அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 நவ
2012
00:00

"மக்கள் தொகையை கட்டுப்படுத்த இங்கே, நாம் படாதபாடு பட்டுக் கொண்டு இருக்கும்போது, மக்கள் தொகையை அதிகப்படுத்த பெருமுயற்சி எடுத்து வருகிறது ஆஸ்திரேலிய அரசு.
நிலப்பரப்பில், நம்மை விட பல மடங்கு அதிகம் உள்ளது ஆஸ்திரேலியா. இந்தியா, 32 லட்சத்து 80 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது; ஆஸ்திரேலியா, 76 லட்சத்து 82 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது.
நம் ஜனத்தொகை, 117 @காடி. ஆஸ்திரேலியாவிலோ, 16 கோடி தான். ஆஸ்திரேலிய ஆண்கள் பலர், என்ன காரணத்தாலோ குழந்தை கொடுக்கும் ஆற்றலை இழந்து வருகின்றனர். எனவே, ஆஸ்திரேலிய நாட்டின் பல நகரங்களிலும், "விந்து வங்கிகள்' வேகமாக திறக்கப்பட்டு வருகின்றன.
ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்று, இவ்வித, "விந்து வங்கிகள்' பற்றி விரிவாகக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. உ.ஆ., ஒருவரின் உதவியுடன் படித்த போது கிடைத்த தகவல்கள்:
"பெர்டிலிட்டி சொசைட்டி ஆப் ஆஸ்திரேலியா' என்ற அமைப்பின் முக்கிய உறுப்பினர், டாக்டர் ஜான் மக் பெயின். நாட்டில் உள்ள, "தகுதி' படைத்த, "டொனர்'கள் - தானம் செய்பவர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்:
உங்கள் நாட்டிற்கு, உங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்கு, உங்கள் உதவி தேவை. 18 முதல் 45 வயது உடைய ஆண்களே... உங்களது, "விந்து'வை தானம் செய்யுங்கள். வெட்கப்படாதீர்கள். நீங்கள் செய்யும் தானத்தால், ஆஸ்திரேலிய சமூகம் வளர்ச்சி அடையும்!
குழந்தையில்லாமல் கவலையும், துன்பமும், அவப்பெயரும் பெற்ற தம்பதியருக்கு, உங்களால் சந்தோஷத்தையும், மனநிம்மதியையும் கொடுக்க முடியும்!
ஆஸ்திரேலியாவில், 10 ஆண்களுக்கு ஒருவர் என்ற கணக்கில் மலட்டுத்தன்மை பெருகி வருகிறது. பிறக்கும், 250 குழந்தை களில் ஒன்று செயற்கை முறையில் கருவூட்டப்பட்டு பிறக்கிறது. வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளும் சட்டம், ஐரோப்பிய நாடுகளைப்போல அல்லாமல், ஆஸ்திரேலியாவில் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது.
எனவே, செயற்கையாக கருவூட்டும் முறையை பலரும் இப்போது நாட ஆரம்பித்துள்ளனர்; ஆனால், "விந்து' தானம் கொடுப்பவர்கள் நம் நாட்டில் குறைந்து வருகின்றனர். இதற்கு கூச்சம் ஒரு காரணமாக இருந்தாலும், "நாம் கொடுத்த உயிர், எங்கோ, எப்படியோ, முகம் தெரியாமல் வாழுமே!' என்ற பாசம் கலந்த எண்ணமும் காரணமாக அமைந்து விடுகிறது. இதனால், பிள்ளை பேறற்ற தம்பதியர், செயற்கை முறை கருவூட்டல் பெற நீண்டநாள் காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலையும் தோன்றியுள்ளது.
