இது உங்கள் இடம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 டிச
2012
00:00

குடிகார கணவரா நீங்கள்?






என் அலுவலகத்திற்கு, தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. எங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் கடைநிலை பெண் ஊழியரின் கணவர், சாலை விபத்தில் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி, கேட்டு, எப்படி இத்துயர செய்தியை, அப்பெண்ணிடம் பக்குவமாக கூறுவது; அவர் எப்படி இதை தாங்கிக் கொள்வார் என, பலவாறு சிந்தித்து, சில ஆண் ஊழியர்கள் கலந்து பேசி, பின், அப்பெண்ணை அழைத்து, தகவல் கூறினோம். அப்பெண், அச்செய்தியை மிக லேசாக எடுத்துக் கொண்டதுடன், ஒரு சொட்டு கண்ணீர் மட்டும் விட்டு விட்டு, விடுப்பு கடிதம் எழுதி தந்து விட்டு, வீட்டிற்கு சென்று விட்டார்.
மறுதினம், சில அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள், இறந்தவரின் வீட்டிற்கு சென்றோம். அப்பெண்ணே, எங்களை எதிர்கொண்டார். தன் கணவர் மிகப் பெரிய குடிகாரர் என்றும், அனுதினம் பணம் கேட்டு துன்புறுத்துவார் என்றும், மேல்நிலைப் படிப்பு படிக்கும் பெண் குழந்தை முன், செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதுடன், தகாத வார்த்தைகளால், வேறு ஒரு ஆண்மகனோடு இணைத்து பேசி அடிப்பார் என்றும், அனுதினம் செத்து பிழைத்தோம். என் பிரார்த்தனையை இன்று இறைவன் கேட்டு, கண் திறந்து விட்டார் சார்... இனி, நான் என் மகளுடன் குறைந்த வருவாய் என்றாலும், நிம்மதியாக வாழ்வை எதிர்கொள்வேன் என, பெருமூச்சு விட்டு பொருமினார். ஆறுதல் கூற சென்ற ஆண்களாகிய நாங்கள் தான், அழுது வருந்தினோம்; இப்படி ஒரு ஆண்மகனா என்று!
இக்கடிதம், குடிகார கணவன், சந்தேகப் பேர்வழி கணவன்மார்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். நீங்கள் செத்து போனால் அழ, மனைவி, குழந்தைகள் வேண்டும். குடியைவிட்டுவிட்டு, வாழும் கொஞ்ச காலத்தில், மனைவி குழந்தைகளை சந்தோஷமாக வைத்து கொள்ளுங்கள். இல்லையேல், மேற்சொன்ன கதிதான் குடிகாரனாகிய உங்களுக்கும்.
— எம்.எஸ்.வி.அருண், புளியங்குடி.

மனித நேயம்...






எங்களுக்கு பக்கத்து தெருவில் குடியிருக்கும் நபர், தீபாவளிக்கு முன்தினம், துவைத்த துணிகளை தேய்ப்பதற்கு எடுத்துச் சென்றார். அங்கு துணிகளை தேய்த்துவிட்டு, தேய்த்த பெண்மணிக்கு தீபாவளி பரிசாக, 200 ரூபாய் வழங்கினார். அதோடு, முடி திருத்தகம் சென்றார். அங்கு கடந்த வாரம் தான் முடி வெட்டிக் கொண்டார். தீபாவளிக்காக மீண்டும் முடிவெட்டிவிட்டு, அவருக்கு கைலி, சட்டை ஆகியவைகளோடு, பணமும் கொடுத்து, தீபாவளி வாழ்த்துக் கூறினார்.
ஐம்பது வயதான இவர், அதிகம் சம்பாதிப்பவர் இல்லையென்றாலும், அனைவரும் தீபாவளி கொண்டாடி மகிழ வேண்டும் என்ற மனித நேயத்துடன் செயல்பட்டதை, வெகுவாக வியந்து பாராட்டினேன். அவரிடம் கேட்கும்போது, 'நாம் வேலை செய்யும் இடங்களில், நமக்கு தீபாவளி போனஸ் வழங்குகின்றனர். அது, போல இவர் பணி செய்வது நமக்காக. ஆதலால், நாம் தான், "போனஸ்' வழங்க வேண்டும்...' என்று கூறினார்.
இப்பழக்கத்தை அனைவரும் கடைபிடித்தால், மனித நேயம் வளரும்.
— கே.குமார், ராமநாதபுரம்.

கறிக்கடை கலப்படம்!






