இந்தியா ஒரு சுதந்திர ஜனநாயக நாடு. எனவே இங்கு இணையத்தில் கருத்து தெரிவிக்க, விரும்பியதைத் தேடிப்பெற,சீனாவைப் போல் தடை விதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. உங்கள் கட்டுரை இதற்கான தெளிவைத் தருகிறது.
சி.கண்மணி திருஞானம், சிவகாசி.
லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்குவதில் நாம் பார்க்க வேண்டிய அம்சங்களில், எஸ்.எஸ்.டி. பற்றி நீங்கள் தந்துள்ள நிறை குறை என் சந்தேகத்தை தீர்த்தது. ஆனால், கடைகளில் இந்த டிஸ்க் கொண்ட லேப் டாப் கிடைக்கவில்லை.
ஆ. முகேஷ், சென்னை.
எம்.எஸ். ஆபீஸ் மற்றும் விண்டோஸ் 7 ஷார்ட்கட் கீ தொகுப்புகள் உதவியாய் உள்ளன. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.
க. பாலாஜி மோகன், திருமயம்.
சிம் கார்ட் பெறுவதில் உள்ள வரையறைகளை இன்னும் கடுமையாக்கினால் தான், அநாவசிய தொல்லைகளுக்கு முடிவு ஏற்படும். அதே போல வர்த்தக ரீதியான அழைப்புகளையும் தடை செய்திட வேண்டும்.
சி. பரமானந்தம், விருதுநகர்.
லேப்டாப்பில் மின்சக்தி காட்டும் ஐகானை, நீங்கள் காட்டிய வழியில் செட் செய்து பெற்றேன். வழி காட்டியமைக்கு நன்றி.
என்.கார்த்திகா, திருப்பூர்.
எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் ட்ரான்ஸ்பரண்ட் கலர் அமைப்பது குறித்த டிப்ஸ் மிக அருமை. இப்போது அதே போல் தான் வண்ணங்களை அமைக்கிறேன். நன்றி.
கே. சுந்தர் பாலாஜி, தாம்பரம்.
கம்ப்யூட்டர் உலகின் ஜாம்பவான்களை (சினோப்ஸ்கி போல) அடையாளம் தெரிந்து கொள்ளும் வகையில், அவர்களின் போட்டோக்களை, நீங்கள் மட்டுமே வெளியிட்டு வருகிறீர்கள். எதனையும் முழுமையாகச் செய்வதில் தினமலர் மட்டுமே முதல் இடத்தில் உள்ளது. பாராட்டுக்களும் நன்றியும்.
எஸ். லதா மோகன், புதுச்சேரி.
பைல்களை சேமித்து வைக்க, பகிர்ந்து கொள்ள ட்ராப் பாக்ஸ் அருமையான சேவையினைத் தருகிறது. இதுவரை எந்த பிரச்னையையும் நான் பெற்றதில்லை. பத்து கோடி பேர் இதனைப் பயன்படுத்துகின்றனர் என்பது இதன் சிறப்பிற்குச் சான்று.
கா.கண்ணப்பன், காரைக்குடி.
விண்டோஸ் எக்ஸ்பியுடன் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 குறித்த தகவல், புதிய ஓ.எஸ். மற்றும் பிரவுசருக்குப் போகச் சொல்லி தூண்டுதலாய் உள்ளது. அடுத்த கம்ப்யூட்டர் வாங்கினால், அது விண்8 + இ.எ.10 இணைந்ததாகத்தான் வாங்க வேண்டும்.
டி.வசந்த், காரைக்கால்.
கேள்வி பதில் பகுதியில் தந்துள்ள தகவல் படி கிராபிக் கால்குலேட்டரைப் பயன்படுத்தினேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தகவலுக்கு நன்றி. கேள்வி கேட்டு பதிலை வரவழைத்தவருக்கும் நன்றி.
எஸ்.அரவிந்த் குமார், மேலூர்.
லேப்டாப் அடிப்படைகளில், அவற்றின் திரைகள் குறித்தும் தகவல் தரவும். பல கடைகளில் ஸ்கிரீன் மிகச் சிறப்பானது என்று கூறுகிறார்கள். புரியவில்லை.
என்.ஆர்.கிருஷ்ணன், தாம்பரம்.
ஆப்பிள் நிறுவனம் தன் போன்களின் விலையைக் குறைத்தால் ஒழிய, இந்தியாவில் தனி இடத்தைப் பெற முடியாது. எத்தனை ஐபோன்கள் வந்தாலும், விற்பனை குறைவாகவே இருக்கும்.
ஜே.ஆர். ஸ்ரீராம்,(ஆப்பிள் தாசன்), சென்னை.
கூடுதல் வசதிகளுடன் விலை குறைந்த போன்களை வழங்குவதை நோக்கியா நிறுவனம் தற்போது வழக்கமாகக் கொண்டுள்ளது. இதனை மற்ற நிறுவனங்களும் பின்பற்றினால், இந்தியாவில் இடம் பெறலாம்.
சி.என். கோடீஸ்வரன், சிவகாசி.
புதிய தொகுப்புகள், ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவற்றுக்கான ஷார்ட் கட் கீ பட்டியலை ஒவ்வொரு வாரமும் தரவும். இது எங்களுக்குப் பல வகைகளில் உதவியாய் உள்ளது. ஒன்றிரண்டு என நிறுத்திக் கொள்ள வேண்டாம்.
ஆ. சிவராஜன், கோவை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.