அந்துமணி பா.கே.ப., | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
Advertisement
அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 டிச
2012
00:00

திப்பு சுல்தான் காலத்திலிருந்து, போர் என்றால் வெடி குண்டுகளை, எதிரி, எதிர் நாட்டின் மீது போட்டு அழிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. போர் என்றவுடனே வெடிகுண்டுகளும் நம் நினைவுக்கு வந்துவிடும். இந்த வெடிகுண்டுகளை முதன் முதலில் கண்டுபிடித்தது சீனர்கள் என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது; ஆனால், உண்மை வேறு.
வரலாற்றை பார்க்கும்போது, போரையே தொழிலாகக் கொண்டவர்களின் கவனத்தில், அவர்கள் காலக்கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு, ஏனோ அவர்கள் கவனத்திற்கு வராமல் போயிருந்தது தெரிய வருகிறது.
வெடிமருந்தை ஒரு குழாயினுள் கொட்டி, போரில் அதை யார், எப்படி, முதலில் பயன்படுத்தினர் என்பதெல்லாம் உறுதியாகத் தெரியவில்லை.
வெடி மருந்து செய்யும் முறையை முதன் முதலில் கூறியவர், ரோஜர் பேக்கன் (1216-1292) என்பவர். இவர், பிரான்சிஸ்சன் என்ற சபையைச் சேர்ந்த துறவி. எதையும் சோதித்து அறிவதன் முக்கியத்துவத்தை உணர்த்தியவர்.
ஒரு பொருள் எரிவதற்கு, காற்று (ஆக்சிஜன்) தேவை என்று கண்டு சொன்னவரும் இவர் தான். கண் பார்வையை சரி செய்ய, கண்ணாடியை முதன் முதலில் கண்டுபிடித்தவரும் ரோஜர் பேக்கனே! அவர், தன் காலத்து அறிவியல் துறை அனைத்தின் வினைப் பயன்களை எல்லாம், 1266ல், ஒரு நூலாக தொகுத்துள்ளார். அந்த நூலில் வெடிமருந்து செய்யும் முறையை எழுதியிருக்கிறார்.
அது —
ஏழு பங்கு வெடி உப்பும், ஐந்து பங்கு கரித்தூளும், அதற்கு சமமாக கந்தகமும் சேர்த்தால், அக்கலவையைக் கொண்டு, பெரிய மின்னலையும், இடி முழக்கத்தையும் உண்டாக்கலாம் என்று எழுதியுள்ளார்.
ஆனால், நான் இப்போது கூறியிருப்பது போல புட்டுப்புட்டு எழுதவில்லை. கொடியவர் எவரும் இக்கண்டுபிடிப்பை தவறாக பயன் படுத்தி விடுவரோ என அஞ்சி, எழுத்துக்களை மாற்றி மாற்றி அமைத்து, புதிர் போல எழுதி வைத்து விட்டார். அது, பல காலம் அறியப்படாமலே இருந்தது.
போர் என்றதும் காந்திஜி, தம் சுயசரிதையில் கூறியதும் நினைவுக்கு வருகிறது. அதில், "நாம் என்ன செய்த போதிலும், பிறருடைய இம்சையிலும் நமக்கு பயன் உண்டு; அதிலிருந்து தப்புவது கஷ்டம்.
உயிர்கள் எல்லாம் ஒன்றே அல்லவா? ஒருவனுடைய பிழை அனைவரையும் சார்கிறது. சமூகத்தில் நடைபெறும் குற்றங்கள் எல்லாம் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் பொறுத்தது; இல்லாவிட்டால், ஒருவன் சமூகத்தில் அடங்கியவன் ஆக மாட்டான்.
இரண்டு மனித ஜாதிகளுள் சண்டை ஆரம்பித்தால், அஹிம்சாவாதியுடைய கடமை, யுத்தத்தை நிறுத்த வேண்டியது. ஆனால், அப்படி, செய்ய சக்தி இல்லாதவன், யுத்தத்தை எதிர்த்து நிற்கும் வலிமையில்லாதவன். தன்னுடைய அரசாங்கம், யுத்தத்தில் புகுவதை எதிர்ப்பதற்கு வேண்டிய தகுதியைப் பெறாதவன்.
