இதப்படிங்க முதல்ல..
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 நவ
2012
00:00

வியாபார நோக்கம்!


ஆதிபகவன் இசை விழாவை, கனடாவில் நடத்தியது, பெருமையாக சொல்லிக் கொள்வதற்காக அல்ல, படத்தின் வியாபாரத்தை பெருக்கவே என்கிறார் டைரக்டர் அமீர். மேலும், ஆதிபகவன் படத்தில், ஈழத்தை சேர்ந்த ஒருவரை பின்னணி பாட வைத்திருப்பவர், அடுத்து, தான் இயக்கும் படத்தில், ஈழத்தை சேர்ந்த இருவருக்கு நடிக்க சான்ஸ் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
— சினிமா பொன்னையா

ஜீவா புதிய அறிவிப்பு!


முகமூடி தோல்விக்கு பின், யான் படத்தில் நடிக்கும் ஜீவா, "இனி எந்த படமாக இருந்தாலும், கதை கேட்டு பிடித்தால் மட்டுமே நடிப்பேன்...' என்கிறார். மேலும், "முன்னணி இயக்குனர், புதுமுக இயக்குனர் என்று பாகுபாடு பார்க்க மாட்டேன். நல்ல கதையாக இருந்தால், எந்த இயக்குனர் படத்திலும் நடிப்பேன்...' என்று கூறுகிறார். இதனால், ஜீவாவின் அலுவலகத்தை மீண்டும் புதுமுக இயக்குனர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
சி.பொ.,

"தமிழ், சினிமாவே பெஸ்ட்!' - அஞ்சலி!

தாய் மொழியான தெலுங்கு சினிமா, அஞ்சலிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தாலும், அங்கு அவரது நடிப்பாற்றலை வெளிப்படுத்த போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை என்கிறார். "தமிழ் படங்கள் தான் என் திறமைக்கு சரியான தீனி போடுகின்றன' என்று சொல்லும் அஞ்சலி, "நான் நடித்து வரும், சேட்டை மற்றும் வத்திக்குச்சி படங்கள், என்னை இன்னும் தரமான நடிகையாக்கும்...' என்கிறார். இருக்க, இருக்க எல்லாம் இசைபாடும்!
எலீசா

குழந்தைகளை தத்தெடுத்த ஹன்சிகா!


ஹன்சிகா ரொம்ப இளகிய மனம் கொண்டவர். யாராவது வறுமையில் கஷ்டப்படுவதை அறிந்தால், தன்னால் இயன்ற உதவியை உடனே செய்கிறார். விரைவில் முதியோர் இல்லம் கட்டி, ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப் போவதாக கூறிவரும் ஹன்சிகா, சமீபத்தில், 22 பள்ளிகுழந்தைகளை தத்தெடுத்துள்ளார். அவர்களுக்கு தேவையான படிப்பு, உணவு, உடை என, அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுள்ளார்.
எலீசா

விமலுக்கு மாறிய எழில்!


விஜய் நடித்த, துள்ளாத மனமும் துள்ளும் உட்பட, பல படங்களை இயக்கியவர் எழில். கடைசியாக சிவகார்த்திகேயனை வைத்து, மனம் கொத்திப்பறவை என்ற படத்தை இயக்கி, மீண்டும் முன்னணி ஹீரோவை வைத்து, படம் இயக்க சில நடிகர்களை அணுகினார். ஆனால், யாருமே கால்ஷீட் தர முன்வரவில்லை. அதனால், விமலை, "புக்' செய்து, இது பூக்களின் தேசம் என்றொரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சி.பொ.,

அஜீத்துக்கு ஜோடி ஐஸ்வர்யா ராய்!

குழந்தை பிறந்த பின், சமீபகாலமாக வெளியில் தலை காட்டி வரும் ஐஸ்வர்யா ராய், நடிப்பதற்கும் தன் உடல்கட்டை தயார்படுத்தி வருகிறார். ஆனால், முதலில் தமிழ் சினிமாவில் இருந்து தன் ரீ-என்ட்ரியை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறார். இதையறிந்து, அடுத்து அஜீத் நடிக்கவுள்ள, சுராங்கனி படத்துக்காக, ஐஸ்வர்யா ராயை கமிட் செய்ய பேசி வருகின்றனர். போயும், வந்ததும் பொன்னம்பலம்; திரும்பி வந்ததும் திருவம்பலம்!
எலீசா

சாமியார்களை தோலுரிக்கும் மாஜி ஹீரோ சுரேஷ்!


ஒரு கல் ஒரு கண்ணாடியில் உளுந்தூர் பேட்டை உலகாநந்தா என்றொரு சாமியார் கேரக்டரை, டைரக்டர் ராஜேஷ் புகுத்தியதை அடுத்து, சில படங்கள், சாமியார் கதைகளை மையப்படுத்தி தயாராகிறது. இதில், ரெண்டாவது படம் என்ற படத்தில் சாமியார்களை தோலுரிக்கும் ஒரு அதிரடியான வேடத்தில் நடிக்கிறார் மாஜி ஹீரோவான சுரேஷ்.
சினிமா பொன்னையா

அவ்ளோதான்!

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.