*டி.ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்: "அப்புறம் பார்க்கலாம்' என, எடுத்து வைத்த ஏராளமான நூல்கள், என் நூலகத்தில் உள்ளன. அவை நாள்தோறும் என்னை ஏக்கமாக பார்க்கின்றனவே...
"அப்புறம் பார்க்கலாம்' என, ஒதுக்கி வைக்கப்படும் வேலைகள், ஒரு நாளும் முடியாது. குளிப்பது, சாப்பிடுவது, தூங்குவது போன்று படிப்பதற்கும், ஒரு நேரம் ஒதுக்கி ஆக வேண்டும். இல்லை என்றால், இருட்டு உலகுக்கு போய் கொண்டிருக்கிறோம் என்று பொருள்.
***
*எஸ்.வெங்கடேஷ்வரன், திருப்பூர்: சீக்கிரமாக, குறுக்கு வழியில் நான் புகழ் பெற ஆசைப்படுகிறேன்; இதற்கு என்ன செய்ய வேண்டும்?
எந்த விஷயத்திலும், "நெகடிவ் அப்ரோச்' எடுங்கள்... எதை எடுத்தாலும் மறுத்து பேசுங்கள்... தமிழில் கவிதைகள், சிறுகதை கள், கட்டுரைகள் எதுவுமே இல்லை... தமிழில் சினிமாவே இல்லை... இனி, நான் எடுத்தால் தான் உண்டு; எழுதினால் தான் உண்டு என்றும், தமிழகத்தில் மனிதர்களே இல்லை என்றும் தத்துவம் பேசுங்கள்... புகழ் அடைந்து விடலாம். ஆனால், எவ்வளவு காலத்துக்கு அது நிற்கும் என்பது எனக்குத் தெரியாது.
***
*எல்.புஷ்பராஜ், பொள்ளாச்சி: மனிதனுக்கு மிக மிக தேவையானது பணம் தானே?
இல்லை... மூளை! மூளை இருந்தால் பணம் என்ன... பல விதமான சங்கதிகளையும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், பணம் மட்டும் இருந்தால் மூளையை பெற முடியுமா?
***
*பி.திருநாவுக்கரசு, கோலியனூர்: தன் தகுதி அறியாதவர் கதி என்னவாகும்?
"துள்ளிய மாடு பொதி சுமக்கும்' என்பது முதுமொழி... தன்னைத் தானே அறியாதவர், ஜால்ராக்களின் புகழ் மொழியால் இழி நிலைக்கு தள்ளப் படுவர்... பிறகு, "உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா' கதை தான்!
***
**பெ.அய்யனார், கீழ்ப்பாக்கம்: எனக்கு வாழ்க்கை கசக்கிறதே...
"ரொட்டீன்' வேலைகளில் இருந்து சற்றும் விலகாமல் இருப்பது - ஒரே மாதிரியான எண்ணம் கொண்டிருப்பது - ஒரே மாதிரி நடப்பது - இப்படி இருந்தால், வாழ்க்கை கசக்கத்தான் செய்யும். உடையில், உணவில், நடையில் மாறுதல் வேண்டும். நண்பர்களில் புதியவர்கள் சேர்க்கை வேண்டும். பேச்சில், எண்ணத்தில் மாறுதல் வேண்டும்.
***
*எம்.முரளிதரன், கடலூர்: கிராமத்து குமரிகளின் ஓரக் கண் பார்வை, நகர்புறத்து, "பிகர்'களின், "சைட்' இவற்றில் எது மிகவும், "கிக்' ஆனது தலைவா?
முன்னது, பால் பாயசம் சாப்பிடுவது போன்றது; பின்னது, ஸ்மூத் விஸ்கி சாப்பிடுவது போன்ற போதை ஏற்படுத்துகிறது. (பதில் உபயம்: லென்ஸ் மாமா; நமக்கு அனுபவமில்லை!)
***
**ஏ.சதாசிவம், உடுமலை: என்ன தான் பட்ஜெட் போட் டாலும், என்னால், செலவை கட்டுப்படுத்த முடியவில்லை. கடன்தான் வாங்க வேண்டி உள்ளது!
பர்ஸ் பஞ்சர் ஆகாமல் இருக்க ஒரே வழி - போலி கவுரவங்களை மூட்டைக் கட்டி வைப்பது தான். கடன், கல்லறையில் தள்ளி விடும்!
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.