சாப்பிடும்போது பல்செட் கழன்று விழுகிறது...!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 டிச
2012
00:00

எனக்கு பற்கள் கிடையாது. 10 ஆண்டாக கழற்றி மாட்டும் பல்செட் அணிந்துள்ளேன். இது, பேசும் போது, சாப்பிடும் போது கழன்று விடுகிறது. இதை சரி செய்ய முடியுமா? - அருண், கோவில்பட்டி
கழற்றி மாட்டும் பல்செட்கள், எப்போதும் அசவுகரியத்தையும், பாதுகாப்பற்ற தன்மையையும் கொடுக்கும். நாளடைவில், தாடை எலும்புகள் தேய்ந்து, பல்செட் அணிய முடியாமல் போகக் கூடும். இதற்கு, "ஓவர் டெஞ்ச்சர்' சிகிச்சை முறையே, சரியான தீர்வு. தாடை எலும்பில், நான்கு, "இம்பிளான்ட்'கள் வரை பொருத்த வேண்டும். பின், பல்செட்டை சிறிது மாற்றியமைத்தால், அவை, வாயினுள் உள்ள, "இம்பிளான்ட்' களுடன், கெட்டியாக பொருந்திக் கொள்ளும். பேசும்போதோ, சாப்பிடும்போதோ, கழலாது. இந்த, "இம்பிளான்ட்'கள், தாடை எலும்புகள் தேயாமல் கட்டுப்படுத்தும். இன்றைய நவீன சிகிச்சை முறைகளால், அனைத்து வயதினருக்கும், ஒரு சில நாட்களிலேயே, இவ்வகை, "ஓவர் டெஞ்ச்சர்'களை செய்ய முடியும்.

எனக்கு அடிக்கடி வாய் உலர்ந்து போகிறது. நாக்கு ஒட்டிக் கொள்வது போல உள்ளது. வாயில் எரிச்சலும் உள்ளது. இதை எப்படி சரிசெய்வது? - வந்தனா, திருநெல்வேலி
இதற்கு, "சீரோஸ்டோமியா' என்று பெயர். உமிழ்நீர் சுரப்பது குறையும் போது, இதன் அறிகுறிகள் தென்படும்."சீரோஸ்டோமியா' வருவதற்கு, உணவுப் பழக்கம், உடலில் இரும்பு சத்து குறைவு, சில மாத்திரைகள், புகை பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம், சர்க்கரை நோய் என, பல காரணங்கள் உள்ளன. இதற்குரிய சிகிச்சை எடுக்கா விட்டால், உணவு உண்பதற்கும், விழுங்குவதற்கும் கடினமாகி விடும். நம் உமிழ்நீர், இயற்கையாகவே வாயில் உள்ள கிருமிகளை, சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. அது குறையும்போது, சொத்தை பற்கள் வரும் வாய்ப்பு, 75 சதவீதம் வரை அதிகமாகிறது. பல்செட் அணிபவர்களும், வாய் உலர்ந்து போகும் பட்சத்தில், பல்செட் அணிய முடியாமல் அவதிப்படுவர். இதற்கு நோயின் காரணத்திற்கு ஏற்ப, சிகிச்சை செய்ய வேண்டும். அதே சமயம், இந்த அறிகுறிகள் உள்ளவர்கள், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பற்களை, அதிக கவனத்துடன் பராமரிக்க வேண்டும்.

டாக்டர். கண்ணபெருமான், மதுரை.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.