E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
இது உங்கள் இடம்!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 நவ
2012
00:00

பள்ளி மாணவியரை நடிகைகளாக்காதீர்கள்!


தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்றில், என் நண்பர் ஒருவரின் மகள் படித்து வருகிறாள். பள்ளியில் நடந்த, ஆண்டு விழாவில் கலந்து கொள்ள, என் நண்பருடன் நானும் சென்றிருந்தேன்.
விழாவிற்கு வழக்கம் போல், வி.ஐ.பி.,கள் சிலர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆண்டு அறிக்கை, வாழ்த்து, பேச்சு, பரிசளிப்பு என முடிந்த பின், அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த பள்ளி மாணவ - மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேல்நிலைக்கல்வி மாணவியரின் ஆட்டத்தின் போது விசில் பறந்தது. கைத்தட்டல் பலமாக இருந்தது. சினிமாவில் எந்த மாதிரியான உடையை நடிகர் - நடிகையர் அணிந்திருப்பரோ அதே போல், உடையணிந்து ஆடினர். அதற்கும் ஒருபடி மேலே போய், மார்பகங்கள், பெரிதாகத் தெரிய, அதற்கு ஏற்றார் போல், மாணவியரை உள்ளாடை அணிய வைத்திருக்கின்றனர் என்பது தான் கொடுமை.
எங்கள் பக்கத்தில் அமர்ந்திருந்த, அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள், மேடையில் ஆடிய சில மாணவியரின் பெயரைக் குறிப்பிட்டு, "அவளுக்கு இவ்வளவு பெரிசா... என் கண்ணையே நம்ப முடியவில்லையே...' என சப்தமாக பேச, அதற்கு சக மாணவன், "இல்லை... இல்லை செயற்கையாக இருக்கும்' என விளக்கம் கொடுத்தான். அதை கேட்க வெறுப்பாக இருந்தது.
பள்ளி நிர்வாகத்தின@ர... விழாவின் போது நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளில், மாணவியரை நடிகைகளாக்கிப் பார்க்காதீர்கள். பார்ப்பவர்கள் ரசிக்கலாம். பெற்றோர் மனம் வருந்துவர். நாசூக்காக அமையட்டும் கலைநிகழ்ச்சிகள்.
ஆதங்கன், திண்டுக்கல்.

புது வாழ்க்கைக்கு ஒரு பயிற்சி....

என் கல்லூரி தோழிக்கு, மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்திருந்ததை கேள்விப்பட்டு, அவளை பார்க்க சென்றிருந்தேன். நான், அவள் வீட்டிற்கு சென்றிருந்த சமயம், தோழி படுபிசியாக இருந்தாள். கேஸ் சிலிண்டர் முதல் கேபிள் டிவி, மளிகை சாமான் வரை எல்லாவற்றையும் கணக்கு பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்னடி... இன்னும் கல்யாணமே முடியல, அதுக்குள்ள இவ்வளவு பிசியாயிட்ட...' என்று கேட்டேன். அதற்கு அவளோ, "இல்லடி... எங்க அம்மாதான் இந்த மூணு மாசம், வீட்டில் வரவு - செலவு கணக்கு வழக்குகளை நீதான் பார்க்கணும். அப்பதான், நீ போகப்போற வீட்டுல எல்லா விஷயங்களும் புரியும். அதோட, எந்த செலவுகளில் சிக்கனமா இருக்கணும்ன்னு, பிராக்டிஸ் எடுத்துக்க சொன்னாங்க. அதுக்காக, என் அப்பா சம்பளத்தை கூட, என் கையில குடுத்திட்டார்..' என்றாள்.
எனக்கு இந்த பயிற்சி புதுமையாகவும், அவசியமானதாகவும் பட்டது. தோழிக்கு வாழ்த்து சொல்லிய கையோடு, அவளது பெற்றோரையும் வியந்து பாராட்டி விட்டு வந்தேன். அதை என் பெற்றோரிடமும், பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் மிகவும் பெருமையோடு சொன்னேன். இல்லத்தரசியாக போகும் பெண்களுக்கு, ஒரு வகையில் சிறந்த முன்னேற்பாடு தானே!
எஸ்.ஷன்மதி, மதுரை.

பார்க்காதே... ஆனா பாரு!