நான் சொல்லப்போகும் பிரச்னை, தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் இருக்கிறது. எங்க ஊரில், பத்துக்கும் மேற்பட்ட மட்டன் கடைகள் உள்ளன. கறி தீர்ந்து விட்டால், புதிய ஆட்டை ரோட்டில் போட்டு, துடிக்க துடிக்க அறுப்பர். அது நல்ல ஆடா, சீக்கு பிடித்த ஆடா என ஆராய்ந்து, சுகாதார ஆய்வாளரால், சீல் குத்தப்பட்டதல்ல. தவிர, கடைகளில் வட்டவடிவ கட்டையில், மாமிச சப்பைகள் இருக்கும். இரு ஆட்டின் தொடைப்பகுதிகள் கொக்கியில் தொங்கவிடப்பட்டிருக்கும். நாம் அரைக்கிலோ மட்டன் கேட்டால், 300 கிராம் வரை தொடை கறியிலிருந்து அரிந்து, தராசில் இடுவர். மீதி இருநூறு கிராமுக்கு, கட்டை மீதிருக்கும் மாட்டுக்கறி மாமிசத்தை எடுத்து, தராசில் இட்டு, ஐநூறு கிராமாக்குவர்.
ஆட்டு மாமிசம் ரோஜா நிறத்திலும், மாட்டுமாமிசம் அடர் குங்கும நிறத்திலும் இருக்கும். இந்த கலப்படத்தை, நம் கண் முன்னே மூணு சீட்டுக்காரர் போல் செய்வர். இதனாலேயே நான் மட்டன் வாங்குவதை நிறுத்தி விட்டேன். மீறி வாங்கினால், தொங்கும் ஆட்டு சப்பையை அப்படியே எடைபோட்டு வாங்கி விடுவேன் அல்லது தலை மற்றும் சுட்டு ரோமம் நீக்கிய ஆட்டுக்கால்கள் வாங்குவேன். என் சந்தேகம் நியாயமானதா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
— பெயர், ஊர் சொல்ல விரும்பாத வாசகர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramachandran n - madurai,இந்தியா
07-டிச-201212:48:49 IST Report Abuse
ramachandran n ஆனந்த கண்ணீர், போனஸ் நாம் கொடுக்காவிடிலும் கழுத்தில் கத்தியை வைத்து கேட்கப்படும்
Rate this:
Share this comment
Cancel
Vaal Payyan - Chennai,இந்தியா
07-டிச-201212:23:35 IST Report Abuse
Vaal Payyan சைவம் உண்பவர்கள் அருளாளர்கள் ... அசைவம் உண்பவர்கள் கொடுங்கோலர்கள் என்பது போல பேசாதீர்கள் உணவு பழக்கத்தால் வருவது ... ஆட்டை கொன்றால் பாவம் ... மலரை பிடுங்கினால் புண்ணியமா
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
04-டிச-201219:02:41 IST Report Abuse
சு கனகராஜ் எப்படி பட்ட ஈவு இறக்கம் இல்லாத கொடுங்கோலன் என்றாலும் இறப்பு என்று வந்தவுடன் அவனுடைய சிறப்பை பற்றி மட்டும் பேசி தீய செயல்களை பட்டியல் இட மாட்டார்கள் மேலும் தளி கட்டிய கணவனை எப்போது இறப்பர் என்று கடவுளிடம் வேண்டியதாக கூறுவதை கேட்கும் பொது பத்தினி பெண்கள் இப்படியுமா இருக்கிறார்கள் என்று மன வேதனை அடைய செய்கிறது கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் என்பதெல்லாம் அந்த காலத்தோடு பொய் விட்டது இப்போதெல்லாம் அடித்தல் அறுத்துக்கொண்டு வா உதித்தல் விவாகரத்து கேள் குடித்தால் கொலை செய் என்று சீரியல்கள் போதனை செய்கின்றன நல்லபடியா வாழ யாரும் அறிவுரைகள் சொல்வது இல்லை ஒருவனுக்கு ஒருத்தி என்பதும் மலை ஏறிவிட்டது விவாகரத்துகள் மலிந்து விட்டன கணவன் இறந்ததற்காக பதினறுநாள் துக்கம் அவது அனுசரிப்பர்கள அதுவும் இல்லையா கடவுளே இது அடுக்கும?
Rate this:
Share this comment
Skv - Bangalore,இந்தியா
08-டிச-201207:55:35 IST Report Abuse
Skv அடக்கடவுளே இப்படியுமா ஒருகுடிகாரனுக்கு சப்போர்ட் செய்விக, இதுபோன்ற குடிகாரனிடம் அடிஉதை வாங்கும் பெண்ணின் நிலைய யோசிச்சீங்களா? பல குடிசைவாழ் பெண்களின் அழுகை கண்ணீர் துயரம் தெரியுமா, இவுக பலவிடுகளில் பாத்திரம் தேச்சு துணிதொச்சு உழச்சுகொண்டுவரும் காசையும் டாஸ்மாக்லே கொண்டு (பிடுங்கி)கொட்டும் குடிகாரனுக்கு அவன் செய்யும் கொடுமைகளை அனுபவிக்கிரவளுக்கு தான் தெரியும் அப்போ இவளும் பத்தினிய இருக்க விருமப்றதே இல்லே இதுதான் 100% உண்மை . உங்க தலைவிக்கு கஜானா ரொம்பினா போரும் தோழியின் சாராய கம்பெனிக்கு லாபம் கிடச்சா போரும்...
