கல்லூரியில் நடத்தப்படும் பாடங்கள் உங்களுக்கு போர் அடிக்கிறதா? தொடர்ந்து அமர்ந்தவாறு அவற்றைக் கவனிக்க முடியவில்லையா? உங்களுக்காகவே ஆன்லைனில் அனைத்து பாடங்களுக்குமான வீடியோ வகுப்பறைகள், பாடக் குறிப்புகள், அனிமேஷன் வழி பாடங்கள், படித்ததைச் சோதனை செய்து கொள்ள ஆன்லைன் தேர்வுகள், ஆடியோ உரைகள் என அனைத்து வழிகளிலும் கற்றுக் கொள்வதை உற்சாகப்படுத்தும் இணைய தளம் ஒன்று இயங்குகிறது. அறிவியல் பாடங்கள் அனைத்தும் ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிலையங்களில் பாடம் நடத்தும் பேராசிரியர்களால் வீடியோ வகுப்பறைகளாகத் தரப்படுகின்றன. பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேத்ஸ் அண்ட் ஸ்டேட்டிக்ஸ், பயாலஜி, மெடிசின், கம்ப்யூட்டர் சயின்ஸ், இஞ்சினியரிங், அக்கவுண்டிங் மற்றும் மேனேஜ்மெண்ட், பல் வைத்தியம், நர்சிங், சைக்காலஜி, ஹிஸ்டரி, மொழிப் பாடம் என ஏறத்தாழ அனைத்து பாடங்களும் இந்த தளத்தில் கிடைக்கின்றன.
பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி பாடங்களுக்கு அனிமேஷன் முறையிலும் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதனால் வேடிக்கையாக இந்த பாடங்களை விளக்கங்களுடன் கற்றுக் கொள்ளலாம். இந்த பாடங்களுக்கும் மற்றும் மெடிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றிற்கும் பாடக் குறிப்புகள் கிடைக்கின்றன.
மெடிகல் மாணவர்களுக்கு உயர் நிலை படிப்பு படிக்க எழுதும் நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சியும் ஆன்லைன் தேர்வும் தரப்படுகிறது. யு.எஸ்.எம்.எல்.இ., எம்.ஆர்.சி.பி., முதுநிலை பாடப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு மாதிரி தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன.
அனைத்து மாணவர்களுக்கும் மிக மிக பயனுள்ள தளமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் உயரத் திட்டமிடும் மாணவர்களுக்கு இது ஒரு அருமையான மேடை அமைத்துத் தந்து உதவிக் கரம் நீட்டுகிறது. இதன் முகவரி http://www.learnerstv.com/
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.