வடிவமக்கும் பணியில் உள்ள குழு இதனை அறிவித்துள்ளது.
விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கு மூன்று சர்வீஸ் பேக் வெளியிடப்பட்டது. விஸ்டாவிற்கு இரண்டு பேக் கிடைத்தன. ஆனால் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு ஒன்றுடன் நிறுத்திக் கொள்ளப்படுகிறது.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றுக்கு, சர்வீஸ் பேக் வெளியிடுவது, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் ஒரு சிக்கலான வேலையாகும். மேலும் விண்டோஸ் 8 வெளியாகிவிட்டதால், தன் வாடிக்கையாளர்கள் அதற்கு மாற வேண்டும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. கூடுதல் வசதிகளைத் தரும் வகையில், விண்டோஸ் 7க்கு சர்வீஸ் பேக் வெளியிடப்பட்டால், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறிட, வாடிக்கையாளர்கள் தயங்குவார்கள் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது.
சர்வீஸ் பேக் ஒன்றில், நூற்றுக்கணக்கான தனிப்பட்ட வசதிகள் மேம்பாடு தரும் பைல்கள் மொத்தமாகக் கிடைக்கும். இவற்றை தனித்தனியே கொடுத்தால், நிறுவனத்திற்கும் வாடிக்கையாளருக்கும் சிஸ்டத்தை மேம்படுத்துவதில் பல பிரச்னைகள் எழும். எனவே தான் சர்வீஸ் பேக் முறையை, மைக்ரோசாப்ட் கொண்டு வந்தது. இரண்டாவது சர்வீஸ் பேக், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு இல்லை என அறிவித்தாலும், சின்ன சின்ன மேம்பாட்டிற்கான பைல்களை, விண்டோஸ் 7 மூடப்படும் வரை, மைக்ரோசாப்ட் வெளியிடலாம் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பார்க்கலாம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.