இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வாழ்க்கை, இந்தியில் படமாகிறது. பாவ்னா தல்வர் இயக்கும் அப்படத்தில், அபிஷேக்பச்சன், ராஜீவ் காந்தியாக நடிக்கிறார். ராஜீவ் காந்தியின் இளமை காலம், அரசியல் பிரவேசம், குண்டு வெடிப்பில் அவர் இறந்தது வரையிலான முக்கிய சம்பவங்கள், அப்படத்தில் இடம்பெற இருக்கிறது. — சினிமா பொன்னையா
பிரபல இயக்குனர்களை நாடும் அதர்வா!
பாலாவின், பரதேசி படத்தில் நடிப்பதற்கு முன் வரை, புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடித்து வந்த அதர்வாவும், இப்போது மாறிவிட்டார். அடுத்தடுத்து, "முன்னணி இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன்...' என்று கூறும் அவர், சில டைரக்டர்களை சந்தித்து, தனக்காக கதை தயார் செய்யும்படி கேட்டுக்கொண்டு வருகிறார். ஆனால், இயக்குனர்களோ, "பரதேசியில் உங்களது பர்பாமென்சைப் பார்த்துவிட்டு, எந்த மாதிரி கதை ரெடி செய்யலாம் என்பதை முடிவு செய்வோம்...' என்று, பரதேசி படத்தின் வரவுக்காக காத்திருக்கின்றனர். — சி.பொ.,
காஜல் பின்னால் ஒரு கூட்டம்!
காஜல் அகர்வால், ஒரு படப்பிடிப்பு தளத்துக்குள் என்ட்ரி ஆனாலே, அவர் பின்னால் ஒரு கூட்டமே திரண்டு வருகிறது. இவர்களெல்லாம் யார் என்று விசாரித்தால், அத்தனை பேரும், அவரது உதவியாளர்கள் என்கின்றனர். பல மொழிகளிலும், பரவலாக நடிப்பதால், ஓடியாடி வேலை செய்ய குறைந்தது எட்டு பேராவது காஜலுக்கு தேவைப்படுவதாக கூறி, கூடவே அழைத்து வந்து விடுகிறார். அறுக்க மாட்டாதவன் இடையில் அம்பத்தெட்டு கறுக்கரிவாள்! — எலீசா
அனுஷ்கா புதிய பிசினஸ்!
நமீதாவைத் தொடர்ந்து அனுஷ்காவும், தான் சினிமாவில் சம்பாதித்ததை, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார். அப்படி அவர் முதலீடு செய்த, 25 கோடி ரூபாய் மதிப்பு சொத்துகளை, பூமிகாவின் கணவரான பரத் தாகூர் தான் நிர்வாகம் செய்து வருகிறார். தற்போது, விசாகப்பட்டினம், ஐதராபாத்தில் அனுஷ்காவின் ரியல் எஸ்டேட் பிசினஸ் அமோகமாக நடந்து வருகிறது. வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா! — எலீசா
நமீதா வெறுப்பேத்தும் கேள்வி?
"எதிர்காலத்தில், அரசியலில் குதித்து, மக்கள் சேவையில் ஈடுபடுவேன்...' என்று, முன்பு ஒருமுறை கூறினார் நமீதா. அதிலிருந்து, அவர் எங்கு சென்றாலும், "எந்த கட்சியில் சேரப் போகிறீர்கள்?' என்று கேள்வி கேட்டு, நமீதாவை வெறுப்பேற்றி வந்தனர். இந்நிலையில், சமீபத்தில், அவர், பா.ஜ.க.,வில் சேர இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதற்கான பேச்சு வார்த்தையிலும் அவர் ஈடுபட்டுள்ளார். வார்த்தை இருந்துபோம்; வழி தூர்ந்து போம்! — எலீசா
ஒலிம்பிக்கை மையப்படுத்தி, ஐ!
ஐ படத்தில், ஒலிம்பிக்கை மையமாக வைத்து, கதை தயார் செய்துள்ளார் இயக்குனர் ஷங்கர். பலசாலியை விரும்புகிற ஒரு பெண்ணுக்காக, கடுமையான உடற்பயிற்சி செய்து, உடம்பை கட்டுமஸ்தாக கதாநாயகன் விக்ரம் மாற்றுவதும், அதுவே, விக்ரமை ஒலிம்பிக் வரை கொண்டு போய் விடுவது தான் கதை. — சி.பொ.,
சுசீந்தரன் இயக்கும் காதல் படம்!
"ஆதலால் காதல் செய்வீர் படம், கல்லூரி வாழ்க்கையில் நட்பில் ஏற்படும் காதலை மையமாகக் கொண்ட படம்...' என்கிறார் டைரக்டர் சுசீந்திரன். "ஜாலி, கேலி, காதல் என, கல்லூரி வாழ்க்கையை சந்தோஷமாக சொல்லியிருந்த போதும், காதல் ஒரு சுகமான பயணமாக இருந்தாலும், அந்த பயணத்தில் சுமக்கும் சுமைகளாக கண்ணீரும், வலியும் இருக்கும் என்பதை, புதிய பரிமாணத்தில் சொல்லியிருக்கிறேன்...' என்கிறார். — சி.பொ.,
சுக்விந்தர்சிங்கை தவிர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!
உயிரே படத்தில் இடம் பெற்ற, "தக தைய்யா தைய்யா' பாடலை பாடியவர் சுக்விந்தர்சிங். அதையடுத்து, ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் தொடர்ந்து பாடி வந்தவர், கடைசியாக, ஸ்லம்டாக் மில்லினியர் படத்தில், "ஜெய்ஹோ' என்ற பாடலையும் பாடினார். ரஹ்மானுக்கும், சுக்விந்தர் சிங்குக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, தற்போது, தன் இசையில் அவரை பாட வைப்பதை தவிர்த்து வருகிறார் ரஹ்மான். — சினிமா பொன்னையா
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.