ஆயினும், அதிலிருந்து தானும், தன் மக்களும், உலகமும் தப்புவதற்கு வேண்டிய காரியங்களை இடைவிடாமல் செய்து கொண்டே போக வேண்டும்...
— இப்படிச் சொல்லியிருக்கிறார் காந்திஜி.
இந்த கால கட்டத்தில், காந்திஜி சொல்லியதுபோல் நடந்து கொள்ள முடியுமா?
***

அலுவலகத்தில் அமர்ந்திருந்த போது, தம் நாலு முழ வேஷ்டியின் ஒரு முனையை கையில் பிடித்தபடி மாடி ஏறி வந்தார் குப்பண்ணா. வந்து அமர்ந்தவரிடம், "சைவமான மேட்டர் எதுனா, எழுதறதுக்கு சொல்லுங்களேன்...' என்றேன். கொஞ்ச நேரம் மோட்டுவளையைப் பார்த்தவர், "சரி... ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கராச்சாரிய சுவாமிகள் கூறியதைச் சொல்கிறேன்...' என ஆரம்பித்தார்:
ஒவ்வொரு குடும்பத்திலும், சமைப்பதற்காகப் பானையில் அரிசி போடும் போது, ஒரு பிடியை ஏழைகளுக்கு என்று ஒரு கலயத்தில் போட்டு விட வேண்டும் என்றனர்... எதற்காகத் தெரியுமா?
பல குடும்பங்களில் இப்படி தினமும் போட்டு வைப்பதை பேட்டைக்குப் பேட்டை சேகரித்து, உணவாக்கி, ஆங்காங்குள்ள @காவிலில் நிவேதனம் செய்து, ஏழைகளுக்கு அளிக்கவே...
"ஒரு பிடி அரிசியோடு, ஒரு பைசாவும் தினந்தோறும் போட வேண்டும் என்றார். சேகரித்த அரிசியை சமைப்பதற்கான விறகுக்கும், சாதத்தில் சேர்த்துக் கொள்ள மிளகுப் பொடியோ அல்லது வேறு ஏதாகிலும் வியஞ்சனமோ தயாரிப்பதற்கும், சமையல் பாத்திர வாடகைக்கும் - இப்படிப்பட்ட மேல் செலவுக்காகத் தான் அந்த ஒரு பைசா என்றார்.
இந்தத் திட்டத்தை நடத்திக் காட்டுவது பெரிய பரோபகாரம். பசித்து வந்த ஏழைகளுக்கு, ஈசுவரன் கோவிலில் இப்படிப் பிரசாதம் கிடைக்கிறது என்றால் வயிறும், மனசும் குளிரும். இதனால், கோவிலுக்கு வருகிற வழக்கம் ஏற்பட்டு, பக்தியும் வளரும் என்றார்.
வெறுமே, "சாப்பாடு' என்றில்லாமல், ஈசுவரனுக்கு நிவேதனமான, "பிரசாதமாக' இருப்பதால் அந்த அன்னம், சித்த சுத்தி அளிக்கும் என்றும் சொன்னார்.
அன்னதானம் பரோபகாரத்தில் ஒரு அம்சமே. பரோபகாரம் சமூக சேவை, சோஷியல் சர்வீஸ் என்று இந்த நாட்களில் ஆர்ப்பாட்டமாகப் பிரகடனம் செய்வதை, முற்காலத்தில் எந்த பகட்டுமில்லாமல் சுபாவமாகவே மக்கள் செய்து வந்தனர். இதற்கு, "பூர்த்த தர்மம்' என்று பெயர் என்கிறார்.
ஜனங்களுக்காக கிணறு, குளம் வெட்டுவது, அவர்களின் ஆத்ம ஷேமத்துக்காகக் கோவில் கட்டுவது, அன்னதானம், நந்தவனம் அமைப்பது எல்லாம், "பூர்த்தம்!' தாகமெடுத்த பசுக்களும், மற்ற விலங்குகளும் நீர் அருந்துவதற்காக, கிராமத்துக்கு வெளியே மேய்ச்சல் பூமியில் ஒரு குளம் வெட்டினால் எவ்வளவோ புண்ணியம் என்கிறார்.