நம் நாட்டில் விக்டோரியா மாநிலம் தான் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. மாநிலம் முழுவதற்குமே, 40 பேர் தான் விந்து வங்கிகளில் பெயர் பதிவு செய்து உள்ளனர்; ஆனால், செயற்கை முறை கருவூட்டலுக்காக காத்திருக்கும் தம்பதியரின் எண்ணிக்கையோ, 300க்கும் மேல். ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை இவர்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நாடு வளர... மக்கள் சக்தி தேவை. நீங்கள் கொடுக்கும் உயிர், நாளை நாட்டையே ஆளும் பிரதமராகக் கூட வரலாம்! எனவே, சுயநலம் இல்லாத இந்த தேசப் பணிக்கு உதவுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தானம் கொடுக்க விரும்புபவர்களுக்கு, "எய்ட்ஸ்' போன்ற நோய் இருக்கிறதா என முதலில் சோதனை செய்கின்றனர். பின் அவரது, "விந்து'வில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை கணக்கிடுகின்றனர். எவ்வித குறையும் இல்லாத பட்சத்தில், தானம் கொடுப்பவர் மீண்டும், மீண்டும் அழைக்கப்படுகிறார்.
இந்த தானத்திற்கு பண உதவி ஏதும் கொடுப்பதில்லை; போக்குவரத்து கட்டணம், அதுவும், தானம் செய்பவர் விருப்பப்பட்டால் மட்டும் அளிக்கின்றனர்.
பிரச்னைகளின் பரிமாணங்கள் நாட்டுக்கு நாடு எதிர், எதிர் திசையில் இருப்பதைப் பார்த்தீர்களா?
***

கடமையை முடித்துவிட வேண்டும் என்ற வேகத்தில், அறியாப் பருவத்தில் தம் பெண்களுக்கு திருமணம் செய்து கொடுத்து விடுகின்றனர் சில பெற்றோர். மண வாழ்வைப் பற்றியோ, இல்லற உறவைப் பற்றியோ ஒன்றுமே தெரிந்திருக்க வாய்ப்பில்லாத அவ்விளம்பெண்கள், பின் அனுபவிக்கும் துன்பங்கள் அளவிட முடியாமல் போய் விடுகிறது.
திருவண்ணாமலை மாவட்ட வாசகி ஒருவர் எழுதிய கடிதம்:
என் பெற்றோருக்கு நான் ஐந்தாவது பெண். படித்துக் கொண்டு இருக்கும்போது படிப்பை பாதியில் நிறுத்தி, 15 வயதில் திருமணம் செய்து வைத்து விட்டனர். திருமணம் முடிந்து, 18வது வயதில் தான் எனக்கு உலகமே புரிய ஆரம்பித்தது; நான் ஒரு காட்டுமிராண்டி கும்பலுக்கு மருமகளாக வந்ததும் புரிந்தது. என்னுடைய மாமனார், பொம்பளை பொறுக்கி; பெண்மையை கேவலமாக நினைப்பவன். இவ்வளவு நாள் கூட்டுக் குடும்பமாக இருந்து, இப்பொழுது தனி குடும்பமாக பிரிந்ததும் பிரச்னை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
ஒரு பக்கம், மாமனாருடைய பந்துக்களின் கேவலமான பேச்சு; மறுபக்கம், எதற்கு எடுத்தாலும் சந்தேகப்படும் கணவர். தாய் வீட்டிற்கு சென்று வந்தால் கூட சந்தேகம். கற்பு என்ன கையிலா இருக்கிறது, தொலைத்துவிட? மனதில் அல்லவா இருக்கிறது! இது புரியாமல் பேசுகிறார்! 17 வருட மண வாழ்க்கையில் மனைவியை புரிந்து கொள்ளாத கணவருடன் எப்படி காலம் தள்ளுவது என்று புரியாமல் தவிக்கிறேன். மனைவியும் ஒரு மனிதப் பிறவி, அவளுக்கும் விருப்பு, வெறுப்பு உண்டு என்று புரியாத கணவர்.
இப்படிப்பட்ட கணவரிடம் இருந்து பிரிந்து, ஆறு மாதம் சுதந்திரமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று மனம் கற்பனை செய்கிறது. இப்படி ஒரு சூழ்நிலை அமைந்தால், நான் கடவுளுக்கு நன்றி சொல்வேன்.
