மலச்சிக்கலுக்கு காரணம் மாத்திரைகளா?
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 டிச
2012
00:00

* எஸ்.ராமானுஜம், மதுரை: எனது நண்பரின் வயது 51. மன அழுத்தம் இல்லாதவர். இருந்த போதிலும், அவருக்கு ரத்தஅழுத்தம் அதிகம். இது எப்படி சாத்தியம்?
ரத்தநாளங்களில் ரத்தஅழுத்தம் 140 /90 என்ற அளவிற்கு மேல் இருந்தால், அது உயர்ரத்த அழுத்தம். இது ஒரு வியாதி. இதற்கு மனஅழுத்தம் மட்டுமே காரணமல்ல. இதுதவிர பல்வேறு உடல்ரீதியான காரணங் களும் உள்ளன. மனஅழுத்தம், தூக்கமின்மை, எப்போதும் பதட்டம் உள்ளவருக்கு ரத்தஅழுத்தம் கூடுவதற்கு வாய்ப்பு கள் அதிகம் உள்ளன. எனவே உங்கள்
நண்பர், சரியான உணவுப் பழக்கம், தினசரி நடைப்பயிற்சி, சீராக மருந்து மாத்திரை எடுத்துக் கொள்வது மூலம், ரத்தஅழுத்தத்தின் அளவு 120/80க்கு கீழ் இருக்கும்படி வைத்துக் கொள்ளலாம்.

* பி.வரதராஜன், சிவகாசி: எனக்கு 2 ஆண்டுகளாக ரத்தக்கொ திப்பு உள்ளது. இதற்காக 2 வகை மருந்து எடுத்து வருகிறேன். இம்மருந்து எடுத்த பிறகு கடுமையான மலச்சிக்கல் உள்ளது. நான் என்ன செய்வது?
ரத்தக்கொதிப்பு மருந்து களில் சிலவற்றுக்கு, மலச் சிக்கல் ஒரு பக்க விளைவாக உள்ளது. குறிப்பாக, "அம்லோடிப்பின்' இதர
"கால்சியம் பிளாக்கர்' போன்ற மருந்துகளால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்போது ரத்தக் கொதிப் பிற்கு பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் உள்ளன. எனவே உங்கள் டாக்டரை கலந்து ஆலோ சனை செய்து, இம்மாத்திரையை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். இதுதவிர, தினமும் நிறைய தண்ணீ ர் குடிக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து மிக்க உணவு அவ சியம் எடுத்தாக வேண்டும். அத்துடன் தினமும் நடைப் பயிற்சியும் மேற்கொண் டால், மலச்சிக்கலுக்கு தீர்வு காணலாம்.

* என். மணிவண்ணன், காரைக்குடி: எனக்கு 4 ஆண்டுகளாக "டைலேட்டட் கார்டியோ மையோபதி' என்ற வியாதி உள்ளது. இதற்காக நிறைய மருந்துகள் எடுத்தும், மூச்சுத் திணறல் அதிகரிக்கி றது. நான் என்ன செய்வது?
இருதயம் வீங்கிக் கொண்டு, அதன் பம்பிங் திறன் குறைவைதை, ஈடிடூச்tஞுஞீ இச்ணூஞீடிணி ட்தூணிணீச்tடதூ என் கிறோம். இதனால் ஹார்ட் பெயிலியர் ஏற்படுகிறது. இதற்கு நீங்கள் உட்கொள்ளு ம் தண்ணீர், உப்பு அளவை குறைத்து, ஓய்வு எடுத்துக் கொண்டு, மருந்துகளையும் சரியாக எடுத்தால், ஓரளவு முன்னேற்றம் தெரியும். இதில் வியாதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாவிட்டால், சி.ஆர்.டி., என்ற பேஸ்மேக்கர் வகை சிகிச்சை தற்போது உள்ளது. இதுவும் ஓரளவு பம்பிங் திறனை கூட்ட வாய்ப்புள்ளது. இதிலும் பயனில்லை என்றால், "ஹார்ட் டிரான்ஸ்பிளான்ட்' என்னும் இருதய மாற்று அறுவை சிகிச்சை உள்ளது.

* பி. சந்தானம், ஆண்டிப்பட்டி: எனக்கு "மெடிக்கேட்டட் ஸ்டென்ட்' பொருத்தி 2 மாதங்களா கிறது. தற்போது எனக்கு 2 பற்களை எடுக்க வேண்டும், என பல்டாக்டர் கூறுகிறார். நான் பற்களை எடுக்கலாமா?
மெடிக்கேட்டட் ஸ்டென்ட் பொருத்தி யவர்களுக்கு, ஆஸ்பிரின், குளோபி டோகிரெல் போன்ற மருந்துகள் அத்தி யாவசியமானவை. எக்காரணம் கொண்டும் இம்மருந்துகளை குறைக்க வோ, நிறுத்தவோ கூடாது. ஸ்டென்ட் பொருத்திய முதல் 6 மாதங்களுக்கு பல் பிடுங்குவதை தவிர்ப் பதே சிறந்தது. அதன்பின் உங்கள் இரு தய டாக்டரிடம் ஆலோசனை பெற்று, மேற்கூறிய 2 மாத்திரைகளை சில நாட் கள் நிறுத்திவிட்டு, பற்களை எடுக்க இயலும்.

டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.