Advertisement
துப்பறியும் புலிகள் 007
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 நவ
2012
00:00

ஹாய்... ஹாய்... குட்டீஸ்.. இது ஒரு துப்பறியும் கதை. இந்த சம்பவத்தை படித்து சரியான குற்றவாளியை கண்பிடிக்கணும் நீங்க. உங்களது துப்பறியும் மூளை எப்படி வேலை செய்யுதுன்னு பார்ப்போமா? நன்கு துப்பறிபவர்களுக்கு ஜேம்ஸ் பாண்ட் 007 என்ற பட்டத்தை கொடுப்போம் சரியா!
""ஹனி!''
""வந்து கொண்டே இருக்கேன். லைப்ரரிக்கு நேரமாச்சு. என்ன விஷயம்...?'' என்று கேட்டபடி சல்வார் கமீஸைச் சரி செய்தபடி, இறங்கி வந்தாள் ஹனி.
""இன்று பக்ரீத், உனக்கு லீவுதானே... ரீனா ஆன்ட்டிகிட்ட இந்த முர்கி சிக்கன் கொடுத்துடு. அவங்க வீட்ல ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க...
""இவ்வளவு தானே! கொடுத்திட்டாப் போச்சு'' என்று தன் அம்மாவிடமிருந்த டிபன் பாக்ஸை வாங்கிக் கொண்டு, அவள் கண்ணத்தில் இச் இட்டு விட்டு, டாடா கூறியபடி சைக்கிளை மிதித்தாள் ஹனி.
ரீனா ஆன்ட்டி, வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள். சைக்கிளில் வரும் ஹனியை கண்டதும், ஆன்ட்டியின் முகம் மலர்ந்தது.
""வா ஹனி உனக்கு ஆயுசு நூறு. உங்கம்மா செய்த முர்கி சிக்கனை உங்க அங்கிள் நாக்கை தொங்க போட்டுகிட்டு சாப்பிடுவார் கொடு... கொடு...'' என்று வேகமாக வாங்கினாள்.
பிரிட்ஜிலிருந்து குளிர்ந்த ஜூஸை கிளாஸ் டம்ளரில் ஊற்றி, ""வியர்த்துப் போய் வந்த ஹனியிடம் இந்தா "ஜில்லு'ன்னு இதைக் குடி,'' என்றாள்.
""ரொம்ப தாங்ஸ் ஆன்ட்டி! எனக்கு பிடித்த கிரேப் ஜூஸ். நானே கேக்கலாம்னு இருந்தேன்,'' ஜூஸை வாங்கிய போது வாசலில் காலிங் பெல் கணகணத்தது. யார் என்று பார்க்கப் போனாள் ரீனா ஆன்டி.
உடனே திரும்பி வந்தவள், ""போஸ்ட்மேன் வந்திருக்கான். அவனுக்கு ரொம்பத் தாகமாம், குடிக்கத் தண்ணீர் கேட்கிறான்,'' என்றபடி பிரிட்ஜைத் திறந்தாள்.
ஹனியின் புருவம் நெற்றியில் ஏறியது.
""உங்களுக்கு ஏதாவது கடிதமிருந்ததா, எக்ஸ்பிரஸ் டெலிவரியா?'' என்று கேட்டாள் ஆன்டியிடம்.
""எனக்குக் கடிதம் ஏதுமில்ல. கடிதம் பட்டுவாடாச் செய்யப் போயிட்டிருக்கான். நம் வீட்டைப் பார்த்ததும் தண்ணீர் குடிக்க நினைச்சு காலிங்பெல்லை அழுத்தி இருக்கான் பாவம்...'' என்றாள்.
""அவனை இருக்கச் சொன்னீங்களா?''
""ஆமா, வராண்டா சேரிலே உட்காரச் சொல்லி இருக்கேன்!''
ஹனி அவசர அவசரமாக போலீசுக்குப் போன் செய்தாள். உடனே வரும்படியும், ஒரு ஏமாற்றுக்கார திருடனைப் பிடிக்கலாமென்றும் கூறினாள்.
ஆன்ட்டியின் விழிகள் வியப்பால் விரிந்தன. நீங்களும் கூடத் திகைக்கிறீர்களல்லவா?
ஹனி தபால்காரரைத் திருடன் என்று எப்படி சந்தேகித்தாள்... துப்பறியும் புலிகளான நீங்க உங்கள் மூளையை யூஸ் பண்ணி துப்பறியுங்களேன்.


விடைகள்:
அன்று பக்ரீத். தேசிய விடுமுறை. தபால் ஆபீஸ் இல்லை. கடிதங்கள் பட்டுவாடா கிடையாது. ரீனா ஆன்டிக்கு இது தெரியாது. ஆனால், ஹனிக்கு அந்த ஆள் மீது சந்தேகம் தோன்றி விட்டது. தனித்துள்ள பணக்கார வீடுகளில் இப்படி தாகத்துக்கு நீர் கேட்டு உள்ளே புகுந்து, கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு போகும் ஆசாமிகளைப் பற்றி செய்திகளில் படித்திருக்கிறாள். ஆகவே, தாமதமின்றி போலீசுக்குப் போன் செய்து அந்தப் போலித் தபால் காரனைச் சரியாக பிடித்துக் கொடுத்து விட்டாள்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.