இந்தியா, பாரம்பரிய புராணங்களுக்கும் கதைகளுக்கும் மட்டும் பிரசித்தி பெற்றதல்ல;நவீன சாதனங்களை வடிவமைத்துத் தருவதிலும் முதல் இடத்தில் உள்ளது என பன்னாட்டு அமைப்புகளுக்குக் காட்ட இருக்கிறது. இங்கு வடிவமைக்கப்பட்ட, விலை குறைந்த டேப்ளட் பிசியினை ஐக்கிய நாடுகள் சபையில் அறிமுகப்படுத்துகிறது. இதில் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 (ஐஸ்கிரீம் சாண்ட்விச்) பதிக்கப்படும். இதன் மூலம் மிகக் குறைந்த விலையில், அதி நவீன வசதிகளை மக்களுக்கு வழங்க முடியும் என்பதனை இந்தியா, உலக நாடுகள் முன் காட்ட இருக்கிறது.
தரப்பட்டுள்ள ஹார்ட்வேர் சாதனங்களுடன், இந்த டேப்ளட் பிசி தான், உலக அளவில் மிகவும் மலிவானதாக முதல் இடம் பெறுகிறது. வரும் நவம்பர் 28ல் இது அறிமுகப்படுத்தப்படும். இதனை வடிவமைத்த டேட்டா விண்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி, சுனீத் சிங், ஐ.நா. தலைமை அலுவலகத்தில், அதன் தலைமைச் செயலாளர் பான் கி மூன் முன்பாகக் காட்ட இருக்கிறார். ஆகாஷ் டேப்ளட் பிசியினைச் செயல்படுத்திக் காட்டுவது மட்டுமின்றி, சில உறுப்பினர் நாடுகளுக்கும் இது வழங்கப்படும்.
ரூ.1,500 விலையில், சிம் கார்டு பயன்பாட்டுடன், நவீன வசதிகளுடன் கிடைக்கும் இது எப்போது நம் இந்திய சாமானியனுக்குக் கிடைக்கும் என்பதுதான் தெரியவில்லை. தொடர்ந்து நான்கு மணி நேர பயன்பாட்டினைத் தரும் பேட்டரியுடன் இது கிடைப்பதால், மின்சாரம் இல்லாமல் தவிக்கும் நமக்கு, தொடர்ந்து பிசி மற்றும் இணையப் பயன்பாடு தடையின்றி கிடைக்கும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.