"ஒரு கிராமத்தில் அல்லது பேட்டையில் இருக்கிற சகலரும், பணக்காரர், ஏழை என்ற வித்தியாசமின்றி ஒன்று சேர்ந்து மண்வெட்டியைக் கையில் எடுத்து, இப்படிப்பட்ட சரீரப் பிரயாசையுள்ள பரோபகார சேவைகளில் ஈடுபட வேண்டும் என்கிறார்.
"இதனால், சமூக ஒற்றுமை அதிகமாகும். உழைக்க, உழைக்க சித்த சுத்தியும் வரும். எல்லாருடனும் சேர்ந்து மண்ணை வெட்டும் போது, அகங்காரத்தையும் வெட்டி எடுத்ததாகும். குளத்தில் தண்ணீர் ஊறுவதை விட, நம் இதயத்தில் ஊறுகிற அன்பே முக்கியம் என்கிறார் பெரியவர்... எனக் கூறி முடித்தார்!
***

இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டனர்...
"ஏன், என்னவோ போல இருக்கிறாய்?'
"நான் விரைவில் தந்தையாகப் போகிறேன்...'
"அதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?'
"இன்னும் என் மனைவிக்குத் தெரியாது...'
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது!
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan sulochana - nsw2147,ஆஸ்திரேலியா
08-டிச-201210:19:22 IST Report Abuse
srinivasan sulochana கர்ணன் ஒருமுறை தன் இடது கையால் தன் தர்மத்தை செய்தபோது ஏன் இடது கையால் தருகிறீர்கள் என்று ஒருவர் கேட்கிறார் அஹற்கு கர்ணன் நான் வலது கைக்கு மாற்றுவதற்குள் என் மனம் மாறிவிட்டால் ? என்றுதான் பதில் சொல்லுகிறார் .எப்பட்டிப்பட்ட மகான்கள்
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Georgia G - augusta,யூ.எஸ்.ஏ
09-டிச-201200:50:06 IST Report Abuse
Georgia Gமிகவும் சரி. ஒரு 5 நிமிடம் கொடுத்தாலே, என் மனம் கேள்வி கேட்டு, பிறகு கொடுக்க மாட்டேன். superaa நமக்கு ஒரு கேமரா டிவி வாங்கலாம், இல்லை restaurant போகலாமே..என்று தோன்றும். மனம் மாறாமல் இருக்க இறைவனிடம் வேண்டி, டக்கென்று கொடுத்து விடுவேன்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
how - singapore,சிங்கப்பூர்
04-டிச-201211:13:16 IST Report Abuse
how மகாபாரத போர் நடத்த குருஷேத்திர இடத்தில வெடிகுண்டு பயன்படுத்த வில்லையா?
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
03-டிச-201213:26:08 IST Report Abuse
pattikkaattaan நான் சிறுவனாக இருக்கும்போது கிராமத்தில் உள்ள குளங்களில் கால்நடைகள் தண்ணீர் குடிப்பதை பார்த்திருக்கிறேன் ... சில மாடுகள் நீரினுள் இறங்கி நீந்தி செல்லும் ... குளக்கரையில் மாணவர்கள் நின்று எங்கள் சாப்பாட்டு பாத்திரங்களை கழுவிவிட்டு , கற்களை நீரின்மீது எரிந்து விளையாடுவோம் ... ஆனால் அந்த குளங்களை எப்போது , யார் வெட்டினார்கள் என்று தெரியாது ... குளங்களை அமைப்பது எவ்வளவு நல்ல காரியம் என்று பெரியவர் சொல்லி தெரிகிறது ... இன்றைய நிலையில் ஒருவரும் குளங்களை வெட்ட நினைப்பதில்லை ... குளங்களை எப்படி ஆக்கிரமிப்பு செய்து, ஆட்டயப்போடலாம் என்றுதான் அலைகிறார்கள் ... கழிவுநீரை குளத்தில் விட்டு மாசுபடுத்துகிறார்கள் ...நம் காலத்தில் நாம் நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை, நம் முன்னோர்கள் விட்டு சென்ற செல்வங்களை பாதுகாத்து நம் அடுத்த தலைமுறைக்கு கொடுங்கள் .. அதை செய்தாலே நாம் புண்ணியம் செய்த மாதிரிதான் ...