இதற்கு காரணம் என் பெற்றோர். திருமண வயது, 18 என்று சட்டம் கூறுகிறது. அதையும் மீறி உலகமே தெரியாத வயதில் திருமணம் செய்து கொடுத்து விடுகின்றனர் சில பெற்றோர். "மண வாழ்க்கை சரியாக அமையவில்லை!' என்று பெற்றோரிடம் முறையிட்டால், "எங்கள் கட மையைத்தான் நாங்கள் செய்தோம். இது உன்னுடைய தலைவிதி!' என்று பூசி மெழுகி விடுகின்றனர். இவர்களை என்ன செய்வது என்றே புரியவில்லை.
காலம், எழுந்து நில் என்று சொல்லும்போது, உட்கார்ந்திருந்தால், பின்னர் படுக்க வேண்டியதாகி விடும் என்று சொல்லும் பழமொழி என் வாழ்க்கையில் உண்மையாகி விட்டது. இப்பொழுது எல்லாவற்றையும் நினைத்து, வேதனைப் பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் தான் இருக்கிறேன். என் 15வது வயதில், என் பெற்றோரை எதிர்த்து நின்று, மேற்கொண்டு படித்து இருந்தால், இப்படி ஒரு நிலைமை வந்து இருக்காது.
ஒரு பெண்ணுக்கு, 18-20 வயதில் தான் உலகமே புரிகிறது. அதன் பின் அவளுக்கு எதில் விருப்பமோ, அதன்படி அவள் வாழ்க்கையை அமைத்து கொடுக்கலாம். இதை விட்டு, குடும்ப மானம், மேற்கொண்டு படித்தால் திமிர் வந்து விடும், கற்பை தொலைத்து விடுவாள், என்று பெண்மைக்கு கட்டுப் போட்டு அடிமைப்படுத்துகின்றனர். இதனால், உலகம் புரிவதற்குள் குழந்தை பிறந்து விடுகிறது. பின் குழந்தைகளுக்காக தன்னம்பிக்கை, மானம், சுய கவுரவத்தை எல்லாம் விட்டுக் கொடுத்து இயந்திர வாழ்க்கை வாழ வேண்டியதாக உள்ளது. அப்படியே வாழ்ந்தாலும் சில சமயம் மனம் விட்டு போகிறது. எங்கு திரும்பினாலும் இடிக்கிறது.
மனம் நொந்து இப்படியே கடிதம் தொடர்கிறது.
குறைந்த அளவே படித்திருந்தாலும், இவரது எழுத்தில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது. ஒரு எழுத்தாளராகக் கூட இவரால் மலர்ந்திருக்க முடியும், இன்று... பெற்றோரே சிந்தியுங்கள்!
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shakthi - Puducherry,இந்தியா
29-நவ-201213:00:00 IST Report Abuse
Shakthi ஒவ்வொரு விஷயத்தையும் கட்டியவனுடன் கலந்தாலோசியுங்கள் இந்த பூமியில் சுவர்க்கம் உங்கள் கணவனை சுற்றியிருக்கும் ஒரு சிறிய வட்டம்தான் என்று உங்களுக்கு தோணும்,முயற்சித்துப்பாருங்கள்.....அருமையாந கருத்து. மிகவும் சரியானது
Rate this:
Share this comment
Cancel
ChandraSekarenthiran - Chennai,இந்தியா
27-நவ-201221:19:19 IST Report Abuse
ChandraSekarenthiran பொதுவாகவே திருமணம் என்பது 10 முதல் 14 வயதுக்குள் செய்துவிடுவது சிறந்தது. பால்ய விவாகங்களை ஒழிப்பதற்கு சொல்லப்பட்ட காரணம் இளம் வயதில் அந்தப்பெண் விதவையானால் அவள் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பது. 25 வயதில் ஒரு பெண் விதவையகும் பட்சத்தில் ஒரு 10 வருடம் (25- 35) தனிமையை அனுபவிக்க வேண்டி இருந்தது. அதுவும் 100ல் ஒரிருவர் மட்டுமே அப்படி பாதிக்கப்பட்டார்கள்.