பிரபல இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் ராபர்ட் ஜோசப் பெக்கம், தன் உடலில் மொத்தம், 17 விதமான பச்சை குத்திக் கொண்டுள்ளார்.
லேட்டஸ்ட்டாக கருப்பு வெள்ளையில் இயேசுவை, மூன்று குழந்தைகள் தூக்கியுள்ளது போல் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார். வயதானால், தன்னை தன் குழந்தைகள் தான் பாதுகாக்க வேண்டும் என்பதை சிம்பாலிக்காக காட்டத்தான் இப்படி பச்சை குத்தி கொண்டுள்ளதாக கூறுகிறார். மிகுந்த தெய்வ நம்பிக்கை உள்ளவர்.
தன் மனைவி விக்டோரியாவின் பெயரை ஆங்கிலத்தில் குத்தாமல், இந்தியில் பச்சை குத்தியுள்ளார். ஆங்கிலத்தில், விக்டோரியா என்றால், அது இங்கிலாந்தின் முன்னாள் ராணியைத்தான் குறிக்கும். அதை தவிர்க்கத்தான், இப்படி குத்தியுள்ளதாக கூறுகிறார்.
விக்டோரியாவை மணந்து கொண்ட தேதி மற்றும் நாளையும், தன் கையில் பச்சை குத்தியுள்ளார்.
வலது மற்றும் இடது தோள்களில் தேவதையும், மற்றொரு இடத்தில், "நான் அன்பிற்குரியவன்; என்னை சார்ந்தவர்கள் என் அன்பிற்குரியவர்கள்' என்ற பைபிள் வார்த்தைகளை, ஹீப்ரூ மொழியில் பச்சை குத்தியுள்ளார்.
சரி... இந்த பச்சைக் குத்தல்கள் எதற்கு எனக் கேட்டால், "என்னைச் சார்ந்தவர்கள், என்னை வளமூட்டியவர்களை பச்சை குத்தியுள்ளேன். என் மனைவியும், குழந்தைகளும் எப்போதும் என்னுடன் இருப்பதையே விரும்புகிறேன். அவர்கள் என்னுள் இருக்கின்றனர் என்பதை காட்டத்தான் பச்சை குத்தியுள்ளேன்...' என்கிறார்.
— ஜோல்னா பையன்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.