அந்துமணி பதில்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 டிச
2012
00:00

** வி.முகேஷ்குமார், திருவில்லிபுத்தூர் : நம்மவர்கள், இன்று மகிழ்ச்சியை இழந்து, துன்பத்துடன் அல்லல்படுவது ஏன்?
போலி கவுரவம் - ஆடம்பர வாழ்க்கை. இந்த இரண்டால் மகிழ்ச்சியைத் தொலைத்து, தலை குனிந்து நிற்கின்றனர். எளிய பழக்கங்கள், கடன் வாங்காத குணமும் மட்டுமே, மகிழ்ச்சியைக் கொண்டு வரும்!
***

** ஜி.ராஜசேகர், மதுரை: ஒரு பெண்ணின் தன்னம்பிக்கை, தைரியம், சுய சிந்தனை, சிரிப்பு ஆகியவை, அவள் திருமணத்திற்கு பின் மறைந்து விடுகின்றனவே... ஏன்?
தன் கணவருக்காக அனைத்தையும் தியாகம் செய்து கொள்வதாக எண்ணினாலும், உண்மையில் கணவன் - கணவன் வீட்டாரின் அடக்கு முறைகளில், தன் குணங்களை எல்லாம் துறக்கிறாள். பெண்கள் செய்யும் தியாகங்களில் இதுவும் ஒன்று.
***

** சே.அலமேலு அம்மாள், சிவகங்கை: உலகிலேயே பெரும் பணக்காரர் என யாரை கூறுவீர்கள்?
"இருப்பதே போதும்... இனி வேண்டாம்' என நினைப்பவர் எவரோ, அவரே உலகில் பெரும் செல்வந்தர்... உங்களுக்குத் தெரிந்து அப்படி யாரும் இருக்கின்றனரா?
***

*எஸ்.குருசாமி, கடலூர்: துன்பம் வந்தால் ஆறுதல் தேடுவது எப்படி?
"ஏதோ... இதோடு போயிற்றே...' என்று, ஆறுதல் அடைய வேண்டியது தான்.
***

*ஏ.பாலமுருகன், பரமக்குடி: ஒருவன் முட்டாள் என்பதை எப்படி அறிவது?
சுற்றி இருப்பவர் பேசுவதற்கு முன்பே, எல்லாம் தெரிந்தது போல, முணுக்கென்று முந்தி முந்தி பேசுவான். இப்படி பேசுபவன் யாராக இருந்தாலும், அவன் முட்டாள் என்று கண்டு கொள்ளலாம்.
***

*ஆ.சுரேஷ்பாபு, பண்ருட்டி: பெண்கள், எளிதில் ஏமாந்து விடுகின்றனரே!
வேஷங்களை, கபட நாடகங்களை, முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியாத இளகிய சுபாவம் கொண்டிருப்பதால், தொடர்ந்து வாழ்வின் ஒவ்வொரு இடத்திலும், படித்திருந்தும் ஏமாற்றப்படுகின்றனர். எப்போது தெளிவரோ... தெரியவில்லை!
***

*எஸ்.சண்முகசுந்தரம், கோவை: சக்தி வாய்ந்த, "டானிக்' ஏதாவது உள்ளதா? எங்கே கிடைக்கும்?
மிகவும் சக்தி வாய்ந்த டானிக் நம்பிக்கை... அது, அவரவர் மனநிலையிலேயே இருக்கிறது. ஒரு நாளும் இந்த டானிக்கை தொலைத்து விடக் கூடாது!
***

*வி.காசிநாதன், சென்னை: கல்வித்துறை பற்றிய சர்வே ஏதேனும் உண்டா?
சொல்கிறேன்... இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், படிப்பை பாதியிலேயே நிறுத்தும் குழந்தைகள், 52.79 சதவீதமாம்! அதாவது, பள்ளியில் முதல் வகுப்பில் சேரும், நூறு குழந்தைகளில், 47 மட்டும் எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்கின்றதாம்... என்று, நூறு சதவீதம் வரப் போகிறதோ!
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Skv - Bangalore,இந்தியா
02-டிச-201207:42:18 IST Report Abuse
Skv பெண்கள் ஏமாறுவதற்கு முக்கிய காரணம் பிறந்த வீடு நரகம் இருக்கும் பொது போனால் போரும்னு ஏமாந்து செல்கிறார்கள் , வறுமை, பொறுப்பின்மை அடங்காப்பிடாரி தனம் இதெல்லாமே ஒரு மாணவனின் அறிவை மழுங்க வைக்குது மனவலிமை தான் சிறந்த டானிக், ஒரு கேன்சர் நோயாளிகுஉட ,ம்ம் நான் நல்ல இருக்கேன் எனக்கு ஒன்றுமே நோயில்லே , எனக்கு எது வந்தாலும் என்னை காக்க இறைவன் என்ற சக்தி இருக்கார், நான் பூரண உடல் நலமுடன் இருக்கேன் என்று எண்ணினால் 100 % சௌக்கியமா இருப்போம் ,இது சத்தியமான வாக்கு சொன்னவர் ஸ்ரீ அன்னை (பாண்டிச்சேரி) அவர்கள் , இன்றும் நான் இதே தான் தாரக மந்திரமா சொல்லிண்டுருக்கேன்
Rate this:
Share this comment
Cancel
Natarajan Iyer - chennai,இந்தியா
02-டிச-201206:03:59 IST Report Abuse
Natarajan Iyer நான்தான் உலகிலேயே பெரும் பணக்காரன்.(போதும் என்ற மனம் இருப்பதால்)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.