Advertisement
இந்த வார இணையதளம் - நேஷனல் ஜியாக்ரபிக் தரும் வியத்தகு காட்சிகள்
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

பதிவு செய்த நாள்

03 டிச
2012
00:00

தான் எடுத்துக் காட்டும் போட்டோக்களுக்கு உலக அளவில் புகழ் பெற்ற மீடியா நிறுவனம் நேஷனல் ஜியாக்ரபிக். இதன் இணைய தளத்தில் ஒவ்வொரு மாதமும், பூமிக் கோளத்தில் கிடைக்கும் அபூர்வ காட்சிகளையும், வாழும் மனிதர்களின் அபூர்வ நிலைகளையும் போட்டோக்களாக எடுத்து காட்டுகிறது. இவை ஒவ்வொன்றும் அற்புதமானவை. http://ngm.nationalgeographic.com/visionsofearth/visionsearth2012 என்ற முகவரியில் உள்ள இந்த தளத்தில் நுழைந்தவுடன், போட்டோக்கள் வரிசையாக, ஒரு ஸ்லைட் ÷ஷாவாகாக் காட்டப்படுகின்றன.
ஒவ்வொன்றாகப் பார்க்க அம்புக் குறி வழிகள் தரப்பட்டுள்ளன. இப்படியே ஒவ்வொரு தொகுதியாக நாம் பெற்று பார்க்கலாம். இப்போது பார்த்தால், இந்த மாத தொகுதி தோன்றும். அம்புக் குறிகளைக் கிளிக் செய்து பார்த்தால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்ட போட்டோ தொகுதி வரை கிடைக்கும்.
முந்தைய ஆண்டுகள் காட்டப்பட்ட போட்டோக்கள் பார்க்க விருப்பம் இருந்தால், நேவிகேஷன் ஸ்ட்ரிப்பில் ஆண்டினை அமைத்து கிளிக் செய்தால், அந்த ஆண்டுக்குரிய போட்டோக்கள் கிடைக்கும். இப்படியே 2006 ஆம் ஆண்டு தொடங்கி, இன்றைய மாத தொகுதிகள் வரை நாம் காணலாம். ஒவ்வொரு போட்டோவினையும், ஆஹா! இப்படியா!! என வியப்போடு நம் விழிகளைச் சில கணங்கள் தேக்கி வைக்கலாம். அதுதான் நேஷனல் ஜியோக்ரபிக் நிறுவனத்தின் சிறப்பு.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.