கீதையில் முக்கியமான ஒரு வாக்கியத்தை எல்லாரும் சொல்வது வழக்கம்... அதாவது, "என்னை வழிபட, நீங்கள் அதிக பிரயாசைப்படக் கூட வேண்டாம். ஒரு புஷ்பமோ, ஒரு பழமோ, அதுவுமில்லாவிட்டால், ஒரு உத்ரணி தீர்த்தமோ எனக்கு அர்ப்பணம் செய்யுங்கள். அதுவே போதும்...' என்று கடவுள் சொல்லியிருக்கிறார்.
இதில் கவனிக்கப்பட வேண்டியது, "உன்னால் எதுவும் பெரிதாக செய்ய முடியாவிட்டால் புஷ்பம், பழம், தீர்த்தம் ஏதாவது ஒன்றை அர்ப்பணம் செய்தால் போதும்...' என்பது தான். அவர்தான் இப்படிச் சொல்லி விட்டாரே என்பதற்காக, அவருக்கு ஒரு உத்ரணி தீர்த்தத்தை விட்டு விட்டு, இவன் வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், போளி என்று விதவிதமாக சாப்பிடலாம் என்று அர்த்தமில்லை. நம்மால் அதிகப்படியாக எவ்வளவு செய்ய முடியுமோ, அதை வசதிக்கேற்ப செய்ய வேண்டும்.
வீட்டுக்கு வெளியூரிலிருந்து ஒருவர் வருகிறார்... "எனக்காக பிரமாதமாக சமையல் எதுவும் செய்ய வேண்டாம். ஒரு வத்தல் குழம்பு, சுட்ட அப்பளம், மோர் இருந்தால் போதும்...' என்கிறார். இவர் தான் இப்படிச் சொல்லி விட்டாரே என்று, ஒவ்வொரு வேளைக்கும் வத்தல் குழம்பு, சுட்ட அப்பளம், மோர் சாதம் போட்டால் எப்படி இருக்கும். வந்த விருந்தாளி மறுநாளே ஊருக்கு கிளம்பி விடுவார்.
ஒரு @காவிலில் உபன்யாசம் செய்வதற்காக ஒரு உபன்யாசகர் வந்திருக்கிறார். ஒன்பது நாள் உபவாசம். இதுபோன்ற உபன்யாசத்தின்போது உபன்யாசருக்காக ஒரு, "பிளாஸ்கில்' பால் கொண்டு வந்து வைப்பர். உபன்யாசம் செய்யும்போது அவருக்குத் தொண்டை வறண்டு விடும். அதற்காக பால் வைப்பது சம்பிரதாயம்.
அவர், அவ்வப்போது அதில் கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிடுவார். முதல் நாள் கோவில் காரியதரிசியிடம், "எனக்கு பிளாஸ்கில் சூடாக வென்னீர் கொண்டு வந்து வைத்து விடுங்கள்; போதும்!' என்றார் உபன்யாசகர்.
அவர் அப்படியே வென்னீர் கொண்டு வந்து வைத்தார். உபன்யாசகரும் அந்த வென்னீரையே சாப்பிட்டு உபன்யாசம் செய்தார். மீதமுள்ள எட்டு நாட்களுக்கும் இவர் சொல்லாமலே பிளாஸ்கில் வென்னீர் கொண்டு வந்து வைத்து விட்டார் அந்த காரியதரிசி. பார்த்தார் உபன்யாசகர், பால் வேண்டும் என்று சொல்ல சங்கடமாக இருந்தது.
ஒன்பது நாளும் வென்னீரையே சாப்பிட்டுக் கொண்டு உபன்யாசத்தை முடித்தார். கடைசியில் ஊருக்கு புறப்படும்போது, "சார்... உங்க காரியதரிசி பலே ஆசாமி சார்... நான் முதல் நாள் ஏதோ தலைவலியாக இருந்ததால் வென்னீர் கொண்டு வந்தால் போதும் என்றேன். அவர், உபன்யாசகருக்கு பால் பிடிக்காது போலிருக்கிறது என்று எண்ணினாரோ, என்னவோ... ஒன்பது நாளும் வென்னீரையே வைத்து விட்டு ஒப்பேத்தி விட்டாரே... நான் பால் வேண்டாமென்றா சொன்னேன்!' என்று ஒரு நண்பரிடம் கூறினார்.
இப்படி பிறருக்கு தொந்தரவு வேண்டாம் என்பதற்காக குறைந்தபட்சம் இதை செய்தால் போதும் என்று சொன்னால், அதையே பிடித்துக் கொண்டு அதற்குமேல் எதுவும் செய்யக் கூடாது என்பதல்ல. கேட்பவர் குறைந்தபட்சம் கேட்பார்; கொடுப்பவர் அதிகபட்சம் கொடுக்க வேண்டும்! அதுதான் விவேகம்!
***
ஆன்மிக வினா-விடை!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இறைவன் என்றால் அவன் தேவை யுடையவன் அல்ல , மனிதர்தான் தேவை உடையவன் , அவன் நித்தரை கொள்வது, மனிதர்கள் செய்யும் அனைத்தும் செயலும் செய்தால் அவன் இறைவன் அல்ல . அவன் நித்தரை ஜீவன் , பலன்கள் எதிபார்த்து படைகபடும் எதுவும் இறைவனுக்கு சேர்வதில்லை , சற்று சிந்தீபீர் .. உள்ள தூய்மை ஓன்று போதும் அவனை அடைய, இறைவன் மனிதனுக்கு கொடுக்க வேண்டும் , மனிதன் இறைவனுக்கு கொடுப்பது அவனை இழிவுபடுத்துவது போன்று , அவனுக்கு நாம் அடிமை , அவன் சொன்ன கட்டளை படி வாழுவதும் அவனை வணகுவது தான் நாம் அவனுக்கு செய்யும் நன்றி ....
இறைவனுக்கு ஏதாவது ஒன்று படைக்க வேண்டும் என்பது கோவிலை நம்பி உள்ள அன்பர்களுக்கு போய்ச் சேர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான்.எண்ணிப் பாருங்கள் திருப்பதி கோவிலுக்கு வரும் நன்கொடையை ஒட்டி எண்ணற்ற சேவைகள்.அதில் கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகள் அடக்கம்.திருப்பதி ஒரு உதாரணம் தான்.அது போல பற்பல தேவஸ்தானங்கள்.இது போன்றே சிறு கோவில்களிலும் நடந்து கொண்டிருக்கும்.இருப்பவர்கள் கொடுப்பதும் தகுதியுள்ளவர்கள் பெறுவதும் சமுதாயத்தில் சமன் நிலை ஏற்படுத்த உதவும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.