(அதற்கு மறுவிவாகங்கள்தான் தீர்வே அல்லாது பால்யவிவாகங்கள் ஒழிப்பதல்ல.) ஆனால் அதற்கு முன்னால் வாழ்க்கையின் சுவாரஸ்யமான 10- 12 வருட தாம்பத்யத்தை அனுபவித்திருப்பார்கள். ஆனால் பெண்ணுக்கு 18 வயதும் ஆணுக்கு 21 வயதும் திருமண வயது என்று வைத்திருக்கும்போது அந்த வயதில் பெரும்பலான பேருக்கு திருமணம் ஆவதில்லை. படிப்பு, மேற்படிப்பு, வேலை, வருமனம், பேங்க் பேலன்ஸ், கார் இவ்வலவும் ஏற்ப்பாடு செய்துவிட்டு அதன்பின்புதான் திருமனத்தை பற்றியே யோசிக்க முடிகிறது இதற்குள் பெண்ணுக்கு ஒரு 25 அல்லது ஆணுக்கு ஒரு 30 வயதாகிவிடுகிறது. ஆக யாரோ ஒரு சிலர் அனுபவித்துக்கொண்டிருந்த தனிமையைத் துன்பத்தை எல்லோரும் அனுபவிக்க வைத்ததுதான் இந்த சிஸ்டத்தின் பலன். அதுவும் இவர்கள் நிலை இன்னும் பரிதாபம். 12 வயதில் உடலளவில் இணை சேர்வதற்கு தயாராகும் பெணும், 14 வயதில் இணை சேர்வதற்கு தயாராகும் ஒரு ஆணும் அடுத்த 10- 15 வருடங்கள் தனிமையை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் தவறு.வாழ்க்கையின் சுவாரஸ்யமான 10- 15 வருடங்களை இழந்துவிட்டு அதற்குப்பிறகு வாழ்வின் சுவாரஸ்யங்கள் தீர்ந்து போன 10- 15 வருடங்கள் மட்டுமே வாழ்கையை வாழ்கிறர்கள். தவிர கணவனுக்கு தகுந்தபடி தன்னை மாற்றிக்கொள்வதும், மனைவிகு தகுந்தபடி தன்னை மாற்றிக்கொள்வதும் பால்யவிவாகங்களில்தான் முடியும். ஒருவரின் குனம் முழுமையாக வுர்வான பிரகு அதை மற்றொருவருக்காக மாற்றிகொள்வது எளிதல்ல. இங்கே இரண்டாவது கடிதத்தை எழுதியுள்ள வாசகியின் பெற்றோர் செய்த நல்ல காரியம் அந்தப் பெண்ணை விரைவில் திருமணம் செய்து வைத்தது. இல்லையென்றால் அந்தப்பெண் இந்நேரம் அந்தக் கணவனை தவிக்க விட்டுவிட்டு போயிருப்பாள். தன்னுடைய வாழ்க்கைத்துணை இப்படி இருக்கவேண்டும் என்பதைத்தாண்டி தன்னுடைய மாமனார், மாமியார் இப்படி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்குமளவுக்கு அந்தப்பெண்ணுக்கு ஆதிக்கவெறி இருந்திருக்கிறது. ஏன் அந்த மாமனாருடன் மாமியார் குடும்பம் நடத்தி குழந்தையும் பெறவில்லையா? காட்டுமிராண்டி கும்பல், பொம்பளைபொறுக்கி போன்ற வார்த்தை பிரயோகங்கள் இந்தப்பெண்ணின் தராதரத்தை காட்டுகின்றது. கணவன் சந்தேகப்படுக்கிறான் அல்லது மனைவி சந்தேகப்படுகிறால் என்பது தன்னுடை பக்கத்தை டிஃபண்ட் பண்ண சொல்லப்படும் வாதங்கள். சந்தேகத்துக்குரிய நடவடிக்கை இருந்திருந்தால் அந்த பெண்ணோ அல்லது ஆணொ திருமனத்துக்கு முன்Pஏ திருமனத்தை வேண்டாமெறு மறுத்திருப்பார்கள். ஆக நம்பித்தான் கல்யனம் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நடக்காதபோதுதான் சந்தேகம் வருகிறது. கணவனிடமிருந்து பிரிந்திருந்தால் சந்தோஷமாக இருப்பேன் என்று சொல்லும் பெண் எந்த அளவுக்கு கணவனுக்கு சந்தேகம் வராத அளவுக்கு நடந்திருப்பாள் என்பது கேள்விக்குரியது.
