Advertisement
நான் "சி.டி.,' யை சாப்பிடுவேன்!
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 நவ
2012
00:00

அடிப்படை உண்மைகள்:


உயிரின் ஐந்து இயற்கை பிரிவுகளில் ஒன்று, பூஞ்சை காளான். தாவரத்தின் குணாதிசயங்களில் பலவற்றை பெற்று இருந்தாலும் இவைகளால் சூரிய ஒளியை கொண்டு உணவை தயாரிக்க முடியாது.
*முதுகெலும்பு இல்லாத பூச்சி போன்ற உயிரினங்களில் உடலின் மேல் பகுதியில் சிட்டின் என்கிற இயற்கை பொருள் இருக்கும். இந்த சிட்டினை பல காளான்கள் தயாரிக்கும்.
*பெரும்பாலான காளான்கள் பிற உயிரினங்கள் அல்லது அவற்றின் மிச்சங்களில் தங்கள் உணவை பெற்றுக் கொள்ளும். சில காளான்கள் உயிரற்ற பொருளிலும் உணவு பெறும்.
*காளான் ஒரு செல் அல்லது பல செல்கள் பெற்றிருக்கும்.

நாய்க்குடை!:


காளான்கள் என்றவுடன் நமக்கு நினைவில் "குடை பிடிப்பது' நாய்க்குடை. இவை, காளான்களின் பல பிரிவுகளில் ஒரு பிரிவில் தயாராகும் உருவ அமைப் பாகும். நாய்க்குடை என்பது பழம் தரும் அமைப்பு. அதனால் வருடத்தின் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே காணப் படும். இந்த பழ அமைப்புதான் நாய்க் குடை. இந்த நாய்க்குடை வளரும் காளான் பூமிக்கடியிலோ, மரத்திலோ மறைந்து இருக்கும். நமக்கு தெரியாது. பார்த்தால் நாய்க்குடை ஒரு தாவரம் போல தெரியும். மஷ்ரூம் (நாய்க்குடை) என்ற பெயர் பழம் தரும் பகுதியை குறிக்கும். ஆனால், இவை உண்ணத் தக்கவை அல்ல. இவைகளில் சில மிக விஷத்தன்மை மிக்கது.

காளான் நெட்!:


காளான்கள் தாம் உணவு பெறும் உயிரின உறுப்பின் உள்ளே வாழும். நூல் போன்ற நெருங்கிய வலை பின்னல்களை அங்கே அமைத்திருக்கும். இவற்றினை ஹைப்பி என்பர். இது தனியாய் இருக்கும்போது நம் கண்களால் காண முடியாது. ஆனால், பல ஹைப்பிக்கள் இணைந்து நூல் போல ஆகும்போது நம்மால் காண முடியும்.
காளான்களால் நூற்றாண்டுகள் கடந்தும் வாழ முடியும். சில காளான்கள் மிக பெரியதாய் மிக வயதானதாய் இருக்கும். உதாரணத்திற்கு, ஹனி மஷ்ரூம் ஓரிகான் காடுகளில் காணப்பட்டது. இதன் ஹைப்பி 890 ஹெக்டேர்களுக்கு (2200 ஏக்கர்) பரவி இருந்தது. இது 1220 கால்பந்து மைதானங்களுக்கு சமமானது. இதனை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் இதற்கு வயது 2400 இருக்கும் என்கின்றனர்.

பூஞ்சை பிடிக்கும் காடு!:


காளானால் எல்லா வகை பொருள்களையும் செரிமானம் செய்ய முடியும். சி.டி., யை கூட அழித்துவிடும். "ஜியோட்ரிச்சம் கேன்டிடம்' என்னும் காளான் இப்படி செய்யும். டிஸ்க்கின் முனையில் இருக்கும் அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்கை உடைத்து உட்புகுந்து முழு சி.டி.,யையும் நாசமாக்கும்.
ஈஸ்ட் என்பது எல்லா வகை. ஒரு செல் காளான்களை குறிக்கும். சில, உதாரணத்திற்கு ரொட்டி செய்ய உதவும் ஈஸ்ட்டான "சாக்ரோமைசெஸ் செரிவிஸ்ஸியா' நமக்கு உதவும் ஈஸ்ட்.
பெரும்பாலான நேரங்களில் ஈஸ்ட் ஒரு செல் உடையவைதான். ஆனால், சூழ்நிலை உதவினால் அவை பல செல் காளானாய் வளரும். அப்போது ஈஸ்ட் பார்க்க மோல்ட் போல இருக்கும்.
உதாரணம். இந்த திராட்சையின் மேல் படிந்துள்ள வெண்படலம்.

ஒட்டுண்ணிகளின் ராஜாங்கம்!:


பெரும்பாலான காளான்கள் பிற உயிரினங்களில் ஒட்டுண்ணிகளாய் வாழும். திசுக்கள் மூலம் அந்த உயிரியிடமிருந்து உணவினை பெறும். உணவு பெறும் உயிரினம் உயிரோடு இருக்கும்போதே அப்படி நடைபெறும்.சில சமயம் இந்த செயல்பாடு காளானை சார்ந்து இருக்கும். தாவரத்தையோ, விலங்கினத் தையோ கொன்றுவிடும். ஆனால், பெரும்பாலும் அப்படி செய்யாமல் காளான் உணவினை தொடர்ந்து பெறுவதை மட்டுமே செய்து கொண்டு இருக்கும். அதோடு பெரும்பாலான தாவரங்கள் மற்றும் விலங்குகள் வாழ்வில் ஒரு காளானுக்கு இடம் கொடுத்துவிடும். இவை இலை உதிர்வு என்னும் பாதிப்பை தாவரங்களில் ஏற்படுத்தும். இருந்தாலும் எல்லா காளான்களும் ஒட்டுண்ணிகள் அல்ல. சில தாம் இருக்கும் உறுப்பில் வாழும். பல தாவரங்கள் தங்கள் வேரினில் உருவான காளான்களோடு தொடர்பு கொள்ளும். வேர்கள் மற்றும் ஹைப்பி இரண்டும் சேர்ந்து மைக்கோர்ஹிசே என்னும் அமைப்பை பெறும். இவை தாவரத்திற்கு பாஸ்பரஸ் மற்றும் பிற தாதுக்களை பூமியிலிருந்து பெற உதவும்.

மோல்ட் (பூஞ்சை)!:


இது மிக சிறியது. ஆனால், மஷ்ரூமை உருவாக்கும் காளான்களை போன்றதே இதுவும். "மோல்ட்' என்பது எண்ணற்ற ஹைப்பிக்களால் ஆனவை. இவை, உணவின் மீது முழுவதுமாய் பரவிடும். "மோல்ட்' என்பது பசிடியா எனப்படும் கட்டை-வடிவ அமைப்பு அல்லது பிரத்யேகமான செல்களால் இனவிருத்தி செய்யும். அவற்றிற்கு விதைகள் உதவும். பிற விதைகளை போல இக்காளான் விதைகளும் இருந்தாலும் உள்ளே கருவோ, உயிரோ இராது.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.