Rate this:
1 members
2 members
42 members
Share this comment
Cancel
Georgia G - augusta,யூ.எஸ்.ஏ
02-டிச-201209:32:51 IST Report Abuse
Georgia G காஞ்சி பெரியவர் சொல்வது மிகவும் உண்மை. கோயிலுக்கு ஒரு tube light வாங்கி கொடுத்துவிட்டு அந்த வெளிச்சம் தெரியாமல் உபயம்: என் பெயர் . என்று போட்டு கொள்வதை விட, தான் உண்ணும் உணவில் ஒரு கை கொடுத்தாலே எல்லோருக்கும் உணவு கிடைத்து விடும். இங்கே அமெரிக்காவில் என் வீட்டுக்கு நிறைய சின்ன குழந்தைகள் வந்து சில நாள் முன்பே என்ன வேண்டும் என்று சொல்லிவிட்டு செல்வார்கள். பிறகு நான் சேர்த்துவைக்கும் உணவை &39 சோப்பு, detergent பவுடர் வாங்க வருவார்கள். அதை கொண்டு சென்று தேவையான மக்களுக்கு கொடுப்பார்கள். சிறு வயது முதலே கொடுக்கும் குணம் அந்த குழந்தைகள் வளர்த்து கொள்கிறது. என்னை யார் என்றே தெரியாமல், உரிமையோடு வந்து உணவை கேட்பது மிக சந்தோசமாக இருக்கும். இந்தியாவில் எது சொன்னாலும் ஏளனம் செய்கிறார்கள். அங்கே தோனி தெரியும், கேடு கெட்ட சினிமா நட்சத்திரத்துக்கு பால் அபிஷேகம் செய்வார்கள். பக்கத்தில் இருக்கும் ஏழை கண்ணுக்கு தெரியாது. இங்கே பில் கேட்ஸ் அவ்வளவு தானம் செய்வார். அங்கே அம்பானி வீட்டை பாருங்கள். குஜராத்திகள் ஒரு முகம் வெளியில் காட்டி, வேறு முகம் உள்ளே. குருக்கள் மட்டும் தான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வதை பார்த்து இருக்கிறேன். உங்களிடம் இல்லாத பொது ஏன் கொடுகிறீர்கள்? என்று கேட்பேன். என்ன செய்வது இந்த குலத்தில் வந்து பிறந்து விட்டோம் என்பார்கள். அவர்கள் வீட்டு வாடகை நான் அனுப்புவேன். ஆனால் யார் வந்து கேட்டாலும் சாப்பாடு போடுவார்கள். கண் கலங்கும். ஜாதிகள் என்று ஒன்று இல்லாவிட்டாலும், குலம் உண்டோ என்று தோன்றும்.
Rate this:
4 members
2 members
102 members
Share this comment
mangai - Chennai,இந்தியா
03-டிச-201221:52:20 IST Report Abuse
mangai@Georgia G - augusta,யூ.எஸ்.ஏ, நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை... எனக்கு தெரிந்த ஒருவர் கோவிலுக்கு ஒரு fan வங்கி கொடுத்தார்... எப்படி என்றால் அந்த fan கருவறைக்கு வெளி வாசலில் இருக்கும். அதை போட்டால் வாசலில் நிற்கும் மக்களுக்கு சாமிக்கு காட்டிய தீபத்தை கொண்டுவந்து காட்ட முடியாது( fan காற்றில் தீபம் அணைந்து விடும் ) அதனால் அதை உபயோக படுத்தவே மாட்டார்கள்.. இது தெரிந்தே தான் அவர் fan வங்கி அதில் அவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரையும் எழுதி மாட்டியுள்ளார்.. அதை எங்களிடம் பெருமையாக வேறு சொல்லிக்கொண்டார் " எல்லாரும் வேர்க்கிறதே இந்த fan ஐ போட்டால் என்ன என்று மேலே பார்ப்பார்கள் அப்பொழுது அனைவரும் எங்கள் பெயரை படிப்பார்கள் " என்று.. அவர் இப்படி சொன்னதும காரி துப்பலாம் போல இருந்தது.. என்ன செய்வது மனதுக்குள் திட்டிவிட்டு வந்து விட்டோம்.....
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.