Rate this:
Share this comment
Roberts Paulson - Bathinda,இந்தியா
29-நவ-201216:17:57 IST Report Abuse
Roberts Paulsonசார், உங்களுக்கு ஒரு 151 வயசு இருக்குமா? உங்க கருத்து அதாள பழசா இருக்கே....
Rate this:
Share this comment
Nishanthan Sathananthasivam - luhansk ,உக்ரைன்
29-நவ-201221:42:37 IST Report Abuse
Nishanthan Sathananthasivamதன்னுடைய வாழ்க்கைத்துணை இப்படி இருக்கவேண்டும் என்பதைத்தாண்டி தன்னுடைய மாமனார், மாமியார் இப்படி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்குமளவுக்கு அந்தப்பெண்ணுக்கு ஆதிக்க வெறி இருந்திருக்கிறது. நல்ல தரமான பதிவு sir ,,தவிர ஒரு சிறு தகவல் ,,உலகின் எந்த மதமோ இல்லை அவ்வளவு மதங்களுக்கான புத்தகங்களோ ஆணுக்கோ இல்லை பெண்ணுக்கோ திருமணம் செய்வதற்கு என்று எந்த வயதையும் குறிப்பிட்டுச் சொல்வதில்லை..1990 களின் ஆரம்பத்தில் பெண்ணுரிமை கேட்டு அமெரிக்காவில் எப்பொழுது பெண்ணியவாதிகள் குரல் எழுப்பத் தொடங்கினார்களோ அன்றே உலகில் பிரச்சனைகளுக்கான அடித்தளம் இடப்பட்டு விட்டதாகக எங்கோ படித்த நினைவு , சிறு வயதில் திருமணம் செய்தால் வாழ்வின் உன்னதமான நிலைக்கு வரமுடியும் என்பதற்கு மகாத்மாவும் பாரதியாரும் நல்ல முன்மாதிரிகள் ....
Rate this:
Share this comment
Cancel
itashokkumar - Trichy,இந்தியா
27-நவ-201207:17:06 IST Report Abuse
itashokkumar இந்தியாவில் மக்கள் தொகையினை யார் கட்டு படுத்துகிறார்கள் என்று தெரிய படுத்துங்கள். கொசுவே யாரும் இங்கு கட்டு படுத்துவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Abdul Azeez.P.D. - Kozhikkode,இந்தியா
26-நவ-201220:55:09 IST Report Abuse
Abdul Azeez.P.D. நிறைய பிரச்சினைகள் வருவதற்கு காரணம் கணவனுடன் பெண்கள் கலந்தாலோசிப்பதில்லை, வீட்டில் இருந்து ஒரு பிடி மண் எடுத்துக்கொடுத்தாலும் கணவனிடம் கேட்டு கொடுக்க வேண்டும்,சிறிய அற்பமான பொருள்களாக இருந்தால் கொடுத்து விட்டாலும் கூட கணவன் வீட்டிற்கு வந்தவுடன் அவனிடம் சொல்ல வேண்டும்,அது அவனுக்கு பிடிக்கவில்லை என்றால் அன்று முதல் அந்த செயலை செய்யக்கூடாது, அடிமைத்தனம் என்று நினைக்க வேண்டாம்,அப்படியே நினைத்தாலும் தவறில்லை,அடிமைத்தனம் என்பது வேறு அனுசரணை என்பது வேறு,நமக்கு இரவிலும் பகலிலும் இன்பத்திலும் துன்பத்திலும் பக்க பலமாக கணவனை விட சிறந்த ஒரு உயிர் இருக்க முடியாது, சகோதரிகளே நீங்கள் அடிமைத்தனம் என்று நினைத்தாலும் அனுசரணை என்று நினைத்தாலும் சரி ஒவ்வொரு விஷயத்தையும் கட்டியவனுடன் கலந்தாலோசியுங்கள் இந்த பூமியில் சுவர்க்கம் உங்கள் கணவனை சுற்றியிருக்கும் ஒரு சிறிய வட்டம்தான் என்று உங்களுக்கு தோணும்,முயற்சித்துப்பாருங்கள்,17 - 18 வருடங்களாக இருக்கும் கசப்பினை ஒரு நாள் ஒரு வாரம் ஒரு வருடத்தில் சரியாகிவிடாது,பழைய பிணி தீர நீண்ட சிகிச்சை தேவை.
