அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 நவ
2012
00:00

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

கலாம் காலம்!

உயர்ந்த லட்சியம் இருந்தால், அருமையான எண்ணம் வரும். எண்ணம் உயர்ந்தால், நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும். எனவே, உயர்ந்த லட்சியம்தான் மக்களின் சிந்தனையை ஒன்றுபடுத்தும். உயர்ந்த லட்சியம்தான் இளைஞர்களை ஈர்க்கும். உயர்ந்த லட்சியம்தான் நாட்டை வழி நடத்தும்.

வெயிட் ஏத்தாதீங்க பாவம் குதிக்கால்!


குதிகாலின் அடிப்பாகத்தை தடவி பார்த்தால் அந்த தோலின் தடிமன் தெரியும். நம் எடையை தாங்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த குதிக்கால் தோலுக்கு மேல் ஒருவித ஸ்பெஷல் கொழுப்பு இருக்கிறது. தொட்டுப் பார்த்தால், சற்றே கடினமான மெத்தையை தொடுவது போன்ற உணர்வு ஏற்படுவது இதனால்தான். இதுபோன்ற கொழுப்பு உடலில் வேறு எங்கும் கிடையாது.
உடலின் மற்ற பகுதியில் தோலுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், தொடைப் பகுதியில் இருந்து சிறிது தோலை எடுத்து அந்த இடத்தில் பொருத்தி விட முடியும்.
ஆனால், குதிகாலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை சரி செய்வது மிகவும் சிரமம். சில "போம்' மெத்தைகளில் காற்று, செல்வதற்கான சிறு சிறு ஓட்டைகள் நிறைய இருக்கும். இதன் காரணமாக மெத்தென்ற உணர்வு இருப்பதோடு, அதிக அழுத்தம் கொடுத்தாலும், "குஷன்' கிழிந்து விடாமல் இருக்கிறது.
இது போல் தான் நமது குதிகாலும். வயதானால் குதிகால் தோலும், அதற்கு சற்று கீழே உள்ள கொழுப்பு சத்தும் நைந்து போகலாம். அதனால் வலி தோன்றும். நடுத்தர வயதில் உள்ளவர்களுக்கும், நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை செய்பவர்களுக்கும் இத்தகைய வலி வரலாம்.
கால்கேனியம் எனப்படும் குதிகால் எலும்பில் "ப்ளாண்டர் அபோனோ ஸெராஸிஸ்' என்ற திசுக் கொத்து ஒன்று, கட்டை விரலை நோக்கி செல்கிறது. குதிகால் எலும்பும் இந்த திசுக்கொத்தும் சேருமிடத்தில் ஒருவித இனம் புரியாத பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால் முதலில் எழுந்து நிற்கும் போது வலி உண்டாகும். பிறகு நின்றாலும், நடந்தாலும் கடும் குதிக்கால் வலி மற்றும் எரிச்சல் ஏற்படும்.
ஒரு பெரிய மரம் உறுதியாக நிற்க அதன் ஆணிவேர் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நமக்கு இந்த குதிகால் எலும்பு. அதிக எடை உள்ளவர்களுக்கு தான் குதிகால் வலி வரும் என்று பலரும் நினைக்கின்றனர். அது உண்மையல்ல.
மிக மிக ஒல்லியாக இருக்கும் நபர்களுக்கும் குதிகால் வலி வரலாம். காலையில் எழுந்ததும் பாதங்களை கீழே வைக்கும் முன் கால் விரல்களை சிலமுறை நன்கு உள்மடக்கி பிறகு விரியுங்கள். இதனால் அந்த பகுதியில் புது ரத்தம் அதிகம் பாயும். திசுக்களுக்கு போதிய ரத்த ஓட்டம் இல்லையென்றாலும் சிலருக்கு குதிகால் வலி உண்டாகலாம். அவர்களுக்கு இந்த விரல் பயிற்சியே போதும். குதிகால் வலி கொண்டவர்கள் வெறுங்காலோடு நடக்க கூடாது. வீதியில் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளும் மிருதுவான "ஹவாய்' செருப்புகளை அணிந்தே நடக்க வேண்டும். பாதங்களை வெதுவெதுப்பான நீரில் வைத்தபடி விரல்களை நன்றாக அசைந்து கொண்டிருந்தாலும் வலி குறையும்.
குதிகாலில் அடிக்கடி வலி என்பவர்கள் தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்க வேண்டும். முடிந்தால் சைக்கிள் பயிற்சி செய்ய வேண்டும். முன்பாதத்தில் அழுத்தம் கொடுத்து "பெடல்' செய்வதால் மொத்த பாதத்துக்கும் நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். இதனால் வலி குறையும், உடல் எடையும் குறைவது போனஸ் பலன்.
நமது உடலின் எடையை தாங்குவது குதிகால்தான்.

