பஞ்ச பூதங்களில் ஒன்று அக்னி. உடலுக்கு வெப்பத்தை அளிப்பவன் அக்னி பகவான். அக்னிக்கு நெருப்பு, தீ என்ற பெயர்களும் உண்டு. நாம் உணவுப் பொருட்களைச் சமைத்து உண்கிறோம். சமைப்பதால், உணவுப் பொருட்களிலுள்ள கிருமிகள் அழிகின்றன. எனவே, நெருப்பு, கிருமிகளை அழித்து, உடலைக் காக்கும் சக்தி கொண்டது.
ஆதியிலிருந்தே மனிதன் அக்னியைத் தெய்வமாகக் கொண்டாடி வந்துள்ளான். பெரும்பாலான பண்டிகைகளில், நாம் விளக்கேற்றி வைப்பது, இதன் அடிப்படையில் தான்.
சிவனுக்கு செந்தீவண்ணன் என்ற பெயரும் உண்டு.
பொதுவாக, கார்த்திகை மாதம் முழுவதும், மாலையில் விளக்கேற்றி வாசலில் வைப்பது வழக்கம். ஆனால், கார்த்திகை தீபவிழாவை கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று, சந்திரன், கார்த்திகை நட்சத்திரத்தில் இருக்கும் போது, கொண்டாடுகின்றனர். சிவ பக்தர்கள், கார்த்திகை தீபத்தன்று சிவனை வழிபடுவர். முருக பக்தர்கள், பரணி தீபம் ஏற்றி, முருகனை வழிபடுவர். வைணவர்கள் விஷ்ணு தீபமேற்றி விஷ்ணுவை வழிபடுவர்.
இறைவன் ஜோதி வடிவாகக் காட்சி அளித்த நாளையே, திருவண்ணாமலைக் குன்றின் மேல் விளகேற்றிக் கொண்டாடுகிறோம். பத்து நாட்கள் திருவண்ணாமலையில், விழா நடைபெறும். பத்தாம் நாள், கார்த்திகை தீபத்தன்று, உதயத்தில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை ஆறு மணி அளவில், அண்ணாமலை தெய்வம், அர்த்தநாரீஸ்வரராய் தங்க வண்ண விமானத்தில் காட்சி கொடுப்பார். மலை உச்சியில், அந்த நேரம் தீபம் ஏற்றப்படும். கோவிலுக்குள் பஞ்ச மூர்த்திகளுக்குத் தீபாராதனையும், அ@த நேரத்தில் நடக்கும்.
பெரிய செப்புக் கொப்பரையில் நெய், துணி, கற்பூரம் ஆகியவற்றை வைத்து, மலை உச்சியில், தீபம் ஏற்றப்படும். அதே நேரம், திருவண்ணாமலை நகர் முழுவதும், வீடுகளில் விளக்கேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
திருவண்ணாமலைக் குன்றில் ஏற்றப்படும் ஜோதியைக் காண, பஞ்ச மூர்த்திகள் வருவதாக ஐதீகம். ஜோதியை அன்று தரிசித்தால், ஐம்புலன்களையும் அடக்கும் ஆற்றல் பெறலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது.
கார்த்திகைப் பொரி பொரித்து, வழிபடுவது சிறப்பானது. அன்பிற்கு வசப்படும் இறைவன், பொரிக்குள்ளும் தோன்றுவான் என்பதே இதன் தத்துவம். அப்பம், கார்த்திகை வடை போன்ற பிற நிவேதனப் பொருட்களையும் செய்து வழிபடலாம்.
பொதுவாக வீட்டில் தீபமேற்றி வைத்தால், மகாலட்சுமி தங்கியிருப்பாள். தீய சக்திகள் நம்மை அண்டாது. கார்த்திகை விரதம் இருந்தால், ஒளிமயமான வாழ்க்கை, உயர் பதவி, இழந்த பொருட்கள் கிடைத்தல் போன்ற நன்மைகள் கிடைக்கும்.
கார்த்திகை விரதம் இருப்பவர்கள், நடராஜர் பத்து, பரமசிவன் தோத்திரம், சிவபுராணம், திருநீற்றுப்பதிகம் போன்ற நூல்களை படிப்பது நலம்.
***
சுப. சஞ்சீவி
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.