Rate this:
Share this comment
hubaidh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-நவ-201213:06:29 IST Report Abuse
hubaidhநல்ல கருத்தை இங்கு பதிய வைத்ததற்கு மிக்க நன்றி...
Rate this:
Share this comment
Gokul - Bangalore,இந்தியா
27-நவ-201213:15:28 IST Report Abuse
Gokulநீங்கள் சொல்லியது போல மனைவி மட்டும் இல்லாமல், கணவனும் அனுசரணையாக இருப்பது அவசியம்.....
Rate this:
Share this comment
Raman - Chennai,இந்தியா
29-நவ-201209:30:41 IST Report Abuse
Ramanதவறாக எண்ணினாலும் - இது போன்ற மடத்தனமான பழைய உலக கருத்துகளே பெண்களை இன்னமும் அடிமைகளாக வைத்திருக்கிறது. அந்த காலம் மலை ஏறி விட்டது. ஆண் என்பவன் மாற வேண்டும், மாற வேண்டிய கட்டயத்திற்கு உள்ளாகி இருக்கிறான். கணவன் என்ற சிறு வட்டம் - அதில் சிறை இருக்க வேண்டும் என்று என்னும் மட கூட்டம், இது இருக்கும் வரை நிச்சயம் பெண்கள் முன்னேற முடியாது என்ற ஆணவம்தான் இப்படி எழுத வைக்கிறது. படித்த பெண்கள் அதனை என்றோ தகர்த்து விட்டனர். இன்றோ இந்த மடத்தனம் மதம், பழக்க வழக்கம் என்ற போர்வையில் பொருளாதார ரீதியாக சார்ந்துள்ள பெண்கள் மீது செலுத்த படுகிறது. இந்தியாவில் மட்டும் அல்ல உலகு எங்கும் பார்த்தால் - குறிப்பிட மதம் சார்ந்தவர்கள் பெண்களை அதிகம் அடிமை போல (ஒரு பொருள் போல்) நடத்துவார்கள். அந்த மதத்திலும் படித்தவர்கள் தப்பித்து விடுவார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Hari Doss - Pollachi,இந்தியா
26-நவ-201215:41:12 IST Report Abuse
Hari Doss ஆஸ்திரேலியாவின் சமூக வாழ்க்கை அப்படி. சிறு வயதிலேயே குடிப்பது பல பெண் நண்பர்களுடன் பழகுவது என்று வளர்வதால் ஆண்களின் மலட்டுத் தன்மை கூடிவிட்டது. இதே நிலை நம் இந்தியாவில் வர வெகு நாள் தேவை இல்லை. ஏன் என்றால் நம் இப்போதைய தலைமுறையினரும் (ஆணும், பெண்ணும்) கிட்டத் தட்ட அதே போல் ஒரு கட்டுப்பாடு இல்லாமல் வாழ ஆசைப் படுகின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
jabha - chennai,இந்தியா
26-நவ-201214:34:57 IST Report Abuse
jabha gokzz ....... i agree with you. இந்த வேதனை என் வாழ்விலும் நடந்தது (got married in 18) . but i tolerated all situations . now doing well
Rate this:
Share this comment
Gokul - Bangalore,இந்தியா
27-நவ-201213:20:46 IST Report Abuse
GokulGod Bless :-)...