பேரழிவா - வா பார்த்துட்டு வரலாம்!


சுற்றுலா என்பதே மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காக செல்வதுதான். ஆனால், அழிவு சுற்றுலாவாசிகள் என்ற வகையினர் உள்ளனர். இவர்கள் உலகில் எங்கெல்லாம் அழிவு நடக்கிறதோ அங்கு சுற்றுலா செல்வர்.
நிலநடுக்கம், வெள்ளம், புயல் என்று இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலாதான் அழிவு சுற்றுலா.
சமீபத்தில் சுனாமி தாக்கிய ஜப்பான், எரிமலை வெடித்த ஐஸ்லாந்து, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஹைதி, புயல் பாதித்த அமெரிக்காவின் புளோரிடா போன்றவற்றிற்கு ஆசை, ஆசையாய் செல்வர். அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். இதுபோன்ற சுற்றுலா ஏற்பாடு செய்வதற்கென்று டிராவல் ஏஜண்டுகளும் உள்ளனர். உலகின் எந்த மூலையில் இயற்கை பேரழிவுகள், ஏற்பட்டாலும் உடனே அங்கு சுற்றுலா செல்ல இந்த ஏஜண்டுகள் ஏற்பாடு செய்து விடுகின்றனர்.
பொதுவாக, பேரழிவுகள் ஏற்படும்போது அந்த நாடுகளுக்கு வழக்கமாக சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிடும். அந்த நாடு பெரும் பொருளாதார சரிவை சந்திக்கும். அதுபோன்ற காலங்களில் அந்த இடங்களுக்கு சுற்றுலா செல்வதன் மூலம் அந்த நாட்டின் வருமானத்திற்கும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்விற்கும் துணை புரிகிறோம் என்கின்றனர் இந்த அழிவுச்சுற்றுலா செல்பவர்கள்.
சூப்பர் பார்முலா.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!


இது "ராகிக் கீரை பக்கோடா' செய்முறை நேரம்.
தேவையான பொருட்கள்: கேப்பை மாவு-1 கப், அரிசி மாவு-1/4 கப், பொரி கடலை மாவு -1/4 கப், பொடியாக நறுக்கிய ஏதாவது ஒருவகை கீரை-1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம்-1/2 கப், பச்சை மிளகாய்-6 (பொடியாக நறுக்கவும்), சோம்பு-1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள்-1/2 தேக்கரண்டி, கறிவேப்பிலை-2 ஆழாக்கு, உப்பு-தேவையான அளவு, ரைஸ் பிரான் சமையல் எண்ணெய்-பொரிக்கத் தேவையானது.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கேப்பை மாவு, அரிசி மாவு, பொரிகடலை மாவு, பொடியாக நறுக்கிய கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, இஞ்சி (துருவியது) பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு கலக்கவும்.
ஒரு குழிக்கரண்டி எண்ணெயை நன்றாக காய வைத்து, மாவுக் கலவையில் விட்டுக் கலக்கவும். தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். சூடானதும் பிசைந்த மாவை எடுத்து சிறு சிறு எண்ணெயில் வேக விட்டு பொன் நிறமாக எடுக்கவும்.
ஓசை அடங்குவதுதான் பதம். இந்த ராகிக் கீரை பக்கோடா சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
கீரை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு இந்த மாதிரி பக்கோடாவில் போட்டு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர். இன்று கேப்பை மாவை நம்மில் பலர் பயன்படுத்துவது கிடையாது. கேப்பை மாவு உடல் நலனிற்கு நல்லது.
என்றென்றும் அன்புடன்,
அங்குராசு.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.