திண்ணை!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 டிச
2012
00:00

இன்றைய பத்திரிகைகளில் வார இதழ்கள் மட்டுமல்லாது, நாளிதழ்கள் கூட, ஷாம்பூ இலவசம், ஹேர் ஆயில் சாஷே இலவசம், ஊதுவத்தி, டூத் பேஸ்ட் இலவசம் என்றெல்லாம் கொடுத்து, மக்களை பத்திரிகை வாங்கும்படி செய்ய, பகீரதப் பிரயத்தனம் பண்ணுகின்றன. இது, ஏதோ இன்றைக்கு வந்த புதிய பழக்கம் என்று நினைத்து விடாதீர்கள். பரலி சு. நெல்லையப்பன் நடத்திய, "லோகோபகாரி' பத்திரிகையில் (சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்) வெளிவந்த கட்டுரையொன்றை, சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அது, இதோ:
பழைய நாட்களில், தமிழ் பத்திரிகைகள் நடத்தப்பட்டு வந்த விதங்களை இப்போது நினைத்தால், மிக்க வினோதமாக இருக்கும். வாரப் பத்திரிகையிலே, "லோகோபகாரி' பத்திரிகைக்கு, வருடச் சந்தாவை முன்பணமாகச் செலுத்துவோருக்கு, ஒரு இனாம் கொடுக்கப்படும் என, அதன் ஆசிரியர் நடராஜய்யர் ஏற்பாடு செய்தார்.
அவ்விதமே, அவர் நடத்திய பத்து வருடங்களில், ஒன்பது புத்தகங்கள் வரை கொடுத்திருக்கிறார். இனாமுக்காகவே, பத்திரிகையை வாங்கத் தலைப்பட்டனர் பலர்.
சென்னை, "பிரபஞ்ச மித்திரன்' ஆசிரியர், இவ்வித இனா@மாடு நிற்காமல், நான்கு அணா பெறக்கூடிய காலண்டரும் சேர்த்தனுப்பினார். சென்னை, "திராவிட தீபம்' ஆசிரியர், இதுவும் போதாது என்று புறப்பட்டார். அவர் பத்திரிகையின் சந்தா, 3 ரூபாய் செலுத்துவோருக்கு, அவரவர் பெயர் அமைந்த ரப்பர் ஸ்டாம்ப் இனாம் என்றும், அது வேண்டாவிடில், ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் சரித்திரப் புத்தகம் இனாம் என்றும் வெளியிட்டார்.
அந்த சரித்திரப் புத்தகத்தின் குறைந்த விலையே, இரண்டு ரூபாய். அதை இனாமாகக் கொடுத்தும், பத்திரிகைகளில் சாஸ்திரப் படங்களுடன் அறிவியல், சரித்திரம், நாடகம், பாச் சுவை பரவிய, பத ஜோடனைகளுடன் கூடிய சிருங்காரப் பேச்சுக்கள் இவ்வளவையும், வாரிக் கொடுத்து வீசினார். இனாம் வேண்டாதவர்கள், 2- 4 - 0 என செலுத்தலாம் என்றார்.
ஒரு காலத்தில், "சென்னை நேசன்' பத்திராதிபர், தன் வாரப் பத்திரிகைக்கு உரிய சந்தா, 3 ரூபாய் செலுத்துவோருக்கு, 2 ரூபாய் விலையுள்ள,"டைம்பீஸ்' இனாமாகக் கொடுப்பதாக வெளியிட்டார். உடனே, பலர் சந்தாதாரர் ஆயினர்.
அந்தச் சமயம், புத்தகமே இனாம் கொடுத்து வந்த, "லோகோபகாரி' பத்திரிகையாசியருக்கு, "ஐயா... தாங்களும் டைம்பீஸ் இனாமாகக் கொடுப்பதாய் இருந்தால், பத்திரிகை வாங்குகிறோம். புத்தக இனாம் தேவையில்லை' என்று, சில கடிதங்கள் வந்தன. அதற்கு அவர், தம் பத்திரிகையில், "பத்திரிகை ஆசிரியர்கள், புத்தகங்களை தயாரிக்க சக்தி வாய்ந்தவர்களே அன்றி; கடிகாரங்கள் தர சக்தியுடையவர்கள் அல்ல...' என்று வரைந்தார்.
இவ்விதமாக, இனாம் கொடுத்த பத்திரிகைகள் அதிகமில்லை. "பிரபஞ்ச தாரகை, லோக பந்து, திராவிடாபிமானி' இன்னும் இரண்டொரு பத்திரிகைகள் மட்டுமே.
"திராவிடாபிமானி' முதல் வருடம் மட்டும் இனாம் கொடுத்து, பின், நிறுத்திவிட்டது. இனாம் தராமலேயே, "மஹா விகட தூதன்' 2,500 சந்தாக்களுடன் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்தது. "தென்னிந்திய வர்த்தமானி' மற்றும் "ஜனப்ரியன்' முதலிய வாரப் பத்திரிகைகள், இனாம் தரவில்லை. அதற்குப் பின் தோன்றிய பத்திரிகைகள், இந்த இனாம் வழக்கத்தை நிறுத்தி விட்டன.
— "பிரஜானுகூலன்' பத்திராதிபர், ராமானுஜுலு நாயுடு, 1925 டிசம்பர் மாத,"லோகோபகாரி'யில் எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி.
***

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.