காதலே... நீ வாழ்க!
* கண்ணிலே புகுந்து
கருத்திலே கலந்து
கள்ளத்தனங்கள்
பல செய்வாய்!
* மண்ணிலே பிறந்த
முதல் மனிதனோடு
காதலே நீயும்
உடன் பிறந்தாய்!
* எண்ணிலா மொழிகள்
பிறந்திடும் முன்னே
மொழிகளுள் நீயே
முதலா# பிறந்தாய்!
* பெண்ணின் விழியில்
போதையாய் கலந்து
மண்ணிலே சொர்க்கத்தை
நீ சமைத்தாய்!
* ஒவ்வொரு படைப்பின்
உள்ளுக்குள்ளும்
ஒலித்திடும்
உயிரின் ராகமே!
* எவ்விதம் அரும்பி,
எவ்விதம் மலர்வாய்...
எண்ணிட
காலம் போகுமே!
* செதுக்கும் சிற்பிகள்
செத்துப் போனாலும்
சிலைகள்
உலகினில் வாழுமே - உனை
* ஒதுக்கும் மனிதர்கள்
உன்னை வெறுத்தாலும்
உலகுள்ளவரை
உன் புகழ் வாழுமே!
— கு.மா.பா.கபிலன், சென்னை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.