நான் ஒரு ஏகபத்தினி விரதன். பிற பெண்களை ஏறிட்டும் பார்ப்பது கிடையாது. ஆனால், சில பெண்கள் புடவை அணிகிற அழகைப் பார்த்தால்...
புடவை அணிந்திருக்கும் இவர்கள், தோள்பட்டை ஜாக்கட்டுடன் புடவையை இணைத்து, பின் குத்தியிருப்பர்; முந்தானை ஏறும் இடத்தில், ஒரு பின்; வயிற்றுப்பகுதியை, ஒரு சுற்று புடவையால் சலோபன் பேப்பர் போல் சுற்றியிருப்பர்; அங்கும் இரண்டு, மூன்று இடங்களில் பின் குத்தியிருப்பர்.
மொத்தத்தில், இவர்களது இடுப்பை, வயிற்றை புடவை ஒதுங்கினால், பக்கவாட்டை பார்க்க, உலகத்து ஆண்கள் எல்லாம் அலைவது போலொரு பாதுகாப்பு ஏற்பாடு! தேவையா இது?
எங்களுக்கு வேற வேலையே இல்லையா அல்லது இது பாரா முகத்தினரை பார்க்க வைக்கும் எதிர்மறை உத்தியா? ஜாக்கட்டை சற்று இறக்கமாக, தளர்த்தி தைத்து, தெரியும் வயிற்றுப்பகுதி அகலத்தை, கணிசமாக கண்ணை உறுத்தாமல், குறைக்கலாமே?
கி.மு.பரந்தாமன், வாணியம்பாடி.

