E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
நோக்கியா ஆஷா 205, ஆஷா 206 வெளியானது
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 டிச
2012
00:00

இந்திய மொபைல் சந்தையில் நவம்பர் இறுதி வாரத்தில், நோக்கியா நிறுவனம் இரண்டு புதிய மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அவை நோக்கியா ஆஷா 205 மற்றும் நோக்கியா ஆஷா 206. இதுவரை நோக்கியா 201 என்ற மொபைல் போன் தான், நோக்கியாவின் குறைந்த விலை போனாக இருந்து வருகிறது. இந்த இரண்டு போன்களும் அந்த வகையில், அதன் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆஷா வரிசையில் ஏறத்தாழ 10 போன்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு மொபைல் போன்களும் இரண்டு வகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒன்று மற்றும் இரண்டு சிம்களை இயக்கும் வகைகளில் உள்ள இவற்றில், நம் தேவைக்கேற்ற மாடலைத் தேர்ந்தெடுத்து பெறலாம். இரண்டிலும் நோக்கியாவில் சிம்பியன் எஸ் 40 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது.
நோக்கியா ஆஷா 205 போனின் திரை 2.4அங்குல அகலத்தில் QVGA டிஸ்பிளே திறனுடன் உள்ளது. எளிதாக டைப் செய்திட குவெர்ட்டி கீ போர்டு தரப்பட்டுள்ளது. பேஸ்புக் இணைய தளத்தினை நேரடியாகப் பெறத் தனி கீ தரப்பட்டுள்ளது. 0.3 திறன் கொண்ட விஜிஏ கேமரா உள்ளது. இதன் உள் நினைவகம் 64 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். 1000 முகவரிகளை இதில் சேமித்து வைக்கலாம். இதன் பரிமாணம் 113x61x13 மிமீ. எடை 94 கிராம். ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் மூலம் நெட்வொர்க் இணைப்பு தரப்படுகிறது. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ பதிவு செய்திடும் வசதியுடன் உள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில் மற்றும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் இயக்க முடியும். எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர்கள் உள்ளன. தெளிவாக ஒலிக்கும் வகையில் லவுட் ஸ்பீக்கர் உள்ளது. 1020 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. 891 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. 11 மணி நேரம் தொடர்ந்து பேச இயலும்.
ஆஷா 206 மொபைல் போனில், வழக்கமான ஆல்பா நியூமெரிக் கீ போர்ட் தரப்பட்டுள்ளது. தடிமன் குறைவாக வடிவமைக்கப்பட்ட இந்த போனில், 1.3 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதன் மெமரியும் 10 எம்.பி. என்ற அளவில் தரப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் அதிகப்படுத்திக் கொள்ளலாம். இதன் பரிமாணம் 116x49.4x12.4 மிமீ. எடை 91 கிராம். ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் மூலம் நெட்வொர்க் இணைப்பு தரப்படுகிறது. 1100 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது.
நோக்கியாவின் இந்த இரண்டு போன்களில் தான், முதன் முதலாக Slam எனப்படும் தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் போட்டோ, வீடியோ போன்ற மல்ட்டி மீடியா பைல்களை பக்கத்தில் உள்ள போன்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் மாற்றிக் கொள்ளலாம்.
பெற்றுக் கொள்ளும் போனில் இந்த தொழில் நுட்பம் இருக்க வேண்டிய அவசியமில்லை. போன்களையும் இணையாக இருக்கும்படி செட் செய்திடத் தேவை இல்லை. இந்த இரண்டு போன்களிலும் Nokia Xpress Browser, Nokia Nearby, eBuddy instant messaging appஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. இவை இரண்டும் இந்த மாதத்தில், இந்திய நகரங்கள் எங்கும் படிப்படியாக விற்பனைக்கு வெளியாகின்றன. முதலில் ஆஷா 205, அடுத்து 206 கிடைக்கும். பின்னர், இரண்டு சிம் ஆப்ஷனுடன் போன்கள் வெளி வரும். விலை ரூ.3,500 என்ற அளவில் இருக்கும். இந்த இரண்டு போன்களுடனும் 40 கேம்ஸ் இலவசமாக வழங்கப்படுகின்றன.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.