அண்மையில் வெளியான மொபைல் போன்களில், பிளாக்பெரி ரசிகர்கள் விரும்பும் வகையில், குறைந்த விலையில் வெளியாகியுள்ள போன் பிளாக்பெரி 9220 கர்வ். இதில் பிளாக்பெரி ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஓ.எஸ்.7.1 இயங்குகிறது. நான்கு அலைவரிசைகளில் இயங்கும் இந்த போனில், ஜி.எஸ்.எம். மினி சிம் இணைக்க வேண்டும். ஒரு சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் பரிமாணம் 109 x 60 x13 மிமீ. எடை 102 கிராம். பார் டைப் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல, குவெர்ட்டி கீ போர்டு தரப்பட்டுள்ளது. திரை 2.4 அங்குல அகலத்தில் 320x240 பிக்ஸெல்களில் டிஸ்பிளே காட்டுகிறது. லவுட் ஸ்பீக்கர், 3,5 மிமீ ஆடியோ ஜாக் கிடைக்கிறது. ஸ்டோரேஜ் மெமரி 512 எம்.பி., ராம் நினைவகம் 512 எம்.பி. தரப்பட்டுள்ளது. மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். வைபி, A2DP இணைந்த புளுடூத் ஆகிய நெட்வொர்க் வசதிகள் உள்ளன. 2 எம்.பி. திறனுடன் கேமரா, டிஜிட்டல் ஸூம் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் ஆகிய வசதிகளுடன் உள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. எம்பி3 பிளேயர் பல பார்மட்களைக் கையாளுகிறது. டாகுமெண்ட் வியூவர், அலாரம், காலண்டர், கால்குலேட்டர் இயங்குகின்றன. 1450 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டுள்ளது. இதன் மூலம், 7 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். 28 மணி நேரம் பாடல்களைத் தொடர்ந்து கேட்டு ரசிக்கலாம்.
ஒருமுறை சார்ஜ் செய்தால், 432 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. கருப்பு, இளஞ்சிகப்பு, வெள்ளை மற்றும் நல்ல நீலம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் அதிகபட்ச சில்லரை விலை ரூ. 11,039.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.