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
27-நவ-201216:17:46 IST Report Abuse
சகுனி அப்பா பரந்தாமா? உன் அறிமுக வரிகளுக்கும் முடிவுரைக்கும் சம்பந்தமே இல்லையே .... நீ ஏக பத்தினி விரதனா அல்லது "ஏகப்பட்ட" பத்தினி விரதனா? ... சும்மா சொல்லகூடாது .... நல்லா அனுபவிச்சி எழுதி இருக்க ..... வாழ்த்துக்கள் .... அவங்க வசதிக்கு எங்கயோ பின் போட்டுக்குட்டு போறாங்க ... பின் குத்தினா அவங்களுக்கு வலிக்க போகுது ... உனக்கென்னையா வந்தது ... சரியா துணிய மூடலைனாலும் லபோ திபோன்னு கத்துறாங்க ... இழுத்து போத்திகிட்டு இந்த மாதிரி போனாலும் உங்க மாதிரி ஆளுங்களுக்கு கஷ்டமா இருக்குது .. என்ன தான் செய்வாங்க பொண்ணுங்க பாவம் ....??
Rate this:
0 members
0 members
51 members
Cancel
mu.gopal - karur,இந்தியா
26-நவ-201217:40:09 IST Report Abuse
mu.gopal அய்யா ஏகப்பட்ட பத்தினி விரதா உனக்கு பிடிக்கலேன்னா விடேன், அதுதான்யா பெண்களுக்கு அழகே. பெண்கள் இயற்கையின் அற்புதமான படைப்பு, தாய்மை அவர்களின் சிறப்பு. பெண்மையை தாய்மையாய் பார் ஒரு மதிப்பு தோன்றும்
Rate this:
0 members
1 members
28 members
Cancel
Vaal Payyan - Chennai,இந்தியா
26-நவ-201216:09:19 IST Report Abuse
Vaal Payyan நீ பரந்தாமன் இல்ல பக்கா காமன் ..
Rate this:
0 members
1 members
30 members
Cancel
Neeraja - Bangalore,இந்தியா
26-நவ-201215:58:14 IST Report Abuse
Neeraja பரந்தாமன் நீங்கல்லாம் ஏக பத்தினி விரதன் நு சொல்லி அந்த ராமர் ஓட புனிதத்த கெடுக்காதிங்க. புடவை அணியிறது அவங்கவங்க இஷ்டம். நீங்க ஏன் இப்படி ஷர்ட் போடுரிங்கனு எந்த பொண்ணாவது கேட்டாங்களா. உங்களுக்கு ஏன் இந்த வீண் வேலை. அவங்க எப்டி டிரஸ் பண்ணா உங்களுகென்ன. உங்க வேலைய பாத்துட்டு போக வேண்டியதான? உடம்ப காமிச்சி டிரஸ் போட்டாலும் தப்பு. உடம்ப மறச்சி டிரஸ் போட்டாலும் தப்பு.. நீங்கலாம் திருந்தவே மாட்டிங்கள? த்தூ ....
Rate this:
2 members
0 members
29 members
Cancel
Rajagiri.Siva - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
26-நவ-201213:25:40 IST Report Abuse
Rajagiri.Siva ஆண்,பெண் இருபாலரும் சம்பாதிக்கும் இக்காலத்தில் பணத்தை எப்படி கையாள வேண்டும் என்ற பயிற்சி அவசியமே...முறையற்ற, தேவையற்ற செலவை கட்டுப்படுத்த இது உதவும்.
Rate this:
0 members
1 members
7 members
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
26-நவ-201212:34:14 IST Report Abuse
pattikkaattaan "புடவை அணிந்திருக்கும் இவர்கள், தோள்பட்டை ஜாக்கட்டுடன் புடவையை இணைத்து, பின் குத்தியிருப்பர் முந்தானை ஏறும் இடத்தில், ஒரு பின் வயிற்றுப்பகுதியை, ஒரு சுற்று புடவையால் சலோபன் பேப்பர் போல் சுற்றியிருப்பர். அங்கும் இரண்டு, மூன்று இடங்களில் பின் குத்தியிருப்பர்.".... அப்பா பரந்தாமா.. பாக்க முடியிலேன்னு ரொம்ப வருதப்படுகிரீரே ... "சீ .. சீ .. இந்தப்பழம் புளிக்கும் .." என்ற கதையாய் உள்ளது நீங்கள் சொல்வது ..
Rate this:
0 members
0 members
23 members
Cancel
Nagaraj - Hyderabad,இந்தியா
26-நவ-201212:12:08 IST Report Abuse
Nagaraj (பரந்தாமன், வாணியம்பாடி) நான் நல்லவன், நான் நல்லவன், நான் நல்லவன். ஒன்ன நம்பற மாதிரி இல்லையேப்பா
Rate this:
0 members
0 members
29 members
Cancel
arun - chennai,இந்தியா
25-நவ-201216:21:53 IST Report Abuse
arun ஆதங்கன் கருத்து மிக சரியானது. பள்ளி மாணவ மாணவிகளை பள்ளிக்கூடமே கெடுத்து விடுகிறது. சில சினிமா படங்களில் கூட, 10 12 படிக்கும் மாணவர்கள் காதலித்து டூயட் பாடுகிற்றனர். இப்படி பட்ட படங்களை தவிர்க்க வேண்டும் என்றால், நடப்பதை தான் படம் எடுக்கிறோம் என்கின்றனர் படக்குழுவினர். எங்கேயோ நடப்பதை மிகைப்படுத்தி படமெடுத்து, இது போல் பல பள்ளி மாணவ மாணவிகள் படிப்பை சிதற விட்டு காதலில் விழ வழிகோலுகிறது.
Rate this:
1 members
1 members
42 members
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
28-நவ-201202:09:49 IST Report Abuse
GOWSALYAஅருண் [ சென்னை ]....நீங்க சொன்னது உண்மைதான்.நடப்பதை படமாக எடுக்கவில்லை,படமாக எடுப்பதையே மாணவமாணவிகள் செய்கின்றனர்....."" நீயாநானா"" என்ற நிகழ்ச்சி பார்த்தோம்.அதில ஒரு மாணவி சொல்றா,தனக்கு ஒருமாத செலவுக்கு ஐம்பதாயிரம் ரூபா வேண்டுமாம்.எல்லாம் மேக் அப் செய்யவும்,போன் பேசவுமே....இவ்வளவுக்கு ஒரு மாணவி.எல்லாம் பெற்றோரின் பணம்.இது எப்படி இருக்கிறது?....இது எப்படி தொடங்கியது?....எல்லாம் சினிமாவாலே......அவர்களுக்குத் தேவை பணம்.அது எந்த வழியில் வந்தாலும் பரவாயில்லை....
Rate this:
0 members
0 members
12 members
Cancel
Rajagiri.Siva - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
25-நவ-201213:44:16 IST Report Abuse
Rajagiri.Siva ஏகபத்தினி விரதனின் எளிமையான பேட்டி...அவருக்கு அசிரமம் திறக்க போதுமான தகுதி உள்ளது என்பதை காட்டுகிறது...
Rate this:
1 members
2 members
66 members
Cancel
unmaiyalan - bangaluru,இந்தியா
25-நவ-201209:35:35 IST Report Abuse
unmaiyalan இன்னும் பெண்களை மளிகை சாமான் வாங்குவதையும் , சாம்பார் வைப்பதையும் சொல்லி கொடுக்கிறார்கள் ....இது எல்லாம் கி.மு 10 நூற்றாண்டில் போய்விட்டத்தாக சொன்னார்கள்
Rate this:
6 members
1 members
16 members
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.