Rate this:
Share this comment
Cancel
Babu Krishnan - atlanta,யூ.எஸ்.ஏ
03-டிச-201220:52:08 IST Report Abuse
Babu Krishnan What to eat and not to eat is my business , these veg group people should shut up and mind their own business. I dont like veg foods does that mean should i tell not to eat thayir sadam. All veges, seeds and leaves have life in them , so veg or non veg god d it to enjoy , so shut up and appreciate what god d and stop advicing others.
Rate this:
Share this comment
Cancel
Karthi - Kerala,இந்தியா
03-டிச-201215:06:33 IST Report Abuse
Karthi நம்மை போல் அதுவும் ஒரு ஆத்மா, அந்த ஆத்மாவை கொன்றவன், சமைத்தவன், பரிமாறுபவன், தின்பவன் என எல்லாரும் சமமாக அந்த பாவத்தின் பலனை அனுபவிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
கதிர் - கரூர் -> கான்பெரா,ஆஸ்திரேலியா
04-டிச-201208:05:49 IST Report Abuse
கதிர்அப்ப செடி கொடிகளுக்கு உயிர் இல்லையா? அதை மட்டும் எப்படி கொன்று சாப்பிடலாம்?...
Rate this:
Share this comment
Cancel
Rajagiri.Siva - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
03-டிச-201212:37:45 IST Report Abuse
Rajagiri.Siva குடிப்பதற்கு எதாவது ஒரு காரணத்தை சொல்வோர்...குடியைய் நிறுத்த இதுபோன்ற காரணங்களை சொல்லுங்களேன்...
Rate this:
Share this comment
Cancel
Samir - Trichy,இந்தியா
02-டிச-201223:03:20 IST Report Abuse
Samir அந்த பெண் ஒரு சொட்டு கண்ணீர் விட்டது கூட, அந்தாளுக்காகவா ? இல்லை, அவளுடைய, தலைவிதியை எண்ணிதான் கண்ணீர் விட்டிருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
02-டிச-201214:22:22 IST Report Abuse
ganapathy பெயர் சொல்ல விரும்பாத வாசகரே, இதற்க்கு மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் பிரச்சனையை வராதே. வள்ளுவன் மாமிசம் தின்பதை புண் உண்பதற்கு சமம் என்று சொல்லி இருக்கிறார். தமிழர் என்று சொல்லடா வள்ளுவன் சொன்னதை செய்யடா.
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
02-டிச-201207:31:53 IST Report Abuse
Skv ஐயா பல குடிகாரனுக பெஞ்சாதிக இதே ரகம் தான்.இந்த நரகத்துலே அடி உதை வாங்கி அவதிப்படும் பெண்களுக்கே தெரியும் கஷ்டம் ,டாஸ்மாக் தொறந்து கள்ள நிரப்பும் அரசுக்கா புரியும் குடிகாரன பெத்தவாளும் கண்ண்டுக்காம இருக்காக ,இதனால் பெரிய பணக்காரனும் சரி எழையும் சரி குடி என்னும் அரக்கன் கிட்ட மாட்டிண்டால் மானம் மரியாதை + உசிரும் போவும் , இவனுக செத்தால் அதுவும்குடிச்சே செத்தால் எவனும் அழா மாட்டன் நாட்டை வீட்டை பிடிச்ச சனி ஒஜிஞ்ச்சுதுன்னு ஹெப்பா இருப்பாக. /குடிச்சு செய்யும் கலாட்டா கொஞ்சமா தன்னிலை தடுமாறி செய்யும் அக்குரமம் எம்புட்டு , ஊருக்காக ஒப்பாரி வைக்கத இந்த பெண்ண வாழ்த்துறேன்
Rate this:
Share this comment
Cancel
srinivasan sulochana - nsw2147,ஆஸ்திரேலியா
02-டிச-201207:18:40 IST Report Abuse
srinivasan sulochana தன கையால் முடிந்ததை அயர்ன் செய்பவருக்கும் முடி திருத்துபவருக்கும் தந்து தீபாவளி கொண்டாட வைத்தவர் பாராட்டுதற்குரியவர். எல்லாருக்கும் நல்லமுன்னுத்தாரணம். .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.