E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பற்களுக்கு இடையே உணவு மாட்டிக் கொள்கிறதே
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 டிச
2012
00:00

* எனக்கு உணவு சாப்பிடும்போது, பற்கள் இடையே உணவுத் துகள்கள் மாட்டிக் கொள்கிறது. அந்த இடத்தில் ஈறுகளில் வீக்கமும், வலியும் வருகிறது. பல்குச்சி அல்லது "பின்' உபயோகப்படுத்தி, அத்துகள்களை அகற்றி வருகிறேன். இதை எவ்வாறு சரிசெய்யலாம்?
பற்களுக்கு இடையில் இயற்கை யிலேயே இடைவெளிகள் இருக்கும். ஆனால் சில நேரங்களில் பல்வரிசை சீராக இல்லையென்றாலோ, பக்கத்துக்கு பற்களின் அமைப்பினாலோ, இந்த இடைவெளி அதிகமாகும். அப் போது உணவு அந்த இடங்களில் மாட்டிக் கொள்ளும். இதனால் கிருமிகள் சேர்ந்து, ஈறுகளில் வலியும், வீக்கமும் ஏற்படும். பல் குச்சி அல்லது பின் பயன்படுத்துவதால், இந்த இடைவெளி அதிகமாகும். கண்டிப்பாக அவற்றை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, "டென்டல் பிளாஸ்' பயன்ப டுத்தலாம். இது நூல் போன்று இருக்கும். இந்த இடைவெ ளிக்கு பிரத்யேகமான பிரஷ்களும் உள்ளன. இவற்றை பயன்படுத்தி அவ்விடங்களை சுத்தம் செய்யலாம். இதிலும் சரியாகவில்லை என்றால், இடைவெளிக்கு பக்கத்தில்
உள்ள பற்களை அடைத்தோ, அதில் கேப் போட்டோ இந்த இடைவெளியை சரிசெய்யலாம்.

* நான் 7 ஆண்டுகளாக கழற்றி மாட்டும் பல் செட் அணிந்துள்ளேன். பல்செட் போடும் இடத்தில் சிகப்பாக உள்ளது. எரிச்சலும் வலியும் உள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும்?
கழற்றி மாட்டும் பல் செட் அணிபவர்களுக்கு பொதுவாக வரும் "டென்ச்சர் ஸ்டோமடைடிஸ்' எனப்படும் நோய் தொற்று இது. இதற்கு காரணம் பல்செட் சரியாக பராமரிக்க ப்படாமல் இருப்பது அல்லது பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இல்லாமல் இருப்பது. இச்சமயங்களில் ஈஸ்ட் எனப்படும் கிருமியால் இவ்வகை சிகப்பு அல்லது தடிப்புகள் வரும். சர்க்கரை நோய் உள்ளவர்கள், புகை பிடிப்பவர்களுக்கும் டென்ச்சர் ஸ்டோமடைடிஸ் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதை தவிர்க்க, பல்செட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இரவில் கழற்றி நீரில் போட்டு வைத்திருக்க வேண்டும். சோப்பு தண்ணீரில் மிருதுவான, பிரஷ் வைத்து சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் உணவு உண்ட பின், வாயை நன்கு கழுவ வேண்டும். பல் டாக்டரின் ஆலோசனையின்படி புதிய பல்செட் செய்யலாம் அல்லது நிலையான பல் கட்டலாம்.

டாக்டர் ஜெ.கண்ணபெருமான், மதுரை.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.