Rate this:
Share this comment
Cancel
Thanga Rajan - Adelaide,ஆஸ்திரேலியா
26-நவ-201203:06:09 IST Report Abuse
Thanga Rajan ஆஸ்த்ரேலியாவில் மக்கள் தொகை 16 கோடியென்பது யார் கணிப்பு? 23 மில்லியன் 2 .3 கோடி மக்கள்தான்
Rate this:
Share this comment
Rama Chandran - Jeddah,சவுதி அரேபியா
26-நவ-201213:17:53 IST Report Abuse
Rama Chandranஇந்தியாவின் மக்கள்தொகையும் 117 கோடி அல்ல, 121 கோடி. ( 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி)...
Rate this:
Share this comment
கீரன் கோவை - Coimbatore,இந்தியா
26-நவ-201221:22:29 IST Report Abuse
கீரன் கோவைஉண்மை. நமது மக்கள் தொகை பெருக்கம் ஏறக்குறைய அதே 23 மில்லியன். அதாவது நாம் ஒவ்வொரு வருடமும் ஒரு ஆஸ்திரேலியாவை உற்பத்தி செய்கிறோம்....
Rate this:
Share this comment
Samir - Trichy,இந்தியா
28-நவ-201200:02:35 IST Report Abuse
Samirமும்பையின் மக்கள் தொகை 18 மில்லியன், 2 மும்பை மக்கள் தொகை ஆஸ்திரேலியா மக்கள் தொகையை விட அதிகம்....
Rate this:
Share this comment
Cancel
சக்தி - chennai,இந்தியா
25-நவ-201221:09:43 IST Report Abuse
சக்தி "காலம், எழுந்து நில் என்று சொல்லும்போது, உட்கார்ந்திருந்தால், பின்னர் படுக்க வேண்டியதாகி விடும்" இந்த பழமொழி இங்கே எதற்கு என்று தெரியவில்லை .... ஆனால் எனக்கு பிடித்து இருக்கு
Rate this:
Share this comment
Cancel
Gokul - Bangalore,இந்தியா
25-நவ-201210:05:43 IST Report Abuse
Gokul ஊரார் சொல்லுவார், சுற்றத்தார் வசை பாடுவார் என்று பெண்களின் வாழ்க்கையை இரையாக்க முயல்வது கொடுமை..வன்மையாக கண்டிக்க பட வேண்டியது...ஊரான் ஒன்றும் வந்து உங்களுக்கு உதவி செய்து விட போவது இல்லை...உங்கள் பெண்ணிற்கு பிடித்த மாப்பிள்ளையை திருமணம் செய்து வையுங்கள்,,அல்லது அவர்களின் மற்ற அசைகள் நிறைவேறியவுடன் (பட்ட படிப்பு, வேலை, Etc .,) திருமணம் செய்து வையுங்கள்...இது போன்ற அவசர திருமணங்கள் தான் தவறான முடிவிற்கு கொண்டு சென்று விடுகிறது..பெண்ணின் அடிப்படை உணர்சிகள் புறகணிக்க படும் போது தான் தற்கொலை, கள்ள காதல், என்ற சம்பவங்கள் நடக்கின்றன..இவர் எப்படியோ இவருடன் வாழ்ந்து விட்டார்...சிலர் கள்ள காதல் என்று வேறு தவறான பாதையில் சென்று இருப்பர்...இவர் மற்ற பல விளைவுகளை கவனத்தில் கொண்டு சரி என்னும் பட்சத்தில் அவரை விவாகரத்து செய்ய வேண்டும்...கடைசி காலத்திலாவது சற்று மன நிம்மதி